விஷம் சாப்பிட்டு பெண் தற்கொலை

லட்சுமி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

பவானி:

பவானி அருகே உள்ள மாமரத்து பாளையம் பெரிய சோமூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி லட்சுமி (46). இவர்களது மகன் தீபக்.

இந்நிலையில் லட்சுமிக்கு கடந்த 5 ஆண்டுகளாக கால், முட்டி வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று கடுமையான கால் வலியால் அவதியடைந்த லட்சுமி எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனைத்தொடர்ந்து மகன் தீபக் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் லட்சுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து தீபக் சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com