குளத்தில் தண்ணீர் குடிக்கும் ஒற்றை யானை

தாமரைக்கரை ஒட்டியுள்ள துரனாம் பாளையம் பகுதியில் ஊருக்குள் வலம் வந்த ஒற்றை யானை தாமரைக்கரை குளம் பகுதியில் தண்ணீர் குடித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றது.இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
குளத்தில் தண்ணீர் குடிக்கும் ஒற்றை யானை
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பகுதியில் யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றது. குறிப்பாக யானை அதிகவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் தாமரைக்கரை ஒட்டியுள்ள துரனாம் பாளையம் பகுதியில் ஊருக்குள் வலம் வந்த ஒற்றை யானை தாமரைக்கரை குளம் பகுதியில் தண்ணீர் குடித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com