என் மலர்
நீங்கள் தேடியது "Panguni Uthra"
- ஏப்ரல் 18-ந்தேதி கோவில் நடை சாத்தப்படுகிறது.
- சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து விளக்கு ஏற்றினார்.
பின்பு காலை 9.45 மணி முதல் 10.45 மணிக்குள் பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றம் தந்திரிகள் கண்ட ரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு வருகிற 10-ந்தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறுகிறது.
மறுநாள் (11-ந்தேதி) பகல் 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு திருவிழா கொடியிறக்கப்படுகிறது. அத்துடன் 10 நாட்கள் ஆராட்டு திருவிழா முடிவடைகிறது.
அதன் தொடர்ச்சியாக சித்திரை விஷூ பண்டிகை மற்றும் மாதாந்திர பூஜை வருவதால் ஆராட்டு திருவிழாவுக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படவில்லை. ஏப்ரல் 14-ந்தேதி சித்திரை விஷூ திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தந்திரிகள் மற்றும் மேல் சாந்தி ஆகியோர் நாணயங்களை கைநீட்டம் வழங்கு வார்கள்.
சித்திரை விஷூ மற்றும் மாதாந்திர பூஜை முடிவ டைந்து ஏப்ரல் 18-ந்தேதி கோவில் நடை சாத்தப்படுகிறது. பங்குனி ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷூ பண்டிகை அடுத் தடுத்து வருவதால் சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும்.
அந்த நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும் என்றும், சித்திரை விஷூ தினத்தில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப் படும் எனவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித் துள்ளது.
பக்தர்கள் 18 நாட்களும் வழக்கமாக நடக்கும் பூஜை களில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம், இரு முடி கட்டு இல்லாமல் வரும் பக்தர்கள் காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டும் சாமி தரிச னத்துக்கு அனுமதிக்கப் படுவார்கள் என்றும் தெரி விக்கப்பட்டு இருக்கிறது.
சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்ற நடைமுறை கடைபிடிக்கப் படுகிறது. உடனடி சாமி தரிசனத்துக்காக பம்பையில் முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. பங்குனி ஆராட்டு திருவிழா இன்று தொடங்கியிருப்பதை தொடர்ந்து சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
- பங்குனி உத்திர தேரோட்டம் கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
- 3 -ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய திருதலங்களில் சென்னிமலை மலை முருகன் கோவில் திகழ்ந்து வருகிறது.
இங்கு முருகனுக்கு தைப் பூசதேர், பங்குனி உத்திர தேர் என 2 திருத்தேர் உள்ளது. ஆண்டு தோறும் தைப்பூச தேரோட்டமும், பங்குனி தேரோட்டமும் சிறப்பாக நடந்து வருகிறது.
இதையொட்டி இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற 2-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. 3 -ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது. 4-ந் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.
இதை தொடர்ந்து 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் ரதாரோகணக்காட்சியும், தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் தேவஸ்தான மண்டபத்தில் அக்னி நட்சத்திர அன்னதான விழாக்குழு சார்பாக அன்னதானம் நடக்கிறது.
மேலும் அன்று மாலை 5 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சியும், 6-ந் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. 7 – ந் தேதி காலை 8 மணிக்கு மகா தரிசனம் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை உதவி ஆணையாளரும் தக்காருமான அன்னக்கொடி,செயல் அலுவலர் சரவணன், ஆய்வாளர் ரவிக்குமார், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், செய்து வருகின்றனர்.
- கொடிமரத்தில் சேவற்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவி லில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி யுடன் தொடங்கியது.
இன்று காலை 10 மணியளவில் கோவிலுக்கு முன்புள்ள கொடிமரத்தில் சேவற்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொ டர்ந்து யாகசாலை பூஜை நடை பெற்றது.
நாளை முதல் வரும் 3-ந் தேதி வரை யாகசாலை பூஜைகள், சாமி தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 4-ந் தேதி கல்யாண சுப்பிர மணியருக்கு திருக்கல்யாண உற்சவம் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. முன்னதாக காலை 9 மணி அளவில் சண்முகருக்கு சிகப்பு சாத்தி அலங்காரம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து 5-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு அபிஷேகம், 8 மணி அளவில் திருப்படி பூஜை விழாவும் நடைபெற உள்ளது.
காலை 9 மணி அளவில் சண்முகருக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம் பிடித்து இழுக்கி றார்கள்.
இதையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் அடிவா ரத்தில் அன்னதானம் நடை பெற உள்ளது. 6-ந் தேதி மாலை 5 மணி அளவில் பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சாமி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாலை 6.30 மணி அளவில் வள்ளி தெய்வா னை உடன் சண்முக பெரு மான் மலர் பல்லக்கில் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.
- குதிரை வாகனத்தில் சாமி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கோபி,
கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில் பங்குனி உத்திர தேர்திருவிழா நடந்து வருகிறது. முன்னதாக கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. 30-ந் தேதி காலை 10 மணியளவில் கோவிலுக்கு முன்புள்ள கொடி மரத்தில் சேவற்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதை தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது. 31-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை யாகசாலை பூஜைகள், சாமி தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 6 மணிக்கு அபிஷேகம், 8 மணி அளவில் திருப்படி பூஜை விழாவும் நடைபெற்றது.
காலை 9மணி அளவில் சண்முகருக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி இன்றுமாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.
இதை யொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை கோயில் அடிவாரத்தில் அன்னதானம் நடைபெறுகிறது.
நாளை 6-ந் தேதி தேதி மாலை 5 மணி அளவில் பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சாமி வலம்வருதல்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாலை 6.30 மணி அளவில் வள்ளி தெய்வானை உடன் சண்முக பெருமான் மலர் பல்லக்கில் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.






