search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்த்திருவிழா"

    தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
    துறையூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேர்த்திருவிழா அடுத்த மாதம்(ஜூன்) 4-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருவிழாவின் முதல் நாளான வருகிற 4-ந் தேதி காலை பெருமாள்மலை மேல் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு துவஜாரோகணமும், அன்றிரவு அன்ன வாகனத்தில் பெருமாள் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

    5-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் சிம்ம வாகனத்திலும், 6-ந் தேதி காலை மற்றும் இரவில் அனுமந்த வாகனத்திலும், 7-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் சேஷ வாகனத்திலும், 8-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் கருட வாகனத்திலும், 9-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் யானை வாகனத்திலும் பெருமாள் வீதி உலா நடக்கிறது. 10-ந் தேதி காலை பல்லக்கில் பெருமாள் வீதி உலாவும், அன்று மதியம் திருக்கல்யாண வைபவமும், இரவில் இந்திர விமானத்தில் பெருமாள் வீதி உலாவும் நடைபெகிறது.

    11-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் குதிரை வாகனத்திலும் பெருமாள் வீதி உலா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந் தேதி காலை தீர்த்தவாரி மற்றும் இரவில் சத்தாவரணம் நடைபெறுகிறது. 14-ந் தேதி காலை திருமஞ்சனம் மற்றும் இரவில் ஆளும் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ் செய்து வருகிறார்.
    தேர்திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகமும், அதனைதொடர்ந்து மாரியம்மனுக்கு மஞ்சல் மற்றும் மலர் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் -விநாயகர் கோவில் உள்ளது. இந்த ஆண்டிற்கான தேர்திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 24-ந் தேதி முதல் தினசரி காலை, மாலை நேரங்களில் மாரியம்மன் குதிரை, சிம்ம வாகன சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மேலும் சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து 3 நாட்கள் தேரோட்டம் நடைபெற்றது. 3-ம் நாள் தேரோட்டம் நிறைவடைந்தது. அன்று இரவு 7.20 மணிக்கு தேரோட்டகொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகமும், அதனைதொடர்ந்து மாரியம்மனுக்கு மஞ்சல் மற்றும் மலர் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசனம் செய்ததனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபன்ன மன்றாடியார், சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சுந்தரராசு மற்றும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலக்கல், கேரளா மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
    இன்று (செவ்வாய்க்கிழமை) பூமிதி விழாவும் நாளை (புதன்கிழமை) பொங்கல் வைத்தல், மா விளக்கும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கிடா வெட்டுதலும் நடைபெறுகிறது.
    பாண்டமங்கலத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் மற்றும் பூமிதி திருவிழா கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. 15-ந் தேதி மறுகாப்பு கட்டுதலும், 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிங்கம், காமதேனு, அன்னம் மற்றும் காளை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் நேற்று முன்தினம் வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று மாலை தேர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) பூமிதி விழாவும் நாளை (புதன்கிழமை) பொங்கல் வைத்தல், மா விளக்கும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கிடா வெட்டுதலும், 27-ந் தேதி மஞ்சள் நீராடலும், 28-ந் தேதி இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    இன்று (செவ்வாய்க்கிழமை) மா விளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீர் உற்சவம், 26-ந் தேதி கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    நாமக்கல் பிரதான சாலையில் பிரசித்தி பெற்ற பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி தேர்த்திருவிழா சுமார் 3 மாத காலம் விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் தேர்த்திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, கடந்த 8-ந் தேதி பொதுமக்கள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவு கோவில் வளாகத்தில் சக்தி அழைப்பு, கம்பம் நடுதல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 9-ந் தேதி காலை 6 மணிக்கு பூச்சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 15-ந் தேதி மறுகாப்பு பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் வடிசோறு மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    நேற்று அதிகாலை அபிஷேக ஆராதனை, அம்மன் அலங்காரம், அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் இரவு மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. நாமக்கல் சந்தை பேட்டை புதூர், ஆர்.பி.புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தூக்குத்தேரில் வைத்து மாரியம்மனை வீதி, வீதியாக தூக்கி சென்றனர்.

    பொதுமக்கள் ஆங்காங்கே கூடிநின்று மாரியம்மனை வழிபட்டனர். நகரம் முழுவதும் வாழை மரம், தோரணங்கள் கட்டப்பட்டு வாண வேடிக்கை, மேள தாளங்கள் முழங்க விழாக்கோலம் பூண்டு இருந்தது. இதையொட்டி பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) மா விளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீர் உற்சவம், 26-ந் தேதி கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து தினசரி வருகிற ஜூலை மாதம் வரை காலை, மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். நகரின் பல்வேறு பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    ×