குடும்ப தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.ஜீவிதா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் 2-வது தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஜீவிதா (30). குமார் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜீவிதா குப்பையை கூட்டி வீட்டின் மூலையில் வைத்துள்ளார். இதை குமார் கேட்டபோது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஒரு வாரமாக கணவன்-மனைவி இருவரும் பேசிக்கொள்ள வில்லை.

இந்நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் வழக்கம் போல் வீட்டின் அறையில் தூங்க சென்றனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் குமார் எழுந்து பார்த்த போது மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டில் உள்ள மற்றொரு அறை தாழிடப்பட்டிருந்தது. அந்த அறையை குமார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது ஜீவிதா தூக்குபோட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com