search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்னி வேனில் புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது
    X

    கோப்புப்படம்.

    ஆம்னி வேனில் புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது

    • புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கடம்பூர்-மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் அஞ்சனை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக ஒரு ஆம்னிவேன் வந்து கொண்டிருந்தது.

    அந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான் மசாலாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்க ப்பட்டது.

    மொத்தம் 8 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.

    இதனையடுத்து வேனில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கோபி அடுத்த துறையாம்பாளையம், இந்திரா நகரை சேர்ந்த முகமது யாசின் (39), கோபி அடுத்த நஞ்சன் கவுண்டன் பாளையம் பகுதி சேர்ந்த மாரிமுத்து (47) என்பதும் தெரிய வந்தது.

    இவர்கள் கர்நாடகா மாநிலத்தி லிருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ஆம்னி வேன் மற்றும் 8 கிலோ புகையிலை பொருட்களை யும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×