என் மலர்
ஈரோடு
- ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது.
- மாவட்ட த்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாவ ட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளி யிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்ப ட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சையில் இருந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 980 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 20 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்ட த்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இதையடுத்து மாவ ட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- பெருந்துறை திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்து கொள்ளப்படுகிறது.
ஈரோடு
பெருந்துறை திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இதனால் பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த திங்களுர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம் பட்டி, சுப்பையன் பாளையம், தாண்டா கவுண்டண்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம்,
தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன் பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன்பாளையம், நெசவாளர்காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், ஊ.ஆ.பாளையம், எல்லப்பாளையம், கோமையன்வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டிதோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்து கொள்ளப்படுகிறது.
- தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டி கிணத்து மேட்டிற்கு மோட்டார் போட சென்ற விவசாயியை பாம்பு கடித்தது.
- இந்த சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த காமராஜ் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (47). விவசாயி. சண்முகசுந்தரம் சம்பவத்தன்று சிறுவன்காட்டுவலசு பகுதியில் உள்ள தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டி கிணத்து மேட்டிற்கு மோட்டார் போட சென்றார்.
அப்போது அந்த பகுதியில் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.
இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபாளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வருகின்றனர்.
- குப்பைகளை சேகரிக்க ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் 2 பேட்டரி வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கி தொடங்கி வைத்தார்.
அந்தியூர்:
அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபாளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் கழிவுகளை மறுசுழற்சி செய்து தார்சாலை போட பயன்படுத்துவதற்காக அனுப்பி வைக்கின்றனர்.
இந்த பணியாளர்கள் தள்ளு வண்டி மூலமாக சென்று வரும் பொழுது மிகுந்த காலதாமதமும், பணியாளர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனை களையும் விதமாக 14 மற்றும் 15-வது நிதிக் குழு மானியம் திட மற்றும் திரவ கழிவு திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் 2 பேட்டரி வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கி தொடங்கி வைத்தார்.
இதில் சங்கராபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி ஊராட்சி செயலாளர் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வைத்தீஸ்வரன், முன்னாள் கிளைச் செயலாளர் கவின் மற்றும் கவுன்சிலர்கள் அலுவலகப் பணியாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 905 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,672 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 905 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 வாரத்துக்கு மேலாக தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.
- நாளை முதல் பொது இடங்களில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.
ஈரோடு:
தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தாக்கம் கடந்த 2 வாரமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதார துறையினர் மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளனர்.
இன்று முதல் பொது இடங்களில் வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 வாரத்துக்கு மேலாக தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.
இந்நிலையில் இன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி பள்ளி மாணவ- மாணவிகள், மற்றும் என்.சி.சி.மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி ஈரோடு ஜி.எச்.ரவுண்டானாவில் தொடங்கியது. மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகம், டவுன் டி.என். பி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணி மீனாட்சி சுந்தரனார் சாலை, பன்னீர்செல்வம் பார்க், கச்சேரி வீதி வழியாக தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது
இதைத்தொடர்ந்து முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இன்று முதல் நாள் என்பதால் முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
நாளை முதல் பொது இடங்களில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுக்கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து குடிமகன்கள் மனு கொடுக்க வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது
- எங்களால் இதுவரை எந்த ஒரு பிரச்சினையும் இந்த பகுதியில் ஏற்பட்டதில்லை.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி ஜெயகோபால் வீதியைச் சேர்ந்த மது பிரியர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் பல வருடமாக ஜெயகோபால் வீதியில் வசித்து வருகிறோம். இங்கு மது கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரம் குடும்பங்கள் வசிக்கிறோம். நாங்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளிகள் தான். நாங்கள் இங்கு உள்ள மதுக்கடையில் தான் மது அருந்து வருகிறோம்.
எங்களால் இதுவரை எந்த ஒரு பிரச்சினையும் இந்த பகுதியில் ஏற்பட்டதில்லை. இந்நிலையில் ஒரு சிலர் இந்த மதுக்கடையை அகற்ற முயற்சி செய்து வருகிறார்கள். அவ்வாறு இங்கு இருக்கும் மது கடையை அகற்றினால் நாங்கள் மது குடிக்க பல கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் எங்கள் நிலையை கருத்தில் கொண்டு தொடர்ந்து இங்கேயே மதுக்கடை இயங்க அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
மதுக்கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து குடிமகன்கள் மனு கொடுக்க வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
- அந்தியூர் பேரூராட்சியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது மற்றும் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- இப்பேரணியானது அந்தியூர், பர்கூர் சாலை, பஸ் நிலையம், அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர் வீதி வழியாக மீண்டும் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் வந்து நிறைவடைந்தது.
அந்தியூர்:
அந்தியூர் பேரூராட்சியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது மற்றும் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ், துணைத்தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் பேரணி கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
இப்பேரணியானது அந்தியூர், பர்கூர் சாலை, பஸ் நிலையம், அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர் வீதி வழியாக மீண்டும் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் வந்து நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, சாந்து முகமது, கவுன்சிலர்கள், அலுவலகப்பணியாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் த.பா.கோவிந்தராஜ், அல்ட்ரா தொண்டு நிறுவனர் தண்டாயு தபாணி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுகூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.
- கூட்டத்தில் விரைவாக அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, புதிய கிளைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
கோபி, ஜூன். 27-
ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுகூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்திற்கு த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர், த.மு.மு.க. மாநில பொருளாளர் கோவை சாதிக், பவானி முகம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் விரைவாக அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, புதிய கிளைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் மகளிர் அணி நிர்வாகங்களை பலப்படுத்துவது, போதை எதிர்ப்பு பிரச்சாரங்கள் அதிகமாக செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம் ராஜா, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் செய்யது கரீம் பயாஸ், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஜிபுர் ரகுமான், மாவட்ட பொரு ளாளர் ஆடிட்டர் அன்வர், மாவட்ட தலைவர் ஹக்கீம், துணைச் செயலாளர் சிராஜ்தீன், குதுபுதீன், ஆசி புல்லா, அணி நிர்வாகி சாகுல் அமீது பாட்ஷா, மாவட்ட ஊடக அணி பொறுப்பாளர் நிஜாமுதீன், மற்றும் ஜியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் த.மு.மு.க. கோபி நகர செயலாளர் ஆடிட்டர் சம்சுதீன் நன்றி கூறினார்.
- வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, மான், செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
- அடுத்த 2 நாட்கள் மாமிச உண்ணிகளையும் கணக்கெடுத்து சென்னை வனத்துறை தலைமை அதிகாரிக்கு அனுப்ப உள்ளனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், விளாமுண்டி, பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, கெட்டவாடி, கேர்மாளம், தலமலை, கடம்பூர், டி.என்.பாளையம் என 10 வனசரகங்கள் உள்ளன.
இந்த வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, மான், செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வனசரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி வருகின்ற 2-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.
இதில் முதல் 2 நாட்கள் நேர்கோட்டு பாதையிலும், அடுத்த 2 நாட்கள் தாவர உண்ணிகளையும், அடுத்த 2 நாட்கள் மாமிச உண்ணிகளையும் கணக்கெடுத்து சென்னை வனத்துறை தலைமை அதிகாரிக்கு அனுப்ப உள்ளனர்.
இதன் முதல் பகுதியாக இன்று காலை சத்தியமங்கலம் வன சரகத்தில் உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) யோகேஷ் குலால் தலைமையில் வனவர் தீபக்குமார் உள்ளிட்ட துப்பாக்கி ஏந்திய 6 பேர் கொண்ட குழு ரேடார் காம்பஸ், ஜி.பி.எஸ். கருவி போன்ற நவீன உபகரணங்களை கொண்டு பண்ணாரில் இருந்து தொடங்கி வன விலங்குகளை கணக்கெடுத்து வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றும் 607 போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று ஈரோடு வேளாளர் கல்லூரியில் நடந்தது.
- தேர்வுக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
தமிழகத்தில் காவல்துறையில் புதிதாக 444 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் மகளிர் கல்லூரி, கொங்கு, நந்தா என்ஜினீயரிங் கல்லூரி என 3 மையங்களில் நடந்தது.
பொதுவாக விண்ண ப்பித்தி ருந்தவர்களுக்கு நேற்று காலை எழுத்து தேர்வு நடந்தது. இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றும் 607 போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று ஈரோடு வேளாளர் கல்லூரியில் நடந்தது.
இதற்காக போலீசார் காலை 8 மணி முதலே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினர். தேர்வு மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பார்வையிட்டார்.
தேர்வு எழுத வருபவ ர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. செல்போன், டிஜிட்டல் வாட்ச் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. செல்போன் கொண்டு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் செல்போன் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
அதேபோல் அவர்களின் ஹால் டிக்கெட், ஆதார் கார்டு நகல் சரிபார்க்கப்பட்டு பின்னர் அவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வை வீடியோ மூலம் பதிவு செய்து கொண்டனர்.
தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணியளவில் நிறைவடைந்தது. தேர்வுக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கோபிசெட்டிபாளையம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கூகலூர் சர்க்கரைபாளையம் பழனி தெருவை சேர்ந்தவர் ஜோதி (70).
இவர் கடந்த 2 வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டு வந்தார். சம்பவத்தன்று இரவு ஜோதி தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






