என் மலர்
ஈரோடு
- ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது
- ரெயில்வே நுழைவாயில் முன்பு அமர்ந்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போன்ற போராட்ட த்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல்காந்திக்கு விதிக்க ப்பட்ட தண்டனையை கண்டித்தும், அந்தத் தண்டனையை திரும்ப பெற வலியுறுத்தியும், இதேப்போல் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் இன்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஈங்கூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை ஈங்கூர் ரெயில் நிலையத்தில் சென்னிமலை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை ஈங்கூர் நால் ரோட்டில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னிமலை வடக்கு வட்டார தலைவர் சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், வட்டாரத் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முருகேஷ், ரவி, கதிர்வேல், ஈஸ்வரமூர்த்தி, ராவுத்குமார், ஆண்ட முத்துச்சாமி, சர்வே ஸ்வரன், சென்னிமலை முன்னாள் வட்டாரத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர்கள் தில்லை சிவக்குமார் கிருபாகரன், மாவட்ட பொதுச் செயலாளர் ஈங்கூர் சண்முகம், பனியம்பள்ளி நடராஜ், வாசுதேவன், சக்திவேல், அசோகபுரம் பழனிசாமி, சீதாபதி, பழனிவேல், மணி, சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மக்கள் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் ஈங்கூர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஈங்கூர் ரெயில் நிலையம் நுழைவாயிலில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது. உடனடியாக நிர்வாகிகள் ரெயில்வே நுழைவாயில் முன்பு அமர்ந்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் 50-க்கும் மேற்பட்ட காங்கிர சாரை கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- கோவை செல்லும் சாலையில் ஓட்டல் வைத்துள்ளார்.
- பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (42). இவர் அதே பகுதியில் கோவை செல்லும் சாலையில் ஓட்டல் வைத்துள்ளார். இவரது மனைவி இமாக்குலேட் கீதா (49). இவர் திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்களாகிறது. குழந்தைகள் இல்லை. ஆனந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது மனைவி பணிபுரிந்து வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், இமாக்குலேட் கீதா திருச்சியில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்றிருந்தார். ஆனந்த் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
நேற்று காலை சுமார் 8 மணியளவில் வீட்டில், பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அவினாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்பிணமாக மிதந்தார்.
- வாய்க்காலில் குளித்த போது தவறிவிழுந்து இறந்தாரா?
கொடுமுடி,
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்துள்ள பாசூர் இரட்டைவாய்க்காலில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்பிணமாக மிதந்தார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மலையம் பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக மிதந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
அப்போது அவர் சுடிதார் அணிந்து காணப்பட்டார். மேலும் அவர் யார்? என்பது உள்ளிட்ட எந்த விபரங்களும் தெரியவில்லை.
வாய்க்காலில் குளித்த போது தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்து உடலை வாய்க்காலில் வீசிசென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதலில் பிணமாக கிடந்த பெண் யார்? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் நிர்வாண நிலையில் ஆற்றில் மிதந்து.
- நபரை அரிவா ளால் வெட்டி கொலை செய்து தலையை துண்டித்து விட்டு உடலை ஆற்றில் வீசி சென்றனரா?
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே பெருந்தலையூர் கிராமம் சிரையாம்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி எதிரே பவானி ஆற்றங்கரை உள்ளது.
நேற்று மாலை அந்த பவானி ஆற்றங்கரையில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது அழுகிய நிலையில் தலை, கை, கால்கள் இல்லாமல் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் நிர்வாண நிலையில் ஆற்றில் மிதந்து வந்ததை கண்டு குளித்துக் கொண்டி ருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மோப்பநாய் ஜெர்ரி, தடயஅறிவியல் ஆய்வக நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இது குறித்து தகவல் பரவியதும் அந்த பகுதியில் கூட்டம் கூடியது.
கவுந்தப்பாடி போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரண மாக இறந்த நபரை அரிவா ளால் வெட்டி கொலை செய்து தலையை துண்டித்து விட்டு உடலை ஆற்றில் வீசி சென்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் இறந்த நபரின் கை, கால் மற்றும் தலை ஆகியவை வேறு எங்கும் வீசப்பட்டுள்ளதா? என்று போலீசார் தேடி வருகிறார்கள்.
வேறு எங்கேயோ வைத்து கொலை செய்துவிட்டு போலீசாரை திசை திருப்புவதற்காக உடலை பவானி ஆற்றில் வீசி இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கோபி, சத்திய மங்கலம் சப்டிவிஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதி களில் மாயமான வர்களின் பட்டியலை சேகரித்து அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்ப டுத்தி உள்ளனர்.
மேலும் இறந்தவரின் உடலை அடையாளம் காணும் பணியிலும் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.
- ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.
