என் மலர்
ஈரோடு
- தாமரைக்கரை ஒட்டியுள்ள துரனாம் பாளையம் பகுதியில் ஊருக்குள் வலம் வந்த ஒற்றை யானை தாமரைக்கரை குளம் பகுதியில் தண்ணீர் குடித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றது.
- இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பகுதியில் யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றது. குறிப்பாக யானை அதிகவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் தாமரைக்கரை ஒட்டியுள்ள துரனாம் பாளையம் பகுதியில் ஊருக்குள் வலம் வந்த ஒற்றை யானை தாமரைக்கரை குளம் பகுதியில் தண்ணீர் குடித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- குளியல் அறைக்கு சென்ற சிறுமி மெஹருண்கதுன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது தம்பி பிரோஜ் அன்சாரி குளியல் அறை கதவை தட்டியுள்ளார்.
- கதவு திறக்கப்படாததால் கதவின் மேலே ஏறி பார்த்தபோது மெஹருண்கதுன் தனது சால்வையால் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருந்தார்.
பெருந்துறை:
ஜார்கண்ட் மாநிலம் சுந்தர்படை மாவட்டம் சாந்தனா பகுதியை சேர்ந்தவர் ராம்ஜன் மியான். இவர் தனது மனைவி தமீனா பிவி, மகள் மெஹருண்கதுன் (வயது 13), மகன் பிரோஜ்அன்சாரி ஆகியோருடன் கடந்த 5 வருடமாக பெருந்துறை கோவை மெயின் ரோடு, கடப்பம்படை பகுதியில் குடியிருந்து வருகிறார்.
கணவன், மனைவி இருவரும் பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மாவு கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். மகளும், மகனும் வீட்டில் தனியே இருந்துள்ளனர்.
இந்நிலையில் மாலை குளியல் அறைக்கு சென்ற சிறுமி மெஹருண்கதுன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது தம்பி பிரோஜ் அன்சாரி குளியல் அறை கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால் கதவின் மேலே ஏறி பார்த்தபோது மெஹருண்கதுன் தனது சால்வையால் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனடியாக பிரோஜ் அன்சாரி பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கணவன்-மனைவி வீட்டிற்கு வந்து தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்த தனது மகளை கீழே இறக்கி பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
கடந்த 4 நாட்களாக மெஹருண்கதுன் வயிற்று வலி ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வயிற்று வலியின் காரண–மாக தூக்கு மாட்டி இறந்து விட்டதாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- வழக்கு விசாரணைக்கு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் கோர்ட்டில் ஆஜராகமல் இருந்து வந்தார்.
- இதையடுத்து நீதிபதி தயாநிதி, இன்ஸ்பெக்டர் சோமசுந்ரம் கோர்ட்டில் ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்தார்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள சுண்டப் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 84). விவசாயி. இவருக்கும் அவரது மகன்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது வந்தது. இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி பழனிசாமி வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினர். இதில் அவரது பேரன் உள்பட சிலர் சொத்துக்காக பழனி சாமியை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது 17 வயது பேரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை கோபி செட்டிபாளையம் 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரு கிறது.
இந்த வழக்கின் விசார ணை அதிகாரியாக அப்போதைய கோபிசெட்டி பாளையம் போலீஸ் இன்ஸ் இன்ஸ்பெக்டர் சோம சுந்தரம் இருந்து வந்தார். சோமசுந்தரம் தற்போது ஈரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு சோம சுந்தரம் கோர்ட்டில் ஆஜரா கமல் இருந்து வந்தார். இதையடுத்து நேற்று மீண்டும் இது குறித்து வழக்கு விசாரணை கோபி செட்டிபாளையம் கோர்ட்டில் நடந்தது. ஆனால் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆஜராகமல் இருந்தார்.
இதையடுத்து நீதிபதி தயாநிதி, இன்ஸ்பெக்டர் சோமசுந்ரம் கோர்ட்டில் ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்தார்.
- நல்லிபாளையம் பிரிவு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- இதனையடுத்து போலீசார் தாண்டானை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பவானி:
பவானி பழனிபுரம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் பவானி-அந்தியூர் மெயின் ரோடு நல்லிபாளையம் பிரிவு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து பவானி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அங்கு இருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது பவானி மாரியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் தாண்டான் (46) என்பதும் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் தாண்டானை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- சம்பவத்தன்று ஸ்ரீ தேவி வீட்டுக்கு சென்றபோது வீட்டில் தாமோதரன் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
- இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி கிராமடை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ தேவி (45). இவரது கணவர் தாமோதரன் (47). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
தாமோதரன் ஈரோடு நகரில் உள்ள கண்ணகி வீதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு தலையில் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மனைவி ஸ்ரீதேவி கடையை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று உணவருந்த ஸ்ரீ தேவி வீட்டுக்கு சென்றபோது வீட்டின் படுக்கை அறையில் பேன் மாட்டும் கொக்கியில் தாமோதரன் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் ஸ்ரீதேவி அவரை மீட்டு அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தாமோதரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை சோளிபாளையம் பகுதியில் 205 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது.
