என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வீட்டின் முன் கிடந்த விறகு குச்சிகளை களைத்து எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கம்மாளின் வலது கை, ஆள்காட்டி விரலில் ஏதோ ஒரு விஷப்பூச்சி கடித்து விட்டது.
    • அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள நஞ்சமடைக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் அங்கம்மாள் (78). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அங்கம்மாளின் மகன் தவசிமணியும் இறந்துவிட்டார்.

    இதையடுத்து, அங்கம்மாள் தனது மருமகள் சிவகாமி செல்வி (43), பேரன் அஜித்குமார் ஆகியோருடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில், வீட்டின் முன் கிடந்த விறகு குச்சிகளை களைத்து எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கம்மாளின் வலது கை, ஆள்காட்டி விரலில் ஏதோ ஒரு விஷப் பூச்சி கடித்து விட்டது.

    இதையடுத்து, அங்கம்மாளை அவரது மருமகள் சிவகாமி செல்வி, பேரன் அஜித்குமார் ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அங்கம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 89.97 அடியாக குறைந்து உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 348 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர். இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.97 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 348 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும் என மொத்தம் அணையில் இருந்து 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • தமிழகம் முழுவதும் காங்கிரசார் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி மவுன அஞ்சலி போராட்டம் நடைபெற்றது.

    ஈரோடு:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி மவுன அஞ்சலி போராட்டம் நடைபெற்றது.

    மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத், வார்டு கவுன்சிலர் ஈ.பி.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, அரவிந்தராஜ், பாபு என்கிற வெங்கடாசலம், மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜீபைர் அகமது, பொதுச்செயலாளர் கனகராஜ், வின்சென்ட், சாகுல் ஹமீது, கராத்தே புஷ்பர், சேவா தள தலைவர் முகமதுயூசப், சிறுபான்மை பிரிவு பாஷா உள்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • டிரைவர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
    • கதிர்வேல் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் பட்டி மணிகாரம்பாளை யத்தில் தனியார் கல்குவாரி இயங்கி வந்துள்ளது. இதற்கான உரிமையை புதுப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கல் குவாரியில் இருந்து டிப்பர் லாரி மூலம் நம்பியூர் வேமாண்டம் பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மண் மற்றும் ரப்கல் ஏற்றி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட சுரங்கத்துறை மற்றும் புவியாளர் அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் மாவட்ட அதிகாரிகள் லட்சுமி, சிலம்பரசன் ஆகியோர் ஈடுபட்டனர்.

    அப்போது பனங்காட்டு பாளையம் அருகில் ரப் கல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரணை செய்தனர். இதை தொடர்ந்து வாகன டிரைவரிடம் ஆவணங்களை கேட்ட பொழுது டிரைவர் அதிகாரி களை தரக்குறை வாக பேசியதாக கூறப்படு கிறது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுரங்கத்துறை மற்றும் புவியாளர் அதிகா ரிகள் கொடுத்த புகாரின் அடி ப்படை யில் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் நிர்மலா விசார ணை மேற்கொ ண்டா ர்.

    அப்போ து கல் குவா ரிக்கு முறை யான ஆவணம் இல்லை என வும், டிரை வர் சரியா ன பதில் அளிக்க வில்லை.

    அதைத்தொ ட ர்ந்து போலீ சார் டிப்பர் லாரியை ஓட்டி வந்த நம்பியூர் அருகே உள்ள குருமந்தூரை சேர்ந்த கதிர்வேல் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து அவரை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து கதிர்வேல் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கீரிபள்ளம் ஓடையில் உயர்மட்டபாலம் அமைக்கும் பணி.
    • தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியினை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறை வேற்றும் வகையில் நீர்வளத்துறையின் சார்பில் பொதுநிதியில் இருந்து ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட,

    வெள்ளாள பாளையம் ஊராட்சி, பாரியூர் கீரிபள்ளம் ஓடையில் உயர்மட்டபாலம் அமைக்கும் பணியினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில்,

    அமைச்சர் முத்துசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பாலம் அமைக்கும் பணியினை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் இந்த உயர்மட்ட பாலம் சுமார் 16 மீட்டர் நீளத்திற்கு அமையவுள்ளது. ஓடையின் இருபுறமும் பக்க வாட்டு சுவர் அமைக்கப்படவுள்ளது.

    முன்னதாக கோபிசெட்டி பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட, பொலவகாளிபாளையம் கால்நடை மருத்துவமனை அருகில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியினை அமைச்சர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி, கோபி செட்டி பாளையம் நகராட்சி தலைவர் நாகராஜ், செயற்பொ றியாளர் (பவானிசாகர் அணைக்கோ ட்டம்) அருள் அழகன்,

    உதவிசெய ற்பொறியாளர் சதீஷ்குமார், கோபிசெட்டி பாளையம் தாசில்தார் (பொறுப்பு) சிவசங்கர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
    • 12 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கி யது. கடந்த சில மாதங்களா கவே கொரோ னா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியி ட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 687 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணம டைந்து வீடு திரும்பி உள்ளார்.

    இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 941 பேர் கொரோனா பாதி ப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்து ள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 12 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கடம்பூர்-மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் அஞ்சனை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக ஒரு ஆம்னிவேன் வந்து கொண்டிருந்தது.

    அந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான் மசாலாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்க ப்பட்டது.

    மொத்தம் 8 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.

    இதனையடுத்து வேனில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கோபி அடுத்த துறையாம்பாளையம், இந்திரா நகரை சேர்ந்த முகமது யாசின் (39), கோபி அடுத்த நஞ்சன் கவுண்டன் பாளையம் பகுதி சேர்ந்த மாரிமுத்து (47) என்பதும் தெரிய வந்தது.