கடந்த சில மாதங்களா கவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம்கொரோ னாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 942 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்து ள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 13 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ரவிச்சந்திரன் (27), சூரம்பட்டி வலசு, அண்ணா வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (37) என்பது தெரியவந்தது.
- திருவண்ணாமலையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
ஈரோடு,
ஈரோடு சூரம்பட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சூரம்பட்டி வலசு, நேதாஜி ரோடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்களிடம் 1.200 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணை யில் அவர்கள் வீரப்பன் சத்திரம் பகுதி யைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (27), சூரம்பட்டி வலசு, அண்ணா வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (37) என்பது தெரியவந்தது.
மேலும் சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து ரூ. 24 ஆயிரம் மதிப்பிலான 1.200 கிலோ கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ. 700 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல, கடத்தூர் போலீசார், கோபியை அடுத்துள்ள சிங்கிரி பாளையம், மாதேஸ்வரன் தோட்டம் முன்பாக சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அவர்கள் இருவரும் நம்பியூர் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (35), கோபி, ஒடையகவுண்ட ன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (32) என்பதும் தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து ரூ. 3,000 மதிப்பிலான 100 கிராம் கஞ்சா, பணம் ரூ. 1,500 மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- லட்சுமி (50) இவர்களின் மகள் ரேவதி (25) . இவர்கள் அனைவரும் கட்டிட தொழிலாளர்கள்.
- வீட்டின் அருகில் வசிக்கும் எலக்ட்ரீசியன் கணேஷ் (35) என்பவரை அழைத்து கியாஸ் அடுப்பை பழுது பார்க்க சொன்னார்கள்.
பவானி,
பவானி மண் தொழிலாளர் 2-வது வீதியை சேர்ந்தவர் ஸ்ரீ ரங்கன். இவரது மனைவி லட்சுமி (50) இவர்களின் மகள் ரேவதி (25). இவர்கள் அனைவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களது வீட்டில் இருந்த கியாஸ் அடுப்பு பழுதானது.
இதையடுத்து அவர்கள் வீட்டின் அருகில் வசிக்கும் எலக்ட்ரீசியன் கணேஷ் (35) என்பவரை அழைத்து கியாஸ் அடுப்பை பழுது பார்க்க சொன்னார்கள்.
கணேஷ் கியாஸ் அடுப்பை பழுது பார்த்துக்கொண்டு இருக்கும் போது அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் லட்சுமி அவரது மகள்ரேவதி, மற்றும் எலக்ட்ரீசியன் கணேஷ் ஆகிய 3 பேரும் தீ காயம் ஏற்பட்டு அலறி சத்தம் போட்டு உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரையும் மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
ரேவதிக்கு முதுகுபகுதி, முகம், கை, கால் என 50 சதவீதம் தீக்காயமும், லட்சுமிக்கு இடது கை, கால் என 35 சதவீதம் தீக்காயமும், கணேஷ் கை, கால் முகம் என 30 சதவீதம் தீக்காய த்துடன் பெருந்துறை ஐ .ஆர். டி .டி. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.
இச்சம்பவம் குறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து ஏற்பட்டு அங்கு தகரத்தால் வேயப்பட்ட மாட்டு கொட்டகையில் தீ பரவியது
- தீ விபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மாட்டு கொட்டகை தீயில் எரிந்து சேதமானது
சென்னிமலையை அடுத்த வெள்ளோடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட அனுமன்பள்ளி கொளத்தூர் பகுதியில் சம்பவத்தன்று மாலையில் கவுரி என்பவர் தன்னுடைய மாட்டு கொட்டகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுத்தி இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து ஏற்பட்டு அங்கு தகரத்தால் வேயப்பட்ட மாட்டு கொட்டகையில் தீ பரவியது. பின்னர் இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மாட்டு கொட்டகை தீயில் எரிந்து சேதமானது.
மின் கசிவு காரணமாக ஸ்கூ ட்டரில் தீ விபத்து ஏற்ப ட்டதா? என்பது குறித்து வெள்ளோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த மாதம் பனி தாக்கம் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து காணப்பட்டது
- தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்தது
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மொத்தம் - சில்லரை விற்பனையில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் பனி தாக்கம் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் காய்கறிகள் விலையும் அதிகரித்து இருந்தது.
ஆனால் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதனால் காய்கறிகள் வரத்தும் அதிகரித்து காய்கறிகள் விலை குறைந்து விட்டது. பொதுவாக ஈரோடு காய்கறி மார்க்கெட்டிற்கு 20 முதல் 25 டன் காய்கறிகள் வரத்தாகி வந்த நிலையில் இன்று 30 டன் காய்கறிகள் வரத்தாகி இருந்தது. இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:-
கத்தரிக்காய் - 30, வெண்டைக்காய் - 60, பாவக்காய் - 50, புடலங்காய் - 40, பட்ட அவரை - 60, கருப்பு அவரை - 40, முள்ளங்கி - 25, பீர்க்கங்காய்-70, பீட்ரூட்-40, கேரட் - 50, பீன்ஸ் - 70, சவ்சவ்-20, சேனக்கிழங்கு - 50, முட்டைகோஸ் - 20, குடைமிளகா-60, பச்சை மிளகாய் - 60, உருளைக்கிழங்கு -20.
