என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் நுரையுடன் சாயக்கழிவு நீர் வெளியேற்றம்
    X
    ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் நுரையுடன் சாயக்கழிவு வெளியேறிய காட்சி.

    ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் நுரையுடன் சாயக்கழிவு நீர் வெளியேற்றம்

    • பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் நுரையுடன் கூடிய சாயக்கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • கழிவை வெளியேற்றும் ஆலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் பி.பி. அக்ரஹாரம், கங்காபுரம், சூரம்பட்டி வலசு, வெட்டுக்காட்டு வலசு, வீரப்பன்சத்திரம் உள்பட பல்வேறு இடங்களில் சாய சலவை, ப்ளீச்சிங் ஆலைகள் என நூற்றுக்கணக்கான ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் சில ஆலைகள் கழிவு நீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் நீர்நிலைகளில் திறந்து விடுகின்றன. இதனால் நீர் நிலைகளில் மாசு ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் காவிரி ஆற்றில் மாசு ஏற்பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்தனர்

    இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீரை நீர் நிலைகளில் திறந்து விடும் ஆலைகளை கண்டறிந்து அந்த ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக காவிரியில் அதிகமாக தண்ணீர் சென்றதால் சாயக்கழிவு நீரை வெளியேற்றுவது வெளியே தெரியாமல் இருந்தது.

    தற்போது மழைப்பொழிவு இல்லாததால் சாய சலவை பிரிண்டிங் மற்றும் தோல் ஆலைகளின் கழிவு நீரை இரவு, பகல் என இல்லாமல் வெளியேற்றி வருகின்றனர். இதனால் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் நுரையுடன் கூடிய சாயக்கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதுபோன்று கழிவை வெளியேற்றும் ஆலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×