search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி விலை குறைவு"

    • வெளி மார்க்கெட்டில் கிலோ தக்காளி ரூ.40 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 12 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, கரகூர், பெல்ரம்பட்டி, திருமல்வாடி மற்றும் காரிமங்கலம், பென்னாகரம், நல்லம்பள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.

    இங்கு சாகுபடி செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள் பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, ஜிட்டாண்டஹள்ளி, ராயக்கோட்டையில் செயல்பட்டு வரும் தக்காளி மண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த சந்தையில் இருந்து ஈரோடு, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பருவ மழை மற்றும் புயல் சின்னம் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து கடந்த சில மாதங்களாக சந்தையில் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக சந்தைக்கு தக்காளிகள் வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் 22 வரை ஒரே நிலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    தற்பொழுது தக்காளி அதிக வரத்தால் சட்டென விலை குறைந்துள்ளது . 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனை மற்றும் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 12 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்பட்டது.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது, தக்காளி பயிரானது அனைத்து சீதோசன காலங்களிலும் விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் அதிகபடியாக சாகுபடி செய்து வருகின்றனர்.

    என்னுடைய விவசாய நிலத்தில் 2 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்துள்ளேன். ஒரு ஏக்கருக்கு குறைந்தது பயிர் வைத்து அறுவடை செய்யும் வரை ரூ.65 ஆயிரம் செலவாகிறது. இரண்டு ஏக்கருக்கு ஒரு லட்சத்து ரூ.30 ஆயிரம் இதுவரை செலவு செய்துள்ளேன்.

    வாரத்திற்கு ஒரு முறை என மாதத்தில் 4 நாட்கள் கூலி ஆட்களை வைத்து தக்காளி பறிக்கப்படுகிறது. ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.500 கூலி கொடுக்கப்படுகிறது. தங்களிடத்தில் வியாபாரிகள் 15 கிலோ கூடை தக்காளி ரூ.225 முதல் 250 வரை வாங்கி செல்கின்றனர்.

    வெளி மார்க்கெட்டில் தக்காளி கூடை ரூ. 350 விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் வெளி மார்க்கெட்டில் கிலோ தக்காளி ரூ.40 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளான தங்களிடத்தில் குறைந்த விலைக்கு இடைதரகர்கள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    விவசாயிகள் விளையகூடிய விலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யக்கூடிய கட்டுப்பாட்டு நிலையங்கள் இல்லாததால் இடைத்தரகர்கள் அதிகப்படியான லாபத்தை ஈட்டி வருகின்றனர். விவசாயிகளாகிய தாங்கள் நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம்.

    அறுவடை ஆட்களின் கூலி, வாகன வாடகை, சுங்க கட்டணம் என ஒரு கூடைக்கு ரூ.50 வரை செலவு ஆவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனக்கூறினார்.

    மேலும் பாலக்கோடு பகுதியில் உள்ள தக்காளி குளிரூட்டும் மையத்தை விவசாயிகள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.

    தக்காளியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொரு ட்கள் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி களுக்கென விலை நிர்ணய கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்விகை விடுத்துள்ளனர்.

    • இன்று காலை மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.20 வரை விலை குறைந்து விற்பனையானது.
    • இதனால் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, கரகூர், பெல்ரம்பட்டி, திருமல்வாடி மற்றும் காரிமங்கலம், பென்னாகரம், நல்லம்பள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 150 -க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.

    இங்கு சாகுபடி செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள் பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, ஜிட்டாண்டஹள்ளி, ஐந்து மைல்கள், மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் செயல்பட்டு வரும் தக்காளி சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த சந்தையில் இருந்து ஈரோடு, தேனி, திண்டுக்கல் கோயம்புத்தூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தக்காளிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பருவ மழை மற்றும் புயல் சின்னம் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து கடந்த சில மாதங்களாக சந்தையில் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக சந்தைக்கு தக்காளிகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    அதன்படி இன்று காலை மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.20 வரை விலை குறைந்து விற்பனையானது. 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.270 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனை மற்றும் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ×