search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை குறைவு
    X

    மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல விவசாயிகள் தக்காளியை பெட்டிகளில் அடுக்கும் போது எடுத்த படம்.

    விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை குறைவு

    • இன்று காலை மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.20 வரை விலை குறைந்து விற்பனையானது.
    • இதனால் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, கரகூர், பெல்ரம்பட்டி, திருமல்வாடி மற்றும் காரிமங்கலம், பென்னாகரம், நல்லம்பள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 150 -க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.

    இங்கு சாகுபடி செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள் பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, ஜிட்டாண்டஹள்ளி, ஐந்து மைல்கள், மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் செயல்பட்டு வரும் தக்காளி சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த சந்தையில் இருந்து ஈரோடு, தேனி, திண்டுக்கல் கோயம்புத்தூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தக்காளிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பருவ மழை மற்றும் புயல் சின்னம் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து கடந்த சில மாதங்களாக சந்தையில் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக சந்தைக்கு தக்காளிகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    அதன்படி இன்று காலை மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.20 வரை விலை குறைந்து விற்பனையானது. 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.270 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனை மற்றும் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×