என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கம்பங்கள் நடும் விழா நடந்தது.
    • பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவி ல்களான சின்ன மாரி யம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்க ளில் இந்த ஆண்டுக்கான குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த 21-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து நேற்று இரவு 3 கோவில்களிலும் கம்பங்கள் நடும் விழா நடந்தது. இரவு 8.30 மணிக்கு பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    இதைத்தொடர்ந்து காரை வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் கம்பங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அந்தந்த கோவில்களில் வந்தடைந்தது.

    முதல் கம்பம் பெரிய மாரியம்மன் கோவிலும், 2-வது கம்பம் சின்ன மாரியம்மன் கோவிலும், 3-வது கம்பம் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும் நடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இரவு முதலே பெரிய மாரியம்மன் கோவிலில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையில் நின்று கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்ட சென்றனர்.

    அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை முதல் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு சென்றனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆய்வு மேற்கொண்டார்.
    • 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதை யொட்டி தினமும் அம்மனு க்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது.

    விழாவையொட்டி பண்ணாரியம்மன் சப்பரம் திருவீதி உலா தொடங்கி சத்தியமங்கலத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்க ளில் நடந்து வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

    இதனையடுத்து குண்டம் விழா வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அதிகாலை நடக்கிறது. இந்த நிலையில் குண்டம் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிர ண்டு சசிமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:

    பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் தமிழகம், கர்நாடக பக்தர்கள் சுமார் 4 லட்சம் பேர் பங்கறேர்பார்கள். இதனால் இந்தாண்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    குண்டம் இறங்கும் பக்தர்க ளுக்கு தனி வழியும், சாமி தரிசனம் செய்யும் பக்தர்களு க்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக 15 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க ப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    குண்டம் திருவிழாவை யொட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • பக்தர்கள் விறகுகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    அந்தியூர் பத்ரகாளி யம்மன் கோவில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது.

    இதையொட்டி தினமும் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குண்டம் விழா அடுத்த மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதனைத் தொடர்ந்து 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 4 நாட்கள் தேர் திரு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    இந்நிலையில் கோவி லுக்கு வரும் பக்தர்கள் குண்டம் திருவிழாவிற்காக நேர்த்திக்கடனாக விறகுகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். பக்தர்கள் வழங்கும் விறகுகள் குண்டம் தயார் செய்யும் இடத்தில் குவிந்து வருகிறது.

    நேர்த்திக்கடன் செலு த்தும் விறகுகள், ஒரு கட்டு 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து பக்தர்கள் விறகுகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    • அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
    • இது வரை ரூ.1624.69 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்திற்குட்பட்ட எம்மாம்பூண்டியில் அமைந்துள்ள அத்திக்கடவு-அவிநாசிதிட்ட 5-ம் நீரேற்று நிலையத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

    விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு- அவிநாசிதிட்டமானது பவானி ஆற்றில் காளிங்க ராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தில் இருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்று முறையில்

    நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில்

    32 பொதுப்பணி த்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 குளங்க ளுக்கு நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்ப ட்டுள்ளது.

    மேலும் தற்போது 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணை மற்றும் ஆறு நீர் உந்து நிலையங்களுக்கான பவானி, நல்லக் கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன் பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய இடங்களில் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது.

    மேலும் ஆழ்குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கு முடி வடைந்துள்ளது. (மொத்த நீளம் 267.5 கி.மீ) மற்றும் எம்.டி.பி.இ. குழாய்கள் பதிக்கும் பணிகள் தற்போத துரிதமாக நடைபெற்று வருகிறது.

    தற்சமயம் சுமார் 797.11 கி.மீ. அளவு எம்.டி.பி.இ. குழாய் (மொத்த நீளம் 797.8 கி.மீ) பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு ள்ளன.

    மின்மாற்றிகள், ஏவுபம்பு கள், மின்மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர்உந்து நிலைய ங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.

    மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பூமிக்கடியில் மின்சார தொடரமைப்புகள் பதிக்கும் பணி 100 சதவீதம் முடிவுற்று ள்ளது. மேலும் நிலம் பயன்பாட்டு உரிமை பெறும் பணி 100 சதவீதம் முடிவுற்று ள்ளது.

