என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்த்திருவிழா: ஓசூர் மேயர் ஆய்வு
    X

    ஓசூர் பச்சைக்குளம் பகுதியில் மேயர் சத்யா ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    தேர்த்திருவிழா: ஓசூர் மேயர் ஆய்வு

    • தேர்த்திருவிழா வருகிற மார்ச் மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது.
    • பக்தர்கள் வந்து செல்லும் சாலை, இட வசதி குறித்து மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஓசூர்,

    ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் தேர்த்திருவிழா வருகிற மார்ச் மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி, தேரோட்டம் நடைபெறும் தேர்ப்பேட்டை பகுதியில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, நேற்று மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன், தேர்பேட்டைக்கு பக்தர்கள் வந்து செல்லும் சாலை, இட வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிகழ்வில், துணை மேயர் ஆனந்தய்யா, தி.மு.க. கிழக்கு பகுதி செயலாளர் ராமு, மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ், மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×