கடந்த வாரம் 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி ஒரு கிலோ இன்று ரூ.10 முதல் 15 -க்கு குறைந்து விட்டது. தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்தது. ஒட்டன்சத்திரம், தாளவாடி, தாராபுரம் போன்ற பகுதிகளில் இருந்து தக்காளிகள் வரத்தாகி இருந்தது. இதேப்போல் முருங்கைக்காய் ஒரு கிலோ 25 ரூபாயாக குறைந்து விட்டது.
அதே நேரம் வரத்து குறைவு காரணமாக பச்சை பட்டாணி இன்று ஒரு கிலோ 100 ரூபாயாக அதிகரித்து விற்கப்பட்டது. இதேப்போல் கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட இஞ்சி இன்று ஒரு கிலோ 140 ரூபாயாக விற்கப்பட்டு வருகிறது.
- இதனால் நேற்று கொடிவேரி தடுப்பணையில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
- கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து குளித்து செல்கிறார்கள்.
கோபி,
பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.
இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.
இதனால் கொடிவேரி தடுப்பணையில் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
இதையொட்டி வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து குளித்து செல்கிறார்கள்.
இதே போல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு பொது மக்கள் ஏராளமானோர் தங்கள் குடும்ப த்தினருடன் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
இதனால் நேற்று கொடிவேரி தடுப்பணையில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
நேற்று ஒரே நாளில் சுமார் 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர்.
இதன் மூலம் ரூ.32 ஆயிரம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- முரளி தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்
ஈரோடு மாணிக்க ம்பாளையம், ஆண்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் முரளி (43). இவரது மனைவி சவிதா. வீட்டின் கீழ் பகுதியில் சொந்தமாக தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். மேல் பகுதியில் அவரது வீடு உள்ளது.
இந்நிலையில் சம்பவ த்தன்று முரளியின் மகன் கீழ் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். சவிதா தறிப்பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மேல் வீட்டில் முரளி மட்டும் இருந்துள்ளார். முரளியின் இளைய மகன் தண்ணீர் குடிப்பதற்காக மேல் வீட்டுக்கு சென்றார். அப்போது கதவு தாழிடப்ப ட்டிருந்தது. கதவை திறந்து பார்த்தபோது தந்தை முரளி தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் இது குறித்து தனது தாய் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் முரளியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தியோர் காப்பக த்திற்கு திருப்பூர் மாவட்ட ஆளுநர் இளங்குமரன் வருகை
- இந்த ஆண்டு நடைபெற்ற பணிகள் ரூ.25 லட்சம் மதிப்பில் காணொலி மூலம் நிர்வாகிகளுக்கு காண்பிக்க ப்பட்டது
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் நடத்தி வரும் முதியோர் காப்பக த்திற்கு திருப்பூர் மாவட்ட ஆளுநர் இளங்குமரன் வருகை தந்தார் .அப்போது காப்பகத்திற்கு ஐந்தரை லட்சம் மதிப்பில் உள்ள புதிய ஜெனரேட்டர் வாங்குவதற்கு சந்திரசேகர் மற்றும் ஜெகதீஷ் குமார் ஆகியோர் காசோலையை வழங்கினர்.
இதில் கோபி அபி மருத்துவமனை செந்தில்நாதன் மற்றும் நாகராஜ் முதல்வர் மற்றும் ராமலிங்கம் வேளாண்மை பிரசிடெண்ட் மற்றும் வெங்கடேஷ் சிறுமுகை ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவப்படுத்தினர். மற்றும் புளியம்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் திருப்பூரில் உருவாகி வரும் ரோட்டரி சங்கம் கேன்சர் சென்டருக்கு ரூ.7 லட்சம் கொடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதற்கு முன் தொகையாக இரண்டரை லட்சத்திற்கான காசோலையை ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் வழங்கினர். மேற்படி இந்த ஆண்டு நடைபெற்ற பணிகள் ரூ.25 லட்சம் மதிப்பில் காணொலி மூலம் நிர்வாகிகளுக்கு காண்பிக்க ப்பட்டது. இதில் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் இளங்குமரன் தலைமை ஏற்றார். மற்றும் ஆர் சிவகுமார், தலைவர் மணிக்குமார் ,செயலாளர் மோகனசுந்தரம், பொருளாளர் சுப்பிர மணியம், சண்முகம் முன்னி லை வகித்தனர். மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