    இது தொடர்பாக நடைபெற்ற நீர்வளத்துறை உயர்மட்டக் கூட்டத்தின் நிகழ்வு குறிப்பு அறிக்கை தலைமைச் செயலாளர் ஒப்புதல் அளிக்கப்பட்டு திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    குளம், குட்டைகளில் ஓ.எம்.எஸ். கருவி பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்சமயம் சுமார் 1044 எண்கள் பொருத்தப்பட்டுள்ளது (மொத்தம் - 1045 எண்கள்). இத்திட்டத்திற்கு இது வரை ரூ.1624.69 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் 20-ந் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை 6 நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதானக் குழாய்களில்106.80 கி.மீ நீளத்திற்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நீரேற்று நிலைய ங்களிற்கு இடையிலுள்ள கிளைக்குழாய் மற்றும் 1045 குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஓ.எம்.எஸ். கருவிகளில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

    மேலும் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சரியான முறையில் செல்கிறதா? என்பது குறித்து ஆய்வுப்பணிகள் அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அனைத்து பணிகளும் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர தொடர்புடைய அலுவலர்கள் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி எம்மாம்பூ ண்டியில் அமைந்துள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்ட 5-ம் நீரேற்று நிலையத்திலிருந்து சோதனை ஓட்டமாக அருகில் உள்ள குளத்திற்கு நீர் செல்வதையும் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    இந்நிகழ்வின் போது நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் மன்மதன் (பெருந்துறை), நரேந்திரன் (அவிநாசி), நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், குழந்தைகள் முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    தொடர்ந்து காலை 8 மணிக்கு வெயிலின் தாக்கம் தொடங்கி மாலை 6 மணி வரை நீடித்து வருகிறது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வீடுகளிலும் புழுக்கம் நிலவுவதால் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது. மதிய நேரங்களில் முடிந்த அளவு பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    மேலும் வியாபாரம், தொழிலுக்கு செல்பவர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கரும்பு பால், இளநீர், மோர், குளிர்பானங்கள், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

    இதனால் பழங்கள், குளிர்பானங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. சாலையில் ஆங்காங்கே இளநீர் கடை, கரும்பு பால் கடைகள் புதிதாக தோன்றி உள்ளன.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 101.01 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

    அனல் காற்றுடன் வெயில் பதிவாகி உள்ளதால் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பெரும்பாலான நீர் நிலைகளை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    குறிப்பாக கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையில் வார விடுமுறையான நேற்றும், இன்றும் மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதேபோல் காளிங்கராயன் வாய்க்கால் கீழ்பவானி வாய்க்கால் போன்றவற்றுக்கும் மக்கள் செல்ல தொடங்கி உள்ளனர்.

    மேலும் மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது. அப்போது வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என மக்கள் அச்சப்பட தொடங்கி உள்ளனர்.

    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பட்டு வளர்ப்பு விவசாயிகள் 14 பேருக்கு உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அனைத்து திருமண நிதி உதவித்திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகின்றது.

    இத்திட்டங்களின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    விழாவிற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 335 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நிதி உதவியும்,

    335 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 49 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான தங்கமும், புதுமை பெண் நிதியுதவி பெறும் திட்டத்தின் கீழ் 2169 மாணவிகளுக்கு ரூ.43 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மொத்தம் ரூ.3 கோடியே 52 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2504 பயனாளிகளுக்கு வழங்கினார்.

    இதேபோல் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறந்த பட்டு வளர்ப்பு விவசாயிகள் 14 பேருக்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கணேச மூர்த்தி எம்.பி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
    • இதில் பணம், தங்கம், வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் இருந்தும், அண்டை மாவட்டத்தில் இருந்தும் வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி மற்றும் பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 5 மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் நந்தினீஸ்வரி முன்னி–லையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு தனியார் கல்லூரி மாணவி களை கொண்டு காணிக்கை எண்ணப்பட்டது.

    இதில் ரூ.11,29,147 பணம், 135 கிராம் தங்கம், 205 கிராம் வெள்ளி உள்ளிட்டவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பவானி கூடுதுறை சங்க மேஸ்வரர் ஆலய உதவி ஆணையர் சாமிநாதன், அறநிலை யத்துறை ஆய்வாளர் நித்யா, கோவில் பணியாளர்கள் செந்தில், தணிகாச லம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆழ்துளை கிணறுகளை பராமரித்திடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான ஆண்டுத் தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட 15 கிராம ஊராட்சி களில் செயல்படு த்தப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டம், 15-வது நிதிக்குழு மான்ய திட்டம்,

    சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுநிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும்

    பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளி ட்ட திட்டங்களின் கோப்பு கள் மற்றும் அலுவலக நடைமுறை மற்றும் பகிர்மானம் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அலுவலக பதிவறை மற்றும் கணினி பிரிவில் ஆய்வு மேற்கொண்டு நிலுவைக் கோப்புகளை உடனடியாக முடித்திடவும் மற்றும் தற்போது கோடை காலம் தொடங்கி யுள்ளதால் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்தி டும் வகையில் ஆழ்துளை கிணறுகளை முழுமையாக பராமரித்திடு மாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை சுற்றியுள்ள சுற்றுப்புற ங்களை தூய்மை யாக வைத்திருக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீசன், நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெருமாள், சுபா, உட்படதுறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்த னர்.

