என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டது.
    • இதில் கண்ணம்மாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 65).

    கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் சென்று கொண்டு இருந்தனர். கண்ணம்மாள் மொபட்டின் பின் பகுதியில் அமர்ந்து இருந்தார்.

    அப்போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டு இருந்தது. அப்போது மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டது.

    இதில் கண்ணம்மாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (30) என்பவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வானம் கரு மேகத்துடன் திரண்டு இடியுடன் மழை கொட்டியது.
    • மழையால் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. பொது மக்கள் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் வரவே பயப்பட்டனர்.

    ஆனால் கடந்த 2 நாட்களாக மாலையில் மழை கொட்ட தொடங்கியது. நேற்று மாலை 3.30 மணி அளவில் வானம் கரு மேகத்துடன் திரண்டு இடியுடன் மழை கொட்டியது.

    சுமார் 2 மணி நேரம் கொட்டிய மழையால் ரோடுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. வேக மாக கொட்டிய மழையால் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது.

    விவசாயிகள் இந்த மழை மிகுந்த பயன் உள்ளது எனவும், நெல் நடவு பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தனர்.

    • வீட்டில் ஜெகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கன்னியாகுமரி மாவ ட்டம் கிளியூர் முன்சிறை, பார்த்திபபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (27). கேரளாவில் உள்ள பூஞ்சாரு என்ற இடத்தில் தங்கி கட்டி ட வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி ஜெகன் அவரது தம்பி பிரகாசுக்கு போன் செய்து ஓணம் பண்டிகை க்காக ஊருக்கு வருவதாக கூறினார். அதன் பின்னர் அவர் போன் செய்யவில்லை. அதன்பின் ஜெகன் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்தது.

    இந்நிலையில் ஜெகன் ஈரோடு மாவட்டம் நம்பியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட உறவினர் ஒருவர் வீட்டில் 4 நாட்களாக தங்கி உள்ளார்.

    நிலையில் சம்பவத்தன்று உறவினர் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த போது வீட்டில் ஜெகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக ஈரோடு அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு பெரிய அக்ர ஹாரம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (26). இவரது மனைவி புவனா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கார்த்திகேயன் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடை யே பிரச்சனை ஏற்பட்டு மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் புவனா வுக்கு போன் செய்து உனது வீட்டில் துர்நாற்றம் பேசு வதாக கூறினார். உடனடியாக அவரது மனைவி உறவினருடன் வீட்டிற்கு சென்று கதவை தட்டி பார்த்துள்ளார். பதில் ஏதும் வராததால் ஜன்னல் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது கார்த்திகேயன் தூக்கு போட்டு அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் அந்தரகி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(24). இவர் ஈரோடு மாவட்டம் வேப்பம் பாளையம் பிரிவில் தங்கி அங்குள்ள காபி கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவர் தினமும் குடித்துவிட்டு தனது அம்மாவிடம் போனில் சண்டை போட்டு வந்துள்ளார். நிலையில் சம்பவத்தன்று இவர் தங்கி இருந்த அறையின் அருகே உள்ள கழிப்பறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு ஆண்கள் பள்ளிக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
    • இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வந்தது. ஆனால் மாலை நேரத்தில் மாவட்ட த்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இதையடுத்து ஒரு சில நாட்கள் மழை இல்லாமால் இருந்தது. இந்நிலையில் கட ந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் சாரல் மழை யும், ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது.

    இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சாக்கடைகள் நிரம்பி வழிந்தது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி, சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

    மேலும் பல பகுதிகளில் ரோடுகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காண ப்படுகிறது. மூலப்பட்டறை பார்க் ரோடு, கிருஷ்ண செட்டி ரோடு வழியாக பஸ் நிலையம் உள்பட பல் வேறு பகுதிகளுக்கு வாகன ங்கள் சென்று வருகிறது.

    மழை காணமாக அந்த பகுதியில் தேங்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறா ர்கள். மேலும் அந்த வழி யாக வாகனங்கள் செல்லும் போது தேங்கி கிடக்கும் மழைநீர் பொது மக்கள் மீது படுகிறது.

    இதனால் பொதுமக்கள் ஒரு வித தயக்கத்துடனே சென்று வருகிறார்கள். இதே போல் பார்க் ரோட் டில் இருந்து கருங்கல்பாளையம் காமராஜர் அரசு ஆண்கள் பள்ளிக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.

    இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் குப்பக்காடு பகுதியில் உள்ள மண் ரோட்டில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதைபோல் வீரப்பன்சத்தி ரம் பகுதியில் மழை நீர் ேதங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இதே போல் மஜித் அருகே உள்ள ஒட்டுக்கார சின்னையா வீதி, கருங்க ல்பாளையம், வீரப்பன்ச த்திரம், சூரம்பட்டி, பன்னீர் செல்வம் பார்க் பகுதி உள் பட நகரின் பல பகுதிக ளில் ரோடுகள் சேறும், சக தியுமாக காட்சி அளிக்கிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும் குழி யுமாக ேசறும், சகதியுமாக காட்சி அளிக்கும் ரோடு களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரி க்கை வைத்துள்ளனர்.

    • அழிந்து வரும் மரங்களின் பட்டியலில் பனைமரம் இருந்து வருகிறது.
    • தாலுகா அலுவலகத்துக்கு வரவேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கெட்டி சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளப் பிள்ளையார் கோவில் அருகே 10-க்கு மேற்பட்ட பனை மரங்கள் விவசாய நிலத்தின் ஓரமாக உள்ளது.

    அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அவரது நிலத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அந்த மரங்களை பணியாளர்கள் மூலம் வெட்டிக் கொண்டு இருந்த னர். இது குறித்து அந்தியூர் நில வருவாய் ஆய்வாளர் சுதாகருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.

    இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு நில வருவாய் ஆய்வாளர் சுதாகர் வந்து விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து அவர் அழிந்து வரும் மரங்களின் பட்டியலில் பனைமரம் இருந்து வருகிறது.

    அவற்றை வெட்டக்கூடாது என்றும், மேலும் பச்சை மரங்களை வெட்டுவது என்றால் அதற்கு முறைப்படி அனுமதி பெற்று மரங்களை வெட்ட வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

    இதையடுத்து அவர் சென்றவுடன் மீண்டும் அவர்கள் பனை மரங்களை வெட்ட தொடங்கினர். மேலும் இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் சென்று பார்த்தார்.

    அப்போது அங்கிருந்து மரம் வெட்டி கொண்டு இருந்தவர்கள் சென்று விட்டனர். இதில் 2 மரங்கள் மட்டும் வெட்டப்பட்டது. மற்ற மரங்கள் வெட்டப்படா மல் அப்படியே இருந்தது.

    இதில் சம்பந்தப்பட்ட வர்கள் விசாரணைக்காக தாலுகா அலுவலகத்துக்கு வரவேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் அந்த பகுதியில் மீண்டும் மரங்கள் வெட்ட ப்படுகிறதா என அதிகாரி கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    • சத்தியமங்கலம் அடுத்த காளிகுளம் பகுதியில் உள்ள கிளை வாய்க்காலில் உடைப்பு பெரிதாகி அதிக அளவில் நீர்கசிவு ஏற்பட்டது.
    • உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பணியாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி மாலை 120 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்த சிறிது நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடையாத காரணத்தால் நிறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 19-ந் தேதி மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக நீர்திறப்பு அதிகரித்து 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தண்ணீரும் கடைமடை பகுதிக்கு சென்றடைந்தது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த காளிகுளம் பகுதியில் உள்ள கிளை வாய்க்காலில் உடைப்பு பெரிதாகி அதிக அளவில் நீர்கசிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

    இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் காளிகுளம் பகுதியில் முகாமிட்டு உடைப்பை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பணியாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர். பின்னர் சிமெண்ட் சலவை மூலம் அடைத்தனர்.

