தனியார் திருமண மண்டபத்தில் சூதாடிய 30 பேர் சிக்கினர்

சத்தியமங்கலம் அருகே ஒரு தனியார் திருமண மண்படத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அப்போது அங்கு 30 பேர் கும்பலாக சூதாடுவது தெரியவந்தது.
தனியார் திருமண மண்டபத்தில் சூதாடிய 30 பேர் சிக்கினர்
Published on

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அருகே ஒரு தனியார் திருமண மண்படத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது சத்தியமங்கலம் அடுத்த ராஜன் நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சிலர் சூதாடுவது தெரியவந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு 30 பேர் கும்பலாக சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த ரு. 2 லட்சத்து 18 ஆயிரம் பணம் மற்றும் 5 சொகுசுகார்கள், 5 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com