என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் சாலை மறியல்
    X

    விவசாயிகள் சாலை மறியல்

    • நில உரிமையாளர்கள் பலரிடமிருந்து புதுக்கரை புதூர் பகுதியை சேர்ந்த சில விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
    • நெல் அறுவடை செய்து கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்லும் போது அவர்கள் கொண்டு சென்ற நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாக கூறப்படு கிறது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்தின் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலைங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசன பகுதிகளில் தற்போது முதல்போக சாகு படிக்கான அறுவடை பணி கள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக நெல்கொள்முதல் நிலை யங்கள் அமைக்கப்பட்டு விவசாகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது நெல்கொள் முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் வியா பாரிகளின் நெல்லை தடுக்கும் விதமாக நெல்கொள்முதல் நிலையங்களில் நில உரிமை யாளர்களின் ஆவணங்கள் மட்டுமே பெறப்பட்டு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகையை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த நிலையில் நில உரிமையாளர்கள் பலரிடமிருந்து புதுக்கரை புதூர் பகுதியை சேர்ந்த சில விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

    தற்போது நெல் அறுவடை செய்து கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்லும் போது அவர்கள் கொண்டு சென்ற நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாக கூறப்படு கிறது.

    இந்த நிலையில் இன்று காலை விவசாயிகள் கோபி செட்டிபாளையம்- அந்தியூர் ரோட்டில் குவிந்தனர்.

    இதை தொடர்ந்து இந்த செயலை கண்டித்து விவ சாயிகள் மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபி செட்டிபாளையம்- அந்தியூர் ரோட்டில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    தகவல் கிடைத்ததும் கோபிசெட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×