    • 20 நிறுவனங்களில் ஆய்வு செய்து முரண்பாடு கண்டறியப்பட்டது.
    • விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    ஈரோடு:

    ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞான சம்பந்தம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சட்டமுறை எடையளவு சட்டம், பொட்டல பொருட்கள் விதிகள் தொடர்பாக இம்மாதம் முழுவதும் சிறப்பாய்வு செய்தனர்.

    மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல் கடைகள், நிறுவனங்கள் என 20 நிறுவனங்களில் ஆய்வு செய்து 8 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது.

    காய்கறி கடை, பழக்கடை, விற்பனை கூடங்கள், சந்தை போன்றவற்றில் 25 கடை களில் ஆய்வு செய்ததில் 4 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

    பொட்டல பொருட்கள் விதிப்படி வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் 1 கடை, எலக்ட்ரி க்கல், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் 30 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 3 இடங்களிலும், பழக்கடை, காய்கறி கடைகள் என 17 இடங்களில் நடந்த ஆய்வில் 1 கடையில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

    இதனையடுத்து எடை யளவு சட்டம், பொட்டல பொருட்கள் விதிகளை பின்பற்றாத நிறுவன ங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழி லாளர் உதவி ஆணையர் திருஞான சம்பந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சதீஷ்குமார் தூக்குமாட்டி தற்கொலை செய்து தொங்கி கொண்டு இருந்தார்.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சத்தியமங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவருடைய மனைவி சந்தியா (29). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை.

    சதீஷ்குமார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராஜன் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். மேலும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையிலும் பணியாற்றி வந்தார்.

    இதையடுத்து கணவன்- மனைவியும் சத்தியமங்கலம் கோம்பு பள்ளத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கு குழந்தை இல்லையே என சதீஷ்குமார் மன வேதனை அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனது உறவினர்களிடம் கூறி வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய மனைவி வெளியூர் சென்று விட்டார். இதனால் சதீஷ்குமார் மட்டும் சத்தியமங்கலத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    இதையடுத்து நேற்று முன் தினம் சந்தியா சதீஷ்குமாருக்கு போன் செய்து பேசினார். இதையடுத்து நேற்று மீண்டும் சந்தியா, சதீஷ்குமாருக்கு போன் செய்தார்.

    ஆனால் போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து சந்தியா அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சதீஷ்குமாரை போய் பார்த்து வரும் படி கூறினார்.

    இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சதீஷ்குமார் வீட்டுக்கு சென்று கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள பேனில் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கெலை செய்து தொங்கி கொண்டு இருந்தார்.

    மேலும் தனது கையில் ஊசியில் குத்தியப்படியும், இதனால் ரத்தம் கீழே கொட்டிய நிலையிலும் இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சதீஷ்குமார் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம்.

    ஆனாலும் அவர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.

    இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் சதீஷ்குமாரின் உடல் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்தியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • சாலையில் இரு கைகளையும் கோர்த்து நின்றபடி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

    இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஈரோடு மூலப்பாளையத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சாலையில் இரு கைகளையும் கோர்த்து நின்றபடி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத்தொடர்ந்து ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் அவர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷத்தில் ஈடுபட்டனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள், வட்டார தலைவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நாளை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட தெற்கு மாவட்ட காங்கிரசார் முடிவு செய்துள்ளனர். 

    • லட்சுமி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள மாமரத்து பாளையம் பெரிய சோமூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி லட்சுமி (46). இவர்களது மகன் தீபக்.

    இந்நிலையில் லட்சுமிக்கு கடந்த 5 ஆண்டுகளாக கால், முட்டி வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று கடுமையான கால் வலியால் அவதியடைந்த லட்சுமி எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனைத்தொடர்ந்து மகன் தீபக் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் லட்சுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதனையடுத்து தீபக் சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×