சாலையில் உலா வந்த சிறுத்தை

சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்தது.செல்போன்களில் படம் பிடித்தனர்.
சாலையில் உலா வந்த சிறுத்தை.
சாலையில் உலா வந்த சிறுத்தை.
Published on

ஈரோடு:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

திம்பம் மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம்-கர்நாடகம் இடையே முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளது.

இதனால் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் வனப்பகுதி களில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வெளியேறும் வன விலங்கு கள் சாலையோ ரங்களுக்கு வந்து நின்று கொள்கின்றன.

சில சமயங்களில் வனப்பகு தியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுகின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி 4 பேர் காரில் சென்று கொண்டு இருந்தனர்.

மலைப்பாதையின் 24-வது கொண்டை ஊசி வளைவில் கார் திரும்பியபோது சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டி அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் காரில் இருந்தவர்கள் சிறுத்தையை தங்களுடைய செல்போன்களில் படம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று சிறுத்தை மறைந்து கொண்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதி களில் இரவு நேரங்களில் சிறுத்தையின் நடமாட்டம் அடிக்கடி நடைபெறுகிறது.

இதனால் மலைப்பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், வாகனங்களை மலைப்பாதையில் நிறுத்த கூடாது என்றும் எச்சரித்த னர்.

X

Maalai Malar
www.maalaimalar.com