11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு

கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.மக்காத கழிவுகளான பிளாஸ்டிக் பேப்பர் போன்றவற்றில் மறு சுழற்சிக்கு உதவாதவற்றை மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.

இதில் 12 டன் மக்கும் கழிவுகளை எந்திரத்தில் அரைத்து, தொட்டிகளில் நிரப்பப்பட்டு 40 நாட்கள் மக்கிய பிறகு அவற்றை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

மக்காத கழிவுகளான பிளாஸ்டிக் பேப்பர் போன்றவற்றில் மறு சுழற்சிக்கு உதவாதவற்றை மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது வரையிலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இருந்து 2580 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com