    இவர்கள் கர்நாடகா மாநிலத்தி லிருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ஆம்னி வேன் மற்றும் 8 கிலோ புகையிலை பொருட்களை யும் பறிமுதல் செய்தனர்.

    • பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.
    • தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது தாளவாடி அடுத்த சீமாச்சிகளி என்ற இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.

    போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த நஞ்சைய்யா (60). சிதம்ஆலப்பா (50), கல்வீரப்பா (52), மாதேஷ் (37) ஆகியோர் என்பது தெரிவந்தது.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து பணம் ரூ. 7000, சீட்டு கட்டு, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • ஜீவிதா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் 2-வது தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஜீவிதா (30). குமார் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜீவிதா குப்பையை கூட்டி வீட்டின் மூலையில் வைத்துள்ளார். இதை குமார் கேட்டபோது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஒரு வாரமாக கணவன்-மனைவி இருவரும் பேசிக்கொள்ள வில்லை.

    இந்நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் வழக்கம் போல் வீட்டின் அறையில் தூங்க சென்றனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் குமார் எழுந்து பார்த்த போது மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டில் உள்ள மற்றொரு அறை தாழிடப்பட்டிருந்தது. அந்த அறையை குமார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது ஜீவிதா தூக்குபோட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
    • அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்தப்படி சென்றனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விழா, விசேஷம் மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் இருக்கும்.

    இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தால் அனல் காற்று வீசுகிறது.

    வெயிலின் வெப்பத்தில் இந்து தப்பிக்க பொதுமக்கள் நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். மேலும் சுற்றுலா தலங்களிலும் குவிந்து வருகிறார்கள்.

    இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலாபயணிகள் பலர் தங்கள் குடும்ப த்தினருடன் வந்தி ருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    காலை பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. ஆனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து குடும்ப த்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை அந்த பகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து சாப்பிட்டனர்.

    இதே போல் பவானிசாகர் அணை பூங்காவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான சுற்றுலா பயணிகள் சிறுவர் மற்றும் சிறுமிகளுடன் வந்திருந்தனர்.

    அவர்கள் அங்கு ஊஞ்சல், சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்தப்படி சென்றனர்.

    • எம்.எஸ்.தோனி,விராட் கோலி படங்களையும் இரு பக்கங்களில் வடிவமைத்துள்ளார்.
    • இதை புதிய முயற்சியாக எடுத்து சாதித்துள்ளார் அப்புசாமி.

    சென்னிமலை:

    சென்னிமலை சென்டெக்ஸ் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் துணி வடிவமைப்பா ளராக பணியாற்றி வருபவர் அப்புசாமி. இவர் தனது ஓய்வு நேரத்தில் பல்வேறு பிரபலங்களை கைத்தறி நெசவு மூலம் வடிவமைப்பது வழக்கம்.

    இவர் கருணா நிதி, ஜெயலலிதா, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரின் படங்களை உருவாக்கி உள்ளார்.

    தற்போது அந்த வகையில் புதிய முயற்சியாக நவீன தொழிற் நுட்பத்தில் கம்ப்யூட்டரில் வடிவமைத்து எலக்ட்ரானிக் ஜக்காடு மூலம் கடந்த 2 மாதங்களாக முயற்சி செய்து புதிய தொழிற் நுட்ப நெசவின் மூலம் துணியின் 2 புறமும் 2 உருவங்கள் வடிவமைத்து சாதித்துள்ளார்.

    இதை தொடர்ந்து தற்போது ஒரு புறம் கிரிக்கெட் வீரர்களான எம். எஸ்.,தோனி, துணியின் மறு புறம் விராட் கோலி என இருவரின் படங்களையும் இரு பக்கங்களில் வடிவமைத்துள்ளார். இந்த துணியின் அளவு அகலம் 20 இன்ச் நீளம் 30 இன்ச் ஆகும்.

    இதை கடந்த 60 நாட்க ளுக்கும் மேலாக வடி வமைத்து சாதித்துள்ளார். இப்படி துணியின் இரு பக்கமும் உருவம் வருமாறு நெய்வது மிக கடினம்.

    இதை புதிய முயற்சியாக எடுத்து சாதித்துள்ளார் அப்புசாமி. இந்த துணிரகங்களை கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசாக அனுப்ப போவதாக தெரிவித்தார்.

    • கால்நடை மருத்துவர்கள் யானைகளை பிரேத பரிசோதனை செய்தனர்.
    • அந்தியூர் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர், தாளக்கரை, தட்டக்கரை வனப்பகுதிகளில் யானை கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து சென்று கண்கா ணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் வன சரகத்திற்கு உட்பட்ட தாளகரை ரோட்டில் உள்ள தென் பர்கூர் காப்புக்காடு மாரியணை சரகம் பகுதியில் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டி ருந்தனர்.

    அப்போது அந்த பகுதி யில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட வனப் பணியாளர்கள் அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது துர்நாற்றம் வீசிய இடத்தில் ஒரு பெண் யானை மற்றும் ஒரு குட்டி யானை என 2 யானைகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அந்தியூர் வன சரகர் உத்தரசாமிக்கு தகவல் கொடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் படி சம்பவ இடத்திற்கு சென்ற வனசரகர் உத்திரசாமி இறந்த யானைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து 2 யானைகளை யும் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் சதாசிவம், கார்த்திக் மற்றும் பரத் ஆகியோர் நேரில் வந்து யானைகளை பிரேத பரிசோதனை செய்தனர்.

    இதையடுத்து, யானைகளின் உடல்கள் மற்ற விலங்குகளின் உணவு க்காக அங்கேயே போடப்ப ட்டது. வனப்பகுதியில் குட்டியு டன் யானை எப்படி இறந்த து என்பது குறித்து அந்தியூர் வனத்து றையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×