search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto Driver house"

    • சம்பவத்தன்று மலையம்பாளையத்தில் சம்மந்தி விருந்து நடந்ததால் பழனிச்சாமியும் அவர் மனைவி செல்வியும் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.
    • பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் கம்பிளியம் பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 51). இவரது மனைவி செல்வி. இவர் விஜயமங்கலம் பகுதியில் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.

    கடந்த வாரம் தனது மகள் நந்தினிக்கு திருமணம் முடித்து மாப்பிள்ளை வீடான மலையம் பாளைய த்திற்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று மலையம்பாளையத்தில் சம்மந்தி விருந்து நடந்ததால் பழனிச்சாமியும் அவர் மனைவி செல்வியும் வீட்டை பூட்டிவிட்டு மலையம்பாளையம் சென்று விட்டனர்.

    பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

    இதனையடுத்து சம்பவம் குறித்து பழனிச்சாமி பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    அஞ்சுகிராமம் அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
    அஞ்சுகிராமம்:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் மிக்கேல் அந்தோணி சேவியர் (வயது 44). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.

    நேற்று முன்தினம் மாலை மிக்கேல் அந்தோணி சேவியர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார்.

    பின்னர், திருவிழா முடிந்து இரவு வீடு திரும்பினார்கள். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3½ பவுன் நகை மற்றும் ரூ.26 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மிக்கேல் அந்தோணி சேவியர் குடும்பத்தினருடன் திருவிழாவுக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து மிக்கேல் அந்தோணிசேவியர் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார். 
    ×