என் மலர்
நீங்கள் தேடியது "Northern girl"
- சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த 3 பெண்கள் கைது.
- குழந்தைகளையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
தாம்பரம்:
சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் செல்லும் மின்சார ரெயில்களில் பிச்சை எடுக்கும் பல பெண்களை காணலாம். அவர்கள் பெரும்பாலும் வடமாநில பெண்களாக இருப்பார்கள். கையில் கைக் குழந்தை ஒன்றை வைத்து இருப்பார்கள்.
அந்த குழந்தைகள் சரியான உணவு, பராமரிப்பு இல்லாமல் பரிதாபமாக இருக்கும். அதேபோல் அந்த பெண்களும் இளம் வயதினராக இருப்பார்கள்.
அவர்களும் சரியான உணவு கிடைக்காமல் கந்தலான உடையில் பார்க்க பரிதாபமாக இருப்பார்கள். இந்த மாதிரி வரும் பெண்கள் ஓடும் ரெயில்கள், மக்கள் கூடும் இடங்கள், சிக்னல்களில் நின்று பொதுமக்களிடம் 'அய்யா பசிக்குதுய்யா.... ஏதாவது குடுங்கய்யா...' என்று கையேந்துவார்கள்.
அவர்களின் நிலைமையை பார்த்து இரக்க மனம் கொண்ட பலர் பணம் கொடுத்து உதவுகிறார்கள். இந்த மாதிரி நடமாடும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த மாதிரி பிச்சை எடுத்து வரும் பெண்களை தாம்பரம் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் கண்காணித்து சிலரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் வைத்து இருந்தது அவர்களின் குழந்தைகள் அல்ல என்பதும் அவர்கள் திருடிய குழந்தைகள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த 3 பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்தது குழந்தைகளையும் பறிமுதல் செய்தார்கள்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டு செங்கல்பட்டு நலவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. முகாம்களில் இருக்கும் குழந்தைகளை மீட்க எந்த பெண்ணும் ஆர்வம் காட்டவில்லை.
இதன் மூலம் அவர்கள் பெற்றெடுக்காத குழந்தைகள் என்பது மேலும் உறுதி செய்யப்பட்டது. குழந்தைகள் அனைத்தும் பச்சிளம் குழந்தைகள் என்பதால் அவர்களால் எந்த தகவலும் சொல்ல முடியவில்லை. அவர்களின் பெற்றோர் யார் என்பதை கண்டு பிடிக்கவும் முடியவில்லை.
இதையடுத்து போலீசார் பொதுமக்களை உஷார்படுத்தி இருக்கிறார்கள். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த மாதிரி பிச்சை எடுக்கும் பெண்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
மேலும் இந்த மாதிரி குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பெண்களை ரெயில்களிலோ, பொது இடங்களிலோ பார்க்க நேர்ந்தால் உடனடியாக போலீஸ் உதவி எண். 139-ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.
- குளியல் அறைக்கு சென்ற சிறுமி மெஹருண்கதுன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது தம்பி பிரோஜ் அன்சாரி குளியல் அறை கதவை தட்டியுள்ளார்.
- கதவு திறக்கப்படாததால் கதவின் மேலே ஏறி பார்த்தபோது மெஹருண்கதுன் தனது சால்வையால் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருந்தார்.
பெருந்துறை:
ஜார்கண்ட் மாநிலம் சுந்தர்படை மாவட்டம் சாந்தனா பகுதியை சேர்ந்தவர் ராம்ஜன் மியான். இவர் தனது மனைவி தமீனா பிவி, மகள் மெஹருண்கதுன் (வயது 13), மகன் பிரோஜ்அன்சாரி ஆகியோருடன் கடந்த 5 வருடமாக பெருந்துறை கோவை மெயின் ரோடு, கடப்பம்படை பகுதியில் குடியிருந்து வருகிறார்.
கணவன், மனைவி இருவரும் பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மாவு கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். மகளும், மகனும் வீட்டில் தனியே இருந்துள்ளனர்.
இந்நிலையில் மாலை குளியல் அறைக்கு சென்ற சிறுமி மெஹருண்கதுன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது தம்பி பிரோஜ் அன்சாரி குளியல் அறை கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால் கதவின் மேலே ஏறி பார்த்தபோது மெஹருண்கதுன் தனது சால்வையால் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனடியாக பிரோஜ் அன்சாரி பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கணவன்-மனைவி வீட்டிற்கு வந்து தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்த தனது மகளை கீழே இறக்கி பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
கடந்த 4 நாட்களாக மெஹருண்கதுன் வயிற்று வலி ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வயிற்று வலியின் காரண–மாக தூக்கு மாட்டி இறந்து விட்டதாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.






