என் மலர்
ஈரோடு
- பவானி திருவள்ளுவர் நகர் பகுதிைய சேர்ந்த சிங்காரவேலு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
- போலீ சார் கைது செய்து அவரிடம் இருந்து 12 குவாட்டர் மது பாட்டில்களை பவானி போலீசார் பறிமுதல் செய்தனர்.
பவானி:
பவானி குட்ட முனிய ப்பன் கோவில், கூத்தம்பட்டி பகுதியில் பவானி சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த ஒரு திருமண மண்டபத்தின் அருகில் உள்ள மறைவான இடத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர் பவானி, திருவள்ளுவர் நகர் பகுதிைய சேர்ந்த சிங்காரவேலு (45) என்பதும் அரசு அனுமதி இன்றி அதிக விலைக்கு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சிங்காரவேலுவை போலீ சார் கைது செய்து அவரிடம் இருந்து 12 குவாட்டர் மது பாட்டில்களை பவானி போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், பவானி அருகில் உள்ள எலமலை கிராமம், குள்ளம்பாறை பகுதியில் சித்தோடு போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது குள்ளம் பாறை பகுதியில் மறைவான இடத்தில் அரசு அனுமதி இன்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த கந்தசாமி (73) என்பவரை சித்தோடு போலீசார் கைது செய்து 7 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- பவானியில் இருந்து அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று காடையாம்பட்டி ஏரி அருகில் சென்று கொண்டிருந்தபோது முனியப்பன் ஒட்டி வந்த மொபட் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
- இச்சம்பம் தொடர்பாக பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
பவானி:
பவானி அருகே உள்ள செலம்பகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (58) விவசாயி. சம்பவத்தன்று இரவு முனியப்பன் தனது மொபட்டில் பால் கேன் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் பவானியில் இருந்து அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று காடையாம்பட்டி ஏரி அருகில் சென்று கொண்டிருந்தபோது முனியப்பன் ஒட்டி வந்த மொபட் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த முனியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியில் முனியப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இச்சம்பம் தொடர்பாக பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
- சம்பவத்தன்று மலையம்பாளையத்தில் சம்மந்தி விருந்து நடந்ததால் பழனிச்சாமியும் அவர் மனைவி செல்வியும் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.
- பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் கம்பிளியம் பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 51). இவரது மனைவி செல்வி. இவர் விஜயமங்கலம் பகுதியில் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.
கடந்த வாரம் தனது மகள் நந்தினிக்கு திருமணம் முடித்து மாப்பிள்ளை வீடான மலையம் பாளைய த்திற்கு சென்று விட்டார்.
சம்பவத்தன்று மலையம்பாளையத்தில் சம்மந்தி விருந்து நடந்ததால் பழனிச்சாமியும் அவர் மனைவி செல்வியும் வீட்டை பூட்டிவிட்டு மலையம்பாளையம் சென்று விட்டனர்.
பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.
இதனையடுத்து சம்பவம் குறித்து பழனிச்சாமி பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- சத்தியமங்கலம் அருகே ஒரு தனியார் திருமண மண்படத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அப்போது அங்கு 30 பேர் கும்பலாக சூதாடுவது தெரியவந்தது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே ஒரு தனியார் திருமண மண்படத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது சத்தியமங்கலம் அடுத்த ராஜன் நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சிலர் சூதாடுவது தெரியவந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு 30 பேர் கும்பலாக சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த ரு. 2 லட்சத்து 18 ஆயிரம் பணம் மற்றும் 5 சொகுசுகார்கள், 5 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நில உரிமையாளர்கள் பலரிடமிருந்து புதுக்கரை புதூர் பகுதியை சேர்ந்த சில விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
- நெல் அறுவடை செய்து கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்லும் போது அவர்கள் கொண்டு சென்ற நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாக கூறப்படு கிறது.
கோபி:
கோபிசெட்டி பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்தின் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலைங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசன பகுதிகளில் தற்போது முதல்போக சாகு படிக்கான அறுவடை பணி கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக நெல்கொள்முதல் நிலை யங்கள் அமைக்கப்பட்டு விவசாகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது நெல்கொள் முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் வியா பாரிகளின் நெல்லை தடுக்கும் விதமாக நெல்கொள்முதல் நிலையங்களில் நில உரிமை யாளர்களின் ஆவணங்கள் மட்டுமே பெறப்பட்டு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகையை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில் நில உரிமையாளர்கள் பலரிடமிருந்து புதுக்கரை புதூர் பகுதியை சேர்ந்த சில விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது நெல் அறுவடை செய்து கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்லும் போது அவர்கள் கொண்டு சென்ற நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாக கூறப்படு கிறது.
இந்த நிலையில் இன்று காலை விவசாயிகள் கோபி செட்டிபாளையம்- அந்தியூர் ரோட்டில் குவிந்தனர்.
இதை தொடர்ந்து இந்த செயலை கண்டித்து விவ சாயிகள் மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபி செட்டிபாளையம்- அந்தியூர் ரோட்டில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.
தகவல் கிடைத்ததும் கோபிசெட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் யானை தந்தங்கள் வெட்டி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அப்போது ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை மட்டைக்குள் பதுக்கி வைத்திருந்த 3 தந்தங்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் யானை தந்தங்கள் வெட்டி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க அந்தியூர் சிறப்புதனிப்பிரிவு போலீசார் முருகன், தேவராஜ், சென்னிமலை, சசிகுமார் , பிரபுகுமார் மற்றும் சென்னையை சேர்ந்த 4 பேர் உள்பட 9 பேர்கொண்ட தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார்.
இவர்கள் கடந்தசில நாட்களுக்கு முன்பு 4 தந்தங்களை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று அந்தியூர் போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட சந்திய பாளையம் பள்ளம் என்ற இடம் அருகே சோதனை நடத்தினர்.
அப்போது ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை மட்டைக்குள் பதுக்கி வைத்திருந்த 3 தந்தங்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அந்தியூர் அருகே உள்ள புதுக்காட்டை சேர்ந்த வரதராஜ் (47), சந்திபாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி (40), பழைய வளையபாளையம் கரும்பாறை பகுதியை சேர்ந்த பிரபுகுமார் (37), வாணிப்புத்துர் பகுதியை சேர்ந்த மாரசாமி (50), கிருஷ்ணகிரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (33), திருப்பூர் கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (33), ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான 3 பேரை தேடிவருகிறார்கள்.
இதேபோல் பர்கூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பெரியூர் பகுதியில் மாதேவன் (37) என்பவரது வீட்டில்இருந்து ஒரு தந்தத்தையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட 6 பேரையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தனிப்படைபோலீசார் யானை தந்தங்களை தேடி வருகின்றனர்.
- கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.
- மக்காத கழிவுகளான பிளாஸ்டிக் பேப்பர் போன்றவற்றில் மறு சுழற்சிக்கு உதவாதவற்றை மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.
இதில் 12 டன் மக்கும் கழிவுகளை எந்திரத்தில் அரைத்து, தொட்டிகளில் நிரப்பப்பட்டு 40 நாட்கள் மக்கிய பிறகு அவற்றை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
மக்காத கழிவுகளான பிளாஸ்டிக் பேப்பர் போன்றவற்றில் மறு சுழற்சிக்கு உதவாதவற்றை மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது வரையிலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இருந்து 2580 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- காலிங்கராயன்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் முத்தம்மாள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
- வீட்டு பீரோ திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முத்தம்மாள் பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை-பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பவானி:
ஈரோடு காலிங்கராயன்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் முத்தம்மாள் (82). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்த ன்று காலை ஓட்டலில் சாப்பாடு வாங்கி கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து கீழே 100 ரூபாய் நோட்டுகள் விழுந்து விட்டதாக கூறி முத்தம்மாளிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த பெண் முத்தம்மாளிடம் நான் உங்களுடன் வீட்டுக்கு வந்து உதவி செய்கிறேன் என்று கூறி வந்துள்ளார். பின்னர் வீட்டு வேலைகளை செய்வது போல் அந்த பெண் பாசாங்கு செய்தார். இதனையடுத்து நைசாக வீட்டு பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை, ரூ .60 ஆயிரம் ரொக்க பணத்தையும் திருடி சென்று விட்டார்.
வீட்டு பீரோ திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முத்தம்மாள் பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை-பணம் திருடு போயிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் வீட்டில் வேலைக்கு இருந்த பெண் மாயமானதும் தெரிய வந்தது.
இதுகுறித்து முத்தம்மாள் சித்தோடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வருகின்றனர். இந்த நூதன திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எதிர்பாராதவிதமாக மாணவர் பொன்வெற்றி தமிழ் மீது டிராக்டர் மோதியது. இதில் மாணவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
- டிராக்டரின் பின்சக்கரம் மாணவர் மீது ஏறி இறங்கியது.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பொன்கதிரேசன். தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர் வெள்ளக்கோவில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு பொன் வெற்றி தமிழ் (10), பொன் கவின் தமிழ் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர். பொன் வெற்றி தமிழ் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பும், பொன்கவின் தமிழ் ஒன்றாம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய பொன் வெற்றி தமிழ் வெங்கமேடு-நாகம நாயக்கன் பாளையம் செல்லும் சாலையில் சைக்கிள்ஓட்டி கொண்டு இருந்தார்.