- இந்த குளத்தில் ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் இருந்து கொண்டே இருப்பதால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்து வருகிறது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை சோளிபாளையம் பகுதியில் 205 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட குளூர் ஊராட்சியில் ஒரு பகுதியும், அவல்பூந்துறை பேரூராட்சியில் ஒரு பகுதியும் என மொத்தம் 205 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது.
இந்த குளத்திற்கு எல்.பி.பி. வாய்க்காலில் இருந்து வரும் கசிவு நீர் வடிந்து குளத்திற்கு தண்ணீர் வருகிறது. இந்த குளத்தைச் சுற்றி ஒரு பகுதியில் கருவேலம் மரங்களும், மற்றொரு பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளது.
இந்த குளத்தில் ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் இருந்து கொண்டே இருப்பதால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்து வருகிறது. அதேபோல் விவசாய கிணறுகள், ஆழ்துழாய் கிணறு போன்றவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை.
மேலும் அவல்பூந்துறை குளத்திற்கு அருகில் வெள்ளோடு பறவைகள் சரணாயம் உள்ளதால் அங்கிருந்து பல்வேறு வகையான பறவைகள் இந்த குளத்திற்கு வந்து சென்று உணவுகளை தின்றுவிட்டு செல்கிறது .
இந்நிலையில் அவல்பூந்துறை குளத்தை படகு இல்லம் அமைப்பதற்காக சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் கடந்த 2013–-2014-ம் ஆண்டு ஒரு கோடியே 72 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து படகு இல்லம் அமைப்பதற்காக குளத்தை தூர் வாரி ஆழப்படுத்தி சமன் படுத்தும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் ஆங்காங்கே தண்ணீர் இருந்ததால் சமன் செய்யும் பணி காலதாமதம் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து தண்ணீர் வற்றியதையடுத்து மீண்டும் குளத்தை ஆழப்படுத்தி சமன்செய்யும் பணி நடைபெற்றது.
மேலும் படகு இல்லத்திற்கு தேவையான பூங்கா, பார்வையாளர்கள் அமர்வதற்கு செட், மேல்நிலை குடிநீர் தொட்டி, பார்வையாளர்கள் நின்று பார்ப்பதற்கான மேடைகள், ஆண், பெண் என தனித்தனியாக கழிப்பறைகள் மற்றும் அவல்பூந்துறை மெயின் ரோட்டில் படகு இல்லம் என்ற ஆர்ச் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மெயின்ரோட்டில் இருந்து படகு இல்லம் வரை கான்கிரீட் சாலை, ஏற்காட்டில் இருந்து இரண்டு படகு என படகு இல்லத்திற்கு தேவையான அனைத்தும் ஏற்பாடும் செய்யப்பட்டது.
ஆனால் குளத்தை முழுமையாக ஆழப்படுத்தாமலும், சமன்படுத்தாமலும் இருந்ததால் படகு இல்லத்தை திறந்து வைத்தும் இதுவரை படகு இல்லம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் இருந்து வருகிறது.
இதனால் படகு இல்லத்தில் உள்ள பூங்கா, பார்வையாளர்கள் செட் போன்றவைகள் புதர் மண்டி கிடக்கிறது.
இதுகுறித்து மொடக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் கணபதி கூறியதாவது:
அவல்பூந்துறை குளம் முழுவதும் மொடக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு பகுதி குளூர் ஊராட்சியிலும் மற்றொரு பகுதி அவல்பூந்துறை பேரூராட்சியிலும் உள்ளது. கடந்த 2013–-2014-ம் ஆண்டு குளத்தில் படகு இல்லம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளத்தை தூர் வாரி ஆழப்படுத்தி சமன் செய்யும் பணி நடைபெற்று வந்தது.
ஆனால் குளத்திற்கு வரும் தண்ணீர் அதிகரித்ததால் வேலை செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் படகு இல்லத்தை திறந்து வைத்தும் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியவில்லை. குளத்தில் தண்ணீர் வற்றினால் மட்டுமே மீண்டும் சமன்படுத்தி படகு இல்லத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியும் என தெரிவித்தார்.
- ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
- இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் வரும் 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்ப–டுகிறது. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுப்படுகின்றனர்.
70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. பொது–மக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது.
இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.
- பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் முன்பாக பவானி கிளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பவானி கிளை சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பவானி:
பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் முன்பாக பவானி கிளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவானி மகளிர் அணி தலைவி புவனா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி கண்டன உரையாற்றினார்.
ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் 3 நாட்களுக்கு மேலான அனைத்து விடுப்பு களையும் விதிமுறைகளுக்கு மாறாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற நிர்பந்திப்பது. குறை வான கூலிக்கு வேலை வாங்கிவிட்டு ஒரே உத்தரவில் 8 முழு சுகாதார திட்ட ஒருங்கிணை ப்பாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பவானி கிளை சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் பவானி கிராம உதவியாளர்கள் சங்கம் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் பணியாளர்கள் ஒருநாள் தற்செயல் விருப்பு எடுத்து தங்களின் கோரி க்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பவானி பழைய பஸ் நிலையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
- இந்த பாலத்தில் பவானியில் இருந்து நுழையும் போது ரோட்டின் நடுவே சிறிய பள்ளம் ஒன்று காணப்படுகிறது.
