என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பங்குனி உத்திர தேரோட்டம் கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
    • 3 -ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய திருதலங்களில் சென்னிமலை மலை முருகன் கோவில் திகழ்ந்து வருகிறது.

    இங்கு முருகனுக்கு தைப் பூசதேர், பங்குனி உத்திர தேர் என 2 திருத்தேர் உள்ளது. ஆண்டு தோறும் தைப்பூச தேரோட்டமும், பங்குனி தேரோட்டமும் சிறப்பாக நடந்து வருகிறது.

    இதையொட்டி இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற 2-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. 3 -ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது. 4-ந் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.

    இதை தொடர்ந்து 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் ரதாரோகணக்காட்சியும், தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் தேவஸ்தான மண்டபத்தில் அக்னி நட்சத்திர அன்னதான விழாக்குழு சார்பாக அன்னதானம் நடக்கிறது.

    மேலும் அன்று மாலை 5 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சியும், 6-ந் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. 7 – ந் தேதி காலை 8 மணிக்கு மகா தரிசனம் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை உதவி ஆணையாளரும் தக்காருமான அன்னக்கொடி,செயல் அலுவலர் சரவணன், ஆய்வாளர் ரவிக்குமார், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், செய்து வருகின்றனர்.

    • வீடுகளில் கடுமையான புழுக்கம் நிலவுவதால் பெரியவர்கள், குழந்தைகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
    • மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை குறைத்து விட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் ஈரோடு மாவட்டத்தில் இதற்கு நேர் மாறாக கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெயில் 101 டிகிரியாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக பதிவானது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவாக ஈரோடு மாவட்டத்தில் 103.28 டிகிரி பதிவாகி புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் காலை 8 மணி முதல் வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் நீடிக்கிறது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 4 மணி வரை அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வீடுகளில் கடுமையான புழுக்கம் நிலவுவதால் பெரியவர்கள், குழந்தைகள் சிரமப்பட்டு வருகின்றனர். மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை குறைத்து விட்டனர். இதனால் மதிய நேரம் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    வெயிலில் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் நீர் நிலைகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையில் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இதேபோல் காளிங்கராயன் வாய்க்கால், கீழ்பவானி வாய்க்காலிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இது தவிர இளநீர், கரும்பு பால், குளிர்பானங்கள், தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் இதன் வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    இப்போதே வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் கத்திரி வெயிலை கண்டு ஈரோடு மக்கள் அச்சப்பட தொடங்கி விட்டனர்.

    • முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் சமாதானம் ஏற்பட வாய்ப்பு கிட்டுமா என எதிர்பார்க்கப்பட்டது.
    • வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்தது.

    ஈரோடு:

    கேரள மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் சோமநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றியிருந்த தெருக்களில் பிற சாதியினர் நடக்க கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலங்களாக இருந்து வந்தது.

    இந்நிலையில் ஸ்ரீ நாராயணகுருவின் சீடரும், காங்கிரசு பேரியக்கத்தை சேர்ந்தவருமான டி.கே. மாதவன் என்பவர் இப்பிரச்சனைக்காக போராட முன் வந்தார். இதற்காக 1924-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந் தேதி காலை 6 மணிக்கு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதுதான் வைக்கம் போராட்டத்தின் முதல் போராட்டமாகும்.

    இந்த அறவழி போராட்டம் தொடர்ந்து நடந்தது. முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் சமாதானம் ஏற்பட வாய்ப்பு கிட்டுமா என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அறவழியிலேயே போராடிக் கொண்டிருந்தனர்.

    இதனையடுத்து படிப்படியாகத் தலைவர்கள் கைது செய்யப்பட்டவுடன் போராட்டம் தொய்வடையும் நிலையில் ஈ.வெ.ரா. பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில் "நீங்கள் இங்கு வந்து இந்த போராட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்பு கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு செய்தால் ஒரு பெரிய காரியம் கெட்டு விடுமே என்று கவலைப்படுகிறோம்" என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

    இந்த கடிதத்தின் அடிப்படையில் பெரியார் வைக்கம் விரைந்தார். களத்தில் இறங்கி சத்தியாகிரகம் செய்ய தொடங்கினார். பெரியார் சூறாவளி போல் சுற்றி வந்து சூடு பறக்கும் சொற்களால் மக்களைத் தீண்டாமை கொடுமைக்கெதிராக தட்டியெழுப்பினார். ஈ.வே.ரா. பெரியாரின் பேச்சு கேரள மக்களை அதிகமாக கவர்ந்தது. இதனால் அங்கிருந்த போலீசாரால் ஈ.வே.ரா பெரியார் 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    பின்னர் தண்டனைக்காலம் முடிவடைந்த பின்பு ஈ.வே.ரா. பெரியார் விடுதலையானார். விடுதலையான ஈ.வே.ரா. பெரியார் பின்னர் அங்கிருந்து ஈரோட்டிற்கு திரும்பி வந்தார். பின்னர் பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பின்பு 1925-ம் ஆண்டு நவம்பர் மாதம் வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    இதனைத் தொடர்ந்து வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட கேரளா மாநில காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்தது. அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்து கொண்ட தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் கேரளா மாநில காங்கிரஸ் சார்பாக நினைவு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் அருகே வைக்கம் நூற்றாண்டு நினைவு பேரணி தொடக்க விழா நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவரை அமைச்சர் முத்துசாமி வரவேற்றார். பின்னர் பன்னீர்செல்வம் படத்தில் உள்ள பெரியார் சிலை, கருணாநிதி சிலைக்கு கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    • பண்ணாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நடக்கிறது.
    • சத்தியமங்கலம் பகுதியில் சப்பரம் வீதி உலா நடந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் மிக விமர்சியாக நடந்து வருகிறது.

    இந்த ஆண்டுக்கான பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    இதையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

    மேலும் குண்டம் வளர்க்கும் இடத்தில் மஞ்சள், உப்பு, மிளகு போட்டு கற்பூரம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

    குண்டம் விழாவில் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் அரசியல் கட்சியினர், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குண்டம் இறங்குவார்கள். இதையொட்டி தற்காலிக பஸ் நிலையம், பக்தர்கள் குடிநீர் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

    விழாவையொட்டி பண்ணாரியம்மன், சருகு மாரியம்மன் சப்பரம் புறப்பாடு தொடங்கியது. இதையடுத்து அம்மன் சப்பரம் சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் திருவீதி உலா நடந்து வருகிறது.

    இதில் 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீர் ஊற்றி வழிபடுகிறார்கள். கடந்த 2 நாட்களாக சத்தியமங்கலம் பகுதியில் சப்பரம் வீதி உலா நடந்தது.

    நேற்று இரவு கோட்டூர் பாளையத்துக்கு சப்பரம் சென்றது. இதை தொடர்ந்து இன்று காலை அந்த பகுதியில் அம்மன் சப்பரம் திருவீதி உலா நடந்தது.

    இதை தொடர்ந்து இன்று இரவு பண்ணாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நடக்கிறது. முன்னதாக இன்று அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதைதொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கம்பம் நடப்படுவதால் இன்று காலை முதலே பக்தர்கள் ஏராளமானோர் வந்து அம்மனை வழிபட்டு வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.92 அடியாக குறைந்து உள்ளது.
    • வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 30.09 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர். அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.92 அடியாக குறைந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 802 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.78 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 41.75 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 26.02 அடியாக உள்ளது.

    33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 30.09 அடியாக உள்ளது.

    • தூக்குமாட்டிய நிலையில் கவுரி தொங்கி கொண்டிருந்தார்.
    • அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பள்ளியூத்து பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (54). இவரது இளைய மகள் கவுரி (30). பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் அனுமன் பள்ளியில் உள்ள தனியார் சித்த மருத்துவ நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கவுரிக்கு கடந்த சில வருடங்களாகவே தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று காலை தாய் தனலட்சுமி வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் முன்புறம் உள்ள கூரையில் சேலையால் தூக்குமாட்டிய நிலையில் கவுரி தொங்கி கொண்டிருந்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கவுரி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 80 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவ டிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு மாதம் இல்லாத வகையில் ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

    இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 943 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்து ள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 16 பேர் கொரோனா பாதிப்பு டன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    தற்போது நாளொன்றுக்கு 80 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் 96 பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
    • பெற்றோர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 28 பள்ளிகளில் 2,649 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப் பட்டு வருகிறது. திங்கட் கிழமை கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார்,

    செவ்வாய்க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, புதன்கிழ மை வெண்பொங்கல் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சோள காய்கறி கிச்சடி ரவா கேசரி போன்றவை வழங்கப் பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று முதல் கூடுதலாக 32 பள்ளிகளில் 5,793 மாணவ- மாணவிகளுக்கு இந்த காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் தாளவாடி மலைப்பகுதியில் 32 பள்ளிகளில் 738 மாணவ-மாணவிகள் பயனைந்து வருகின்றனர். மொத்தமாக ஈரோடு மாவட்டத்தில் 96 பள்ளிகளை சேர்ந்த 9,180 மாணவ -மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    இன்று காலை ஆசிரியர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அமைச்சர் சு.முத்துசாமி விரிவுபடுத்தப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பல குழந்தைகள் காலையில் உணவருந்தாமல் பள்ளிக்கு வருகின்றனர். இது பல விளைவுகளை ஏற்படுத்தும். காலை உணவை கொடுத்து அனுப்பும் அளவிற்கு பல குடும்பங்கள் பணிச்சுமையின் காரணமாக முடியாமல் போகின்றன.

    இதனால் குழந்தைகள் பள்ளிக்கு வராத நிலை உள்ளது. அவர்களது உடல்நிலை இதையெல்லாம் மனதில் வைத்து சில இடங்களில் முதல்-அமைச்சர் கவனத்திற்கு வந்தது. நேரடியாகவும் அவர் பார்த்தார்.

    குழந்தைகளின் உடல் நிலை பாதுகாக்கவும் அவர்களின் குடும்பத்தாருக்கு சுமையை குறைப்பதற்காகவும் மாணவ-மாணவிகள் பள்ளியில் வருவதை அதிகரிப்ப தற்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்- அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தமாக 2-ம் கட்டமாக இன்று இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அத்தனை பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

    மாநகராட்சி எல்லைக்குள் இருக்கின்ற மாநகராட்சி அரசு பள்ளிகளில் இந்த திட்டம் 32 பள்ளிகளில் கூடுதலாக தொடங்கப்ப ட்டுள்ளது.

    அதில் 5 ஆயிரத்து 793 மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள். இந்த வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் குழந்தை கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டு வதாக அமைந்திருக்கிறது.

    வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    மற்ற மாநிலங்களை சேர்ந்த முதல்-அமைச்சர் களும் இந்த திட்டம் பாராட்டும் அளவிற்கு அமைந்துள்ளது. பெற்றோ ர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

    மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் நல்ல வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சில பிரச்சனைகள் இருக்கின்றன. அவ ர்களுக்கு கை கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்ற காரண த்தினால் 6 முதல் 12 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உய ர்கல்வி வருகின்றபோது மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்ப தற்கான உதவித்தொகை திட்டத்தை முதல் - அமைச்சர் மாணவிகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

    காலை உணவு திட்டம், ஆயிரம் ரூபாய் திட்டம் இதையெல்லாம் பார்க்கும் போது பள்ளிகளில் சேர்கி ன்ற மாணவர்களின் எண்ணிக்கை அரசு பள்ளி களின் படிப்பு, கல்லூரிக ளில் சேர்கின்ற மா ணவிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்து இருக்கின்றது.

    இந்த திட்டம் நல்ல நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டி ருக்கிறது. மற்ற மாநிலங்க ளோடு தமிழ்நாடு போட்டி யிட்டு அதிகமான மாண வர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற சிவில் தேர்வுகளை வெற்றி பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.

    இப்படி பல திட்டங்கள் மாணவர்களை நோக்கி கொண்டு வரப்ப ட்டுள்ளன. மகளிர்க்கான உரிமை தொகை ஒரு கோடி குடும்பத்திற்கு கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார்.

    அதில் என்ன குறைபாடுகள் இருந்தாலும் அதை சரி செய்ய முதல்-அமைச்சர் தயாராக இருக்கின்றார். சேதமடைந்த அரசு பள்ளிகள் கட்டிடங்களை சீரமைக்க கணக்கெடுத்து வருகின்றோம்.

    அத்திக்கடவு -அவிநாசி திட்டம் 106.8 கிலோமீட்டர் நீளத்திற்கு முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. 83 கிளைகள் இருக்கின்றன. 1045 குளங்களுக்கு இணைப்பு வழங்கப்ப ட்டுள்ளது.

    அதற்கான சோதனை நடந்து வருகிறது. இந்த பணிகள் நடந்து வரும்போது தேதி விரைவில் அறிவிக்க ப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்தது.
    • செல்போன்களில் படம் பிடித்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    திம்பம் மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம்-கர்நாடகம் இடையே முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளது.