அப்போது அந்தவழியாக சங்கர் என்பவர் டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவர் பொன்வெற்றி தமிழ் மீது டிராக்டர் மோதியது. இதில் மாணவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது டிராக்டரின் பின்சக்கரம் மாணவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர் பொன் வெற்றி தமிழ் உடல்நசுங்கி பலியானார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிஓடிய டிராக்டர் டிரைவர் சங்கரை தேடி வருகிறார்கள்.
- மலைபாதையில் இரவு நேரத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால் காலையில் செல்ல பண்ணாரியம்மன் கோவில் அருகே சீனிவாசன் லாரியை நிறுத்தினார்.
- ஏராளமான லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.
சத்தியமங்கலம்:
கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (40) லாரி டிரைவர். இவர் கோவை மாவட்டம் சூலூருக்கு லோடு ஏற்றிக்கொண்டு சென்றார்.
அங்கு லோடு இறங்கி விட்டு மீண்டும் நேற்று இரவு 11 மணியளவில் சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் அருகே வந்தார். அப்போது இரவு நேரத்தில் மலைபாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால் காலையில் செல்ல பண்ணாரியம்மன் கோவில் அருகே லாரியை நிறுத்தினார்.
இதே போல் ஏராளமான லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது நள்ளிரவு 12 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை பண்ணாரியம்மன் கோவில் பகுதிக்கு வந்தது.
அப்போது அந்த ஒற்றை யானை வாகனங்களை நோக்கி வந்தது. அப்போது சீனிவாசன் மற்றும் டிரைவர்கள் யானையை விரட்டினர். மேலும் வனத்துறையினரும் பட்டாசு வெடித்து யானையை விரட்ட முயன்றனர்.
இந்த நிலையில் அந்த யானை திடீரென விரட்டியவர்களை நோக்கி ஓடி வந்தது. அப்போது அனைவரும் யானையிடம் இருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது சீனிவாசனும் தப்பி ஓடினார். அந்த நேரத்தில் திடீரென கீழே இருந்த கல் தடுக்கி அவர் கீழே விழுந்தார்.
இதையடுத்து சீனிவாசனை யானை மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அனைவரது கண் முன்பே அவர் துடிதுடித்து பலியானார். பின்னர் சத்தம் போட்டும், பட்டாசு வெடித்தும் யானையை விரட்டினர்.
பின்னர் யானை தாக்கி பலியான சீனிவாசன் உடலை சத்தியமங்கலம் போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- பங்களாப்புதூர் போலீசார் கொங்கர்பாளையம் குமரன் கோவில் மலையடிவாரத்தில் வாகன சோதனையில் ஈடு பட்டனர்.
- அப்போது ஒரு வாலிபர் மொபட்டில் வந்தார். போலீசார் அவரை நிறுத்தி விசாரித்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே உள்ள மாதையன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 44). இவர் சம்பவ த்தன்று டி.என்.பாளையம் அண்ணா சிலை பகுதியில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரோடு அனுமன் நகருக்கு நண்பரின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு மொபட்டில் சென்றார்.
இதையடுத்து அவர் அந்த பகுதியில் ரோட்டோரம் மொபட்டை நிறுத்தி விட்டு நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்து பார்த்தார். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மொபட் காணாமல் போனது.
மொபட் குறித்து அக்கம்பக்கம் விசாரித்தும், தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. இதை யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து ரவி பங்க ளாப்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பங்களாப்புதூர் போலீசார் கொங்கர்பாளையம் குமரன் கோவில் மலையடிவாரத்தில் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது ஒரு வாலிபர் மொபட்டில் வந்தார். போலீசார் அவரை நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில் அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீ சார் தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர்.
இதில் அவர் கொங்கர்பாளையம் சாவடி வீதியை சேர்ந்த சுபாஷ் (22) என்பதும், ரவியின் மொபட்டை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து பங்களா ப்புதூர் போலீசார் சுபாஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- புஞ்சை புளியம்பட்டி அடுத்த காராப்பாடி கிராமத்தில் 71 அடி உயர நவ காளியம்மன் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
- இக்கோவிலின் திருப்பணிகள் விரைவில் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த காராப்பாடி கிராம த்தில் 71 அடி உயர நவ காளியம்மன் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இக்கோவிலில் அருள்வாக்கு, குடும்ப பிரச்சனை, தொழில் முன்னேற்றம், மாந்திரீகம், நட்சத்திரங்களுக்கு பரிகாரம், காலபைரவர் வாராகியம்மன், ஆதி கருப்பண்ணசுவாமி போன்ற தெய்வங்கள் மற்றும் கரூர் சித்தரின் அருள் பெற்ற அய்யாகண்ணு சாமி அருள்வாக்கு கூறி வருகிறார்.
தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் 71 அடி உயரத்தில் நவகாளியம்மன் உருவச்சிலை காராப்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இக்கோவிலின் திருப்பணிகள் விரைவில் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.






