search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "giant"

    • புஞ்சை புளியம்பட்டி அடுத்த காராப்பாடி கிராமத்தில் 71 அடி உயர நவ காளியம்மன் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இக்கோவிலின் திருப்பணிகள் விரைவில் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த காராப்பாடி கிராம த்தில் 71 அடி உயர நவ காளியம்மன் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இக்கோவிலில் அருள்வாக்கு, குடும்ப பிரச்சனை, தொழில் முன்னேற்றம், மாந்திரீகம், நட்சத்திரங்களுக்கு பரிகாரம், காலபைரவர் வாராகியம்மன், ஆதி கருப்பண்ணசுவாமி போன்ற தெய்வங்கள் மற்றும் கரூர் சித்தரின் அருள் பெற்ற அய்யாகண்ணு சாமி அருள்வாக்கு கூறி வருகிறார்.

    தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் 71 அடி உயரத்தில் நவகாளியம்மன் உருவச்சிலை காராப்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    இக்கோவிலின் திருப்பணிகள் விரைவில் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    • முக்குறுணி விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.
    • வீடுகள், பொதுஇடங்களிலும் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    மதுரை

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொது இடங்களில் கொண்டாடப்படவில்லை. அந்த சமயத்தில் வீடுகளில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி னர்.

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் பங்கேற்புடன் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை உற்சாகத்துடன் கொண்டாட பொதுமக்கள் சிறிது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கினர். மதுரை மாட்டுத்தாவணி மற்றும் மார்க்கெட்டுகளில் விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடந்தது.

    சதுர்த்தி பூஜையின் முக்கிய அங்கமான அரு கம்புல், எருக்கம் மாலைகள், வண்ண வண்ண மலர்கள் விற்பனையும் அதிக அளவில் இருந்தது. மார்க்கெட்டு களில் பொது மக்களும் திரண்டு பூஜைக்கு தேவையான வாழைக்கன்று, அவல், பொரி, ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம், பேரிக்காய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்களையும் ஆர்வத்துடன் வாங்கினர்.

    இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது 18 படி அரிசியில் தயாரிக்கப்பட்ட ராட்சத கொழுக்கட்டையை சுமந்து வந்து விநாயகருக்கு படையல் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனர்.

    மதுரையில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வீடுகளிலும் பொது மக்கள் உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறார்கள். விநாயகர் சிலைகளை பூஜை அறையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். முக்கிய இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள், இந்து அமைப்புகள் வைத்து வழிபாடு நடத்துகிறார்கள். விநாயகர் சதுர்த்தியை யொட்டி மதுரையின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் பலப் படுத்தப்பட்டு இருந்தது.

    விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பதற்கு தேவையான முன்னேற்பாட்டு நட வடிக்கைகளிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான நீர்நிலை கள் பற்றிய விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுஇடங்களில் விநாய கர் சிலைகள் வைக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ராட்சத தேன்கூடு கட்டுவதும், தீயணைப்புத் துறையினா் அவற்றை அகற்றுவதும் வாடிக்கையாகி உள்ளது.
    • இந்த கட்டடத்தின் வலது புற பகுதியில், அறையின் வெளிப்பகுதியில் தேன்கூடு ஒன்று உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் 4 தளங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

    இங்கு கலெக்டர் அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அறை கூட்டுறவுத்துறை, ஊரகவளர்ச்சி துறை உள்பட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த கட்டடத்தின் வலது புற பகுதியில், மாவட்ட வழங்கல் அலுவலர் அறையின் வெளிப்பகுதியில் தேன்கூடு ஒன்று உள்ளது. ஏற்கெனவே இரு முறை அந்தப் பகுதியில் தேன்கூடு இருந்த நிலையில் திடீர், திடீரென தேனீக்கள் கலைந்து கலெக்டர் அலுவலக ஊழியர்களையும், பொதுமக்களையும் கடுமையாக தாக்கின.

    ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட பகுதியிலேயே தேன்கூடு கட்டுவதும், தீயணைப்புத் துறையினா் அவற்றை அகற்றுவதும் வாடிக்கையாகி உள்ளது. தற்போது மீண்டும் தேன்கூடு உருவாகி உள்ளது.

    பொதுமக்களை தேனீக்கள் தாக்குவதற்கு முன் தீயணைப்புத் துறையினர் மூலம் தேன்கூட்டை அகற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

    ×