    இதனால் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் வனப்பகுதி களில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வெளியேறும் வன விலங்கு கள் சாலையோ ரங்களுக்கு வந்து நின்று கொள்கின்றன.

    சில சமயங்களில் வனப்பகு தியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி 4 பேர் காரில் சென்று கொண்டு இருந்தனர்.

    மலைப்பாதையின் 24-வது கொண்டை ஊசி வளைவில் கார் திரும்பியபோது சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டி அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் காரில் இருந்தவர்கள் சிறுத்தையை தங்களுடைய செல்போன்களில் படம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று சிறுத்தை மறைந்து கொண்டது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதி களில் இரவு நேரங்களில் சிறுத்தையின் நடமாட்டம் அடிக்கடி நடைபெறுகிறது.

    இதனால் மலைப்பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், வாகனங்களை மலைப்பாதையில் நிறுத்த கூடாது என்றும் எச்சரித்த னர்.

    • தமிழகம் அதில் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் முத்துசாமி பங்கேற்று இருக்கிறார்.
    • இன்றைக்கும் பெரியார் என்று சொன்னால் வைக்கம் என்ற வார்த்தை தான் நினைவுக்கு வரும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நினைவாக தந்தை பெரியாரின் நினைவிடத்திற்கும், ஈரோட்டிற்கும் வந்து பெரியாருக்கு மரியாதை செலுத்தி விட்டு வைக்கம் நிகழ்வுகளை நடத்துவது என்று கேரள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக கேரளா காங்கிரஸ் குழுவினர் இங்கு வந்திருக்கின்றனர்.

    தமிழகம் அதில் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் முத்துசாமி பங்கேற்று இருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடுகளை செய்திருக்கின்றது. வைக்கத்தின் போராட்டத்தினை கேரள காங்கிரஸ் ஆரம்பித்தது. அப்போது சிறு இயக்கமாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் இருந்து அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் அதில் கலந்து கொண்ட பிறகு தான் அதற்கு ஒரு பெரிய வீச்சு ஏற்பட்டது. மக்கள் இயக்கமாக மாறியது.

    இன்றைக்கும் பெரியார் என்று சொன்னால் வைக்கம் என்ற வார்த்தை தான் நினைவுக்கு வரும். தந்தை பெரியார் வைக்கம் பிரச்சனையை ஒரு தேசிய பிரச்சனையாக ஆக்கினார். சமூக பிரச்சனையாக மாற்றினார். அதன் தாக்கம் இந்தியா முழுக்க சென்றது. காந்தியடிகளின் கவனத்தை ஈர்த்தது. அதன் விளைவாக 5 ஆயிரம் ஆண்டுகளாக அனுமதிக்க முடியாத ஒரு இடத்தில் ஒதுங்கி நின்ற மக்கள் உள்ளே சென்று வழிபாடு நடத்தக்கூடிய ஒரு சிறப்பான நிலை ஏற்பட்டது. இதற்கு அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியாரின் பெரும் முயற்சி தான் காரணம்.

    தமிழகம் எப்போதும் சமூக சீர்திருத்தத்தின் பக்கம் இருக்கிறது. சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றில் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. வைக்கத்தின் நினைவுகளை மீண்டும் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் உள்ள திருமண மகாலில் திருமணம் நடந்தது.
    • புதுப்பெண்ணை, புதுமாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச்செல்லும் நிகழ்வு நடந்தது.

    ஈரோடு :

    ஈரோடு திண்டல் சக்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் கே.சி.பழனிசாமி-டி.உமாமகேஸ்வரி. இந்த தம்பதியரின் மகன் டாக்டர் பி.நிசாந்த் பாலாஜி. இவர் தற்போது தோல் மருத்துவத்துக்கான உயர்கல்வி படித்து வருகிறார். இவருக்கும், ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த சி.ரமேஷ்-ஆர்.வசந்தாமணி தம்பதியரின் மகள் சி.ஆர்.ரித்துவுக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ நேற்று காலை ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் உள்ள திருமண மகாலில் திருமணம் நடந்தது.

    தமிழ் முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் டாக்டர் நிசாந்த் பாலாஜி தாலி கட்டி சி.ஆர்.ரித்துவை மனைவியாக ஏற்றுக்கொண்டார். பின்னர் புதுப்பெண்ணை, புதுமாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச்செல்லும் நிகழ்வு நடந்தது. அப்போது புதுமண தம்பதிகள் வித்தியாசமாக மாட்டு வண்டியில் பயணம் செய்தனர். மணமக்கள் செல்வதற்காக அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி மண்டப வாசலில் தயாராக நின்று கொண்டிருந்தது. இரட்டை காளைகள் பூட்டப்பட்ட அந்த வண்டியில், மணமகன் டாக்டர் பி.நிசாந்த் பாலாஜி ஏறி உட்கார்ந்தார். அவரைத்தொடர்ந்து வண்டியில் அவருடைய மனைவி சி.ஆர்.ரித்து ஏறினார்.

    மாட்டு வண்டி இருக்கையில் கால்களை மடக்கி உட்கார்ந்து கொண்ட 2 பேரும், ஆளுக்கொரு மாட்டின் தாம்பு கயிற்றை பிடித்துக்கொண்டனர்.

    மணமகன் கையில் அலங்கரிக்கப்பட்ட சாட்டையுடன் மாடுகளை தட்டி வண்டி ஓட்டினார். மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் மணமக்கள் பயணம் செய்தனர். மணமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் மாட்டு வண்டியை அழகாக ஓட்டியது பார்ப்பவர்களையும் உற்சாகம் அடையச்செய்தது.

    இதுகுறித்து டாக்டர் பி.நிசாந்த் பாலாஜி கூறியதாவது:-

    எங்கள் திருமணம் நிச்சயம் ஆனதுமே, மாப்பிள்ளை அழைப்பு மற்றும் மணமக்கள் ஊர்வலம் மாட்டு வண்டியில் இருக்க வேண்டும் என்று எங்கள் 2 பேரின் பெற்றோரும் விரும்பினார்கள். திருமணத்துக்கு முதல் நாள், மாப்பிள்ளை அழைப்புக்கு நானே வீட்டில் இருந்து மண்டபத்துக்கு மாட்டு வண்டி ஓட்டி வந்தேன். அதைத்தொடர்ந்து எனது மனைவியை தாலி கட்டிய கையோடு மாட்டு வண்டியில் அழைத்து வந்தேன். பாரம்பரிய முறையில் நமது முன்னோர்கள் வழியில் எனது வாழ்க்கை தொடங்கி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மணப்பெண் ரித்து கூறும்போது, மாட்டு வண்டியில் பயணம் செய்தது மறக்க முடியாத மகிழ்ச்சியாக உள்ளது. பாரம்பரியத்தை போற்றும் வகையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்றார்.

    • குமார் தண்ணீர் கேனில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்
    • நான் வாங்கிய பணத்தை விட வட்டி அதிக அளவில் கட்டி வந்ததால் என்னால் சமாளிக்க முடியவில்லை

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஜேகே நகரை சேர்த்த திருஷ்டி பொம்மை வியாபாரி குமார்(36). தனது மனைவி மங்கம்மாள் மற்றும் தனது மகன், மகளுடன் வந்தார். அப்போது திடீரென குமார் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு தண்ணீர் கேனில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி போலீசார் ஓடி சென்று அவரிடமிருந்த பெட்ரோல் கேனை பறித்து உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.இது குறித்து குமார் கூறும் போது-

    நான் அரச்சலூர் ஜெ.ஜெ.நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். திருஷ்டி பொம்மை வியாபாரம் செய்து வருகிறேன். என் குடும்ப சூழ்நிலை காரணமாக அதே பகுதியை சேர்ந்த 4 பேரிடம் தனித்தனியாக கடன் வாங்கி இருந்தேன். வாங்கிய பணத்திற்காக மாதம் வட்டியும் கட்டி வந்தேன்.

    ஆனால் நான் வாங்கிய பணத்தை விட வட்டி அதிக அளவில் கட்டி வந்ததால் என்னால் சமாளிக்க முடியவில்லை. இதனையடுத்து எனது வீட்டையும் விற்று பணத்தை கொடுத்தேன். அப்போதும் அவர்கள் 4 பேரும் என்னிடம் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்த னர். நாளுக்கு நாள் அவ ர்கள் தொந்தரவு அதிகரித்த தால் என்னால் வியாபா ரமும் செய்ய முடியவில்லை. இதனை அடுத்து கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை அடுத்து சூரம்பட்டி போலீசார் குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்து வட்டி கொடுமையால் வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×