    இதன் மூலம் நீர்கசிவு சரி செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று பவானிசாகர் அணையில் இருந்து மீண்டும் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    • தாய், மகன் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • பழமையான வீடுகள் இருப்பதால் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் தர்கா வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஜாகீர் உசேன் (45). பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாரம்மா (34). இவர்களுக்கு திருமணமான மகளும், 8-ம் வகுப்பு படிக்கும் முகமது அஸ்தக் (13) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் ஈரோட்டில் பெய்த தொடர் மழை காரணமாக நேற்று அதிகாலை ஜாகீர் உசேனின் வீட்டின் மேல் தள சுவர் இடிந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த சாரம்மா, முகமது அஸ்தாக் மீது விழுந்தது. இதில் தாய், மகன் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தியதில் 60 ஆண்டுகள் பழமையான வீட்டினை முறையாக பராமரிக்காமல் மேல் தளத்தில் தண்ணீர் தொடர்ந்து தேங்கியதாலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து வீட்டினை முறையாக பராமரிக்காமல் உயிரிழப்புக்கு காரணமான வீட்டின் உரிமையாளரான ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் ஏ.ஓ.கே. நகரை சேர்ந்த முகமதுயாசர் (43) என்பவர் மீது 304 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் முகமது யாசரை நிபந்தனை ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.

    இந்த பகுதியில் இதேபோல் பழமையான வீடுகள் இருப்பதால் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.
    • இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு ஈரோடு கோர்ட்டு சம்மன் அனுப்பியது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்துப் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து, பிரசார பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரையும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் அவதூறாக பேசியதாக சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் விசாரணைக்காக, ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் வரும் 11-ம் தேதி ஆஜராகும்படி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பியது. இதைத்தொடர்ந்து திருப்பூரில் இருந்த சீமானிடம் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் நேற்று இந்த சம்மனை வழங்கினர்.

    • இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
    • இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் போன்று வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலையில் நேற்று 4-வது நாளாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    குறிப்பாக கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று 2-வது நாளாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது. நேற்று முன்தினம் 8 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    அதைத்தொடர்ந்து நேற்று இரவும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 69. 20 மில்லி மீட்டர் அதாவது 6 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

    இதேபோல் அம்மாபேட்டை, சென்னிமலை, பெருந்துறை, வரட்டுபள்ளம், கவுந்தப்பாடி பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் நள்ளிரவில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. 4 நாட்களாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    எனினும் காலை நேரம் வெயில் வழக்கும் போல் வாட்டி எடுத்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    கொடுமுடி-69.20, அம்மாபேட்டை-27.40, சென்னிமலை-27, பெருந்துறை-26, வரட்டுபள்ளம்-19.40, ஈரோடு-5, கவுந்தப்பாடி-4.80, பவானி-4, நம்பியூர் பவானிசாகர் கொடிவேரி பகுதியில் தலா ஒரு மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • உருளைக்கிழங்கு லோடு ஏற்றி வந்த லாரி சாலையின் தடுப்பு சுவரில் மோதியது.
    • டிரைவர் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே இன்று அதிகாலை 4 மணி அளவில் பெங்களூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு உருளைக்கிழங்கு லோடு ஏற்றி வந்த லாரி சாலையின் தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் லாரியின் முன்பக்கம் சேதம் ஏற்பட்டது. டிரைவர் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்.

    விடியற்காலை நேரம் என்பதால் டிரைவர் கண் அயர்ந்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சீனாபுரத்தில் கால்நடைச்சந்தை கூடியது.
    • ரூ.1 கோடி வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் கால்நடைச்சந்தை கூடியது.

    இதற்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 90-ம், இதே இன கிடாரிக்கன்றுகள் 120-ம் விற்பனைக்கு வந்திருந்தன.

    இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரிக்கன்றுகள் 150-ம், இது தவிர எருமைக்கன்றுகள் 10-ம் கொண்டு வரப்பட்டிருந்தன.

    இந்த சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்து இருந்த போதிலும், தீவன பற்றாக்குறை காரணமாக மாடுகள் மற்றும் கன்றுகள் கணிசமாக விலை குறைந்து விற்பனையானது.

    விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும்,

    சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும்,

    எருமைக் கன்றுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் விலைபோனது. சந்தையில் மாடுகள் மற்றும் கன்றுகளின் விற்பனை ரூ.1 கோடி வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.21 லட்சத்து 65 ஆயிரத்து 264-க்கு விற்பனையானது.

    சிவகிரி:

    சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    இதில் 937 மூட்டைகள் கொண்ட 29 ஆயிரத்து 149 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காய் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.64.20 காசுகள்,

    அதிகபட்ச விலையாக ரூ.83.10 காசுகள், சராசரி விலையாக ரூ.73.59 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.21 லட்சத்து 65 ஆயிரத்து 264-க்கு விற்பனையானது.

    ×