தீப்பிடித்து தாய்-மகள் உள்பட 3 பேர் உடல் கருகினர்

லட்சுமி (50) இவர்களின் மகள் ரேவதி (25) . இவர்கள் அனைவரும் கட்டிட தொழிலாளர்கள்.வீட்டின் அருகில் வசிக்கும் எலக்ட்ரீசியன் கணேஷ் (35) என்பவரை அழைத்து கியாஸ் அடுப்பை பழுது பார்க்க சொன்னார்கள்.
தீப்பிடித்து தாய்-மகள் உள்பட 3 பேர் உடல் கருகினர்
Published on

பவானி,

பவானி மண் தொழிலாளர் 2-வது வீதியை சேர்ந்தவர் ஸ்ரீ ரங்கன். இவரது மனைவி லட்சுமி (50) இவர்களின் மகள் ரேவதி (25). இவர்கள் அனைவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களது வீட்டில் இருந்த கியாஸ் அடுப்பு பழுதானது.

இதையடுத்து அவர்கள் வீட்டின் அருகில் வசிக்கும் எலக்ட்ரீசியன் கணேஷ் (35) என்பவரை அழைத்து கியாஸ் அடுப்பை பழுது பார்க்க சொன்னார்கள்.

கணேஷ் கியாஸ் அடுப்பை பழுது பார்த்துக்கொண்டு இருக்கும் போது அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் லட்சுமி அவரது மகள்ரேவதி, மற்றும் எலக்ட்ரீசியன் கணேஷ் ஆகிய 3 பேரும் தீ காயம் ஏற்பட்டு அலறி சத்தம் போட்டு உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரையும் மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

ரேவதிக்கு முதுகுபகுதி, முகம், கை, கால் என 50 சதவீதம் தீக்காயமும், லட்சுமிக்கு இடது கை, கால் என 35 சதவீதம் தீக்காயமும், கணேஷ் கை, கால் முகம் என 30 சதவீதம் தீக்காய த்துடன் பெருந்துறை ஐ .ஆர். டி .டி. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

இச்சம்பவம் குறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com