பவானி:
பவானியில் இருந்து ஈரோடு செல்லும் வகையில் பவானி பழைய பஸ் நிலையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த பாலத்தின் வழியாக தினசரி மோட்டார் சைக்கிள், கார், வேன், பஸ், லாரி உட்பட கனரக வாகனங்கள் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நடைபெற்ற வண்ணம் இருக்கும்.
இந்த பாலத்தில் பவானியில் இருந்து நுழையும் போது ரோட்டின் நடுவே சிறிய பள்ளம் ஒன்று காணப்படுகிறது. இதனால் பகல் நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சுதாரித்து கொள்ளும் நிலையில், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக அப்பகுதியில் உள்ள பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை பகுதியில் உள்ள குத்தியாலத்தூர், கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
- போலீசார் விவசாயி மாதனுக்கு கஞ்சா விதை கிடைத்தது எப்படி என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
தமிழகம் முழுவதும் குட்கா, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை பகுதியில் உள்ள குத்தியாலத்தூர், கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கேர்மாளத்தை அடுத்துள்ள அத்தியூர் பகுதியை சேர்ந்த மாதன் (77) தனது விவசாய நிலத்துக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சோளப் பயிர்களுக்கு இடையே கஞ்சா செடிகள் பயிரிட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு பயிரிடப்பட்டிருந்த 496 கஞ்சா செடிகளை கைப்பற்றி அழித்தனர். மேலும் இதுதொடர்பாக கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த மாதனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீசார் விவசாயி மாதனுக்கு கஞ்சா விதை கிடைத்தது எப்படி என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள பல்வேறு தோட்டங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
- கோவையில் பா.ஜனதா அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர்.
- கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு:
கோவையில் பா.ஜனதா அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். மேலும் பொள்ளாச்சியிலும் பல்வேறு இடங்களில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. மேலும் பா.ஜனதா பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் நிரப்பிய பைகளை மர்ம கும்பல் வீசி சென்றது.
இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பா.ஜனதா, இந்து முன்னணி அலுவலகங்கள், பா.ஜனதா தலைவர்கள் வீடுகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் கோவில், சர்ச், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் முன்பும் தலைவர்கள் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க்கில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் சிலைகள் உள்ளன. இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் காளை மாட்டு சிலை பகுதி, ஈரோடு ஜி.எச். ரவுண்டானா, மேட்டூர் ரோடு, பஸ் நிலையம், வீரப்பன் சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அண்ணா - பெரியார் நினைவகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன், ஈஸ்வரன் கோவில், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு காய்கறி மார்க்கெட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேப்போல் இந்து முன்னணி அலுவலகம், பச்சப்பாளையம் ரோட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகம், கொங்கம்பாளையத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் வீடு, இந்து முன்னணியின் மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம், மேற்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் ஆகியோர் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் மசூதிகள், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், கோபி பச்சைமலை பவளமலை கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பாஜக அலுவலகங்கள், இந்து முன்னணி அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சத்தியமங்கலத்தில் மணிக்கூண்டு பகுதி பஸ் நிலையம், தலைவர் சிலைகள் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அந்தியூர், பெருந்துறை, பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் நுரையுடன் கூடிய சாயக்கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கழிவை வெளியேற்றும் ஆலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு பகுதியில் பி.பி. அக்ரஹாரம், கங்காபுரம், சூரம்பட்டி வலசு, வெட்டுக்காட்டு வலசு, வீரப்பன்சத்திரம் உள்பட பல்வேறு இடங்களில் சாய சலவை, ப்ளீச்சிங் ஆலைகள் என நூற்றுக்கணக்கான ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் சில ஆலைகள் கழிவு நீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் நீர்நிலைகளில் திறந்து விடுகின்றன. இதனால் நீர் நிலைகளில் மாசு ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் காவிரி ஆற்றில் மாசு ஏற்பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்தனர்
இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீரை நீர் நிலைகளில் திறந்து விடும் ஆலைகளை கண்டறிந்து அந்த ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக காவிரியில் அதிகமாக தண்ணீர் சென்றதால் சாயக்கழிவு நீரை வெளியேற்றுவது வெளியே தெரியாமல் இருந்தது.
தற்போது மழைப்பொழிவு இல்லாததால் சாய சலவை பிரிண்டிங் மற்றும் தோல் ஆலைகளின் கழிவு நீரை இரவு, பகல் என இல்லாமல் வெளியேற்றி வருகின்றனர். இதனால் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் நுரையுடன் கூடிய சாயக்கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதுபோன்று கழிவை வெளியேற்றும் ஆலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






