என் மலர்
நீங்கள் தேடியது "ஒரே துண்டில்"
- எம்.எஸ்.தோனி,விராட் கோலி படங்களையும் இரு பக்கங்களில் வடிவமைத்துள்ளார்.
- இதை புதிய முயற்சியாக எடுத்து சாதித்துள்ளார் அப்புசாமி.
சென்னிமலை:
சென்னிமலை சென்டெக்ஸ் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் துணி வடிவமைப்பா ளராக பணியாற்றி வருபவர் அப்புசாமி. இவர் தனது ஓய்வு நேரத்தில் பல்வேறு பிரபலங்களை கைத்தறி நெசவு மூலம் வடிவமைப்பது வழக்கம்.
இவர் கருணா நிதி, ஜெயலலிதா, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரின் படங்களை உருவாக்கி உள்ளார்.
தற்போது அந்த வகையில் புதிய முயற்சியாக நவீன தொழிற் நுட்பத்தில் கம்ப்யூட்டரில் வடிவமைத்து எலக்ட்ரானிக் ஜக்காடு மூலம் கடந்த 2 மாதங்களாக முயற்சி செய்து புதிய தொழிற் நுட்ப நெசவின் மூலம் துணியின் 2 புறமும் 2 உருவங்கள் வடிவமைத்து சாதித்துள்ளார்.
இதை தொடர்ந்து தற்போது ஒரு புறம் கிரிக்கெட் வீரர்களான எம். எஸ்.,தோனி, துணியின் மறு புறம் விராட் கோலி என இருவரின் படங்களையும் இரு பக்கங்களில் வடிவமைத்துள்ளார். இந்த துணியின் அளவு அகலம் 20 இன்ச் நீளம் 30 இன்ச் ஆகும்.
இதை கடந்த 60 நாட்க ளுக்கும் மேலாக வடி வமைத்து சாதித்துள்ளார். இப்படி துணியின் இரு பக்கமும் உருவம் வருமாறு நெய்வது மிக கடினம்.
இதை புதிய முயற்சியாக எடுத்து சாதித்துள்ளார் அப்புசாமி. இந்த துணிரகங்களை கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசாக அனுப்ப போவதாக தெரிவித்தார்.






