search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temporary bus stand"

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆய்வு மேற்கொண்டார்.
    • 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதை யொட்டி தினமும் அம்மனு க்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது.

    விழாவையொட்டி பண்ணாரியம்மன் சப்பரம் திருவீதி உலா தொடங்கி சத்தியமங்கலத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்க ளில் நடந்து வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

    இதனையடுத்து குண்டம் விழா வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அதிகாலை நடக்கிறது. இந்த நிலையில் குண்டம் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிர ண்டு சசிமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:

    பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் தமிழகம், கர்நாடக பக்தர்கள் சுமார் 4 லட்சம் பேர் பங்கறேர்பார்கள். இதனால் இந்தாண்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    குண்டம் இறங்கும் பக்தர்க ளுக்கு தனி வழியும், சாமி தரிசனம் செய்யும் பக்தர்களு க்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக 15 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க ப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    குண்டம் திருவிழாவை யொட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேலூர்-அழகர்கோவில் ரோட்டில் புதிய தற்காலிக பஸ் நிலையம் இன்று முதல் செயல்படுகிறது.
    • ஆய்வின்போது மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், கமிஷனர் பட்டுராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள பழைய பஸ் நிலையம் இடித்து ரூ.7.42 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து பஸ்நிலையத்தில் இருந்த பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

    இதன் காரணமாக மேலூரில் அரசு பஸ்கள்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதற்கு சிரமமாக இருந்தது. இது தொடர்பாக வணிகர்கள், பொதுமக்கள் நகராட்சிக்கு புகார் தெரிவித்தனர்.

    மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளார் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரின் மனு அளித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உயர் அதிகாரி களிடம் விசாரணை நடத்தி மேலூர்- அழகர் கோவில் ரோட்டில் உள்ள சுந்தரப்பன் கண்மாய் எதிரே உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவன் கோவில் காலி இடத்தை தற்காலிக பஸ் நிலையத்திற்கு ஒதுக்கி உத்தரவிட்டார்.

    அதன்படி இன்று முதல் மேற்கண்ட இடத்தில் புதிய தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. மதுரை மற்றும் பிற பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் வந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நகராட்சி சார்பில் விரைவில் செய்யப்படும் என நகராட்சி தலைவர் முகமது யாசின் தெரிவித்தர். முன்னதாக இன்று தற்காலிக பஸ் நிலையத்தை அவர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், கமிஷனர் பட்டுராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அனைவரும் விடுமுைற நாட்கள் மற்றும் விழாக்காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
    • கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் சிறு,குறு தொழில் நிறுவனங்கள், ஐ.டி.நிறுவனங்கள், நூற்பாலைகள், என எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு வெளி மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சேலம், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.இதுதவிர கோவையில் ஏராளமான கல்லூரிகளும் உள்ளன.இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    இவர்கள் அனைவரும் விடுமுைற நாட்கள் மற்றும் விழாக்காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் கோவையில் உள்ள காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ்நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அலைமோதும். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

    இன்னும் 11 தினங்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கோவையில் தங்கி வேலை பார்த்து வரும் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். தற்போதே பலரும் ரெயில்கள், பஸ்களில் முன்பதிவு செய்து ஊருக்கு செல்ல தயாராகி விட்டனர். அனைத்து பஸ்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. தற்போது தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

    அந்த வகையில் கோவை மாவட்டத்தில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் சிலர் கூறும் போது, தீபாவளி பண்டிகைையயொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கோவையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    கோவை மாவட்டத்தில் இருந்து நெல்லை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கன்னியாகுமரி, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது.

    இதுதவிர மாநகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட ெநரிசலை தவிர்க்கும் பொருட்டு, தற்காலிக பஸ் நிலையம் அமைத்து சிறப்பு பஸ்களை இயக்குவது ெதாடர்பாக ஆலோசனையும் நடந்து வருகிறது. ஆலோசனையில் கோவையில் எங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. விரைவில் அதற்கான இடங்களை தேர்வு செய்து ஆய்வு செய்யவும் உள்ளோம் என்றனர்.

    கோவை கிரகாஸ்கட் ரோடு, 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி, காந்திபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து அங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சாதாரண உடை அணிந்து மக்களுடன் மக்களாக கலந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதுதவிர கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடக்கிறது. தீபாவளி பண்டிகையை யொட்டி மாவட்டம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ×