என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது
    • பவானியில் அதிகபட்சமாக 24 மி.மீ. பதிவு

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மிதமான மழை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடந்த 6 நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதைப்போல் ஈரோடு மாநகர் பகுதி அந்தியூர், சத்தியமங்கலம், கோபி, பவானி போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பவானியில் 24.60 மில்லி மீட்டர் பதிவானது. இதேபோல் கோபி, ஈரோடு மாநகர், நம்பியூர், சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, குண்டேரிபள்ளம், கொடிவேரி, அம்மாபேட்டை, வரட்டு பள்ளம் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    ஈரோடு மாநகர பகுதியில் தொடர்ந்து 6 நாட்களாக இரவு நேரம் பரவலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளித்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:- ஈரோடு-20, கோபி -23.20, பவானி - 24.60, நம்பியூர்-13, சத்தியமங்கலம்-15, எலந்தகுட்டை மேடு-18.20, அம்மாபேட்டை-18, கவுந்தப்பாடி-10, கொடிவேரி அணை-10, வரட்டுபள்ளம்-18.80.

    • அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடமிருந்து 54 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து சென்ற னர். இதில் புதுப்பா ளையம் மாரியம்மன் கோயில் அருகே மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நம்பியூர் பொலவபாளையத்தை சேர்ந்த திருமூர்த்தி (வயது 44) என்பவரை வரப்பா ளையம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனியில் மது விற்பனை யில் ஈடுபட்ட பாரதிபுரத்தை சேர்ந்த முருகன் (40) என்பவரை ஈரோடு தெற்கு போலீசார் கைது செய்தனர்.

    புளியம்பட்டி பகுதியில் மது விற்ற உக்கரம் பகுதியை சேர்ந்த சீரஞ்சிவி (30) என்பரை புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர். நீலம்பாளையம் அருகே மது விற்றுகொண்டிருந்த அண்ணா நகர் புதுகால னியை சேர்ந்த செல்வன் (42) என்பவரை சிறுவலூர் போலீசார் கைது செய்தனர். கொங்கர்பாளையம் அருகே மழ விற்ற அதே பகுதியை சேர்ந்த துரைசாமி (45) என்பவரை பங்களா புதூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 54 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஆசனூர் காட்டே ஜ்ஜில் மது குடிக்க அனு மதித்த நிர்வாகி முத்துசாமி (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • வாய்க்காலில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தார்
    • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி கோவில் புதூரை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 39). இவரது மகன் கிஷோர் (15). இந்நிலையில் சம்பவத்தன்று கிஷோர் வெளியே செல்வதாக கூறிவிட்டு குப்பன் துறை எல்.பி.பி. வாய்க்காலுக்கு குளிக்கச் சென்றார். அப்பொழுது அவர் ஆழமான பகுதியில் பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். பின்னர் தகவல் அறிந்த அவரது தந்தை குமாரசாமி உடனே இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிஷோரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சக்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து குமாரசாமி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் மீது வழக்கு செய்யபட்டுள்ளது
    • அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் 3 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் பவானி மெயின் ரோடு சுண்ணாம்பு ஓடை பஸ் ஸ்டாப் மற்றும் பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக அந்தியூர், கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபினாமத் என்ற குமார் (வயது 21) மற்றும் வினோத் என்ற சிவன், ராமநாதபுரம் மாவட்டம் மண்டலகோட்டை புதூரை சேர்ந்த பிச்சை மகன் காளீஸ்வரன் (39), பெரிய சேமூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் மகன் சதீஷ் (29) மற்றும் குமார் ஆகியோரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் 3 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் கந்தசாமி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (49). இவரது மகன் மணிகண்டன் (19). இவர் எழுமாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 2 மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நிலை குணமாகாததால் மன வேதனை அடைந்த மணிகண்டன் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.

    பின்னர் உறவினர்கள் அவரை முத்தூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து அவரது தந்தை முருகேசன் அரசலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேலன் (54). இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று உடல்நிலை குணமாகாததால் மன வேதனையில் இருந்த வடிவேலன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். பின்னர் அவரை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    அங்கு முதலுதவி பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த வடிவேலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவரது மனைவி காத்தம்மாள் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
    • சூப்பர் 4 சுற்று தொடங்குவதற்கு முன்பு பும்ரா இந்திய அணியோடு இணைந்து கொள்வார்.

    பல்லேகலே:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற்று வருகிறது.

    ஆசிய கோப்பை போட்டியில் 6 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளாம் அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும்.

    தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை தோற்கடித்தது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது லீக் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    நேற்று நடந்த 4-வது போட்டியில் வங்காளதேசம் 89 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. 5-வது லீக் ஆட்டம் இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதுகின்றன.

    இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா நேபாளத்துக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அவருடைய மனைவிக்கு குழந்தை பிறப்பதையொட்டி அவர் நேற்று நாடு திரும்பினார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் அவர் நாடு திரும்பினார்.

    இந்நிலையில் பும்ராவின் மனைவி சஞ்சனாவுக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சூப்பர் 4 சுற்று தொடங்குவதற்கு முன்பு பும்ரா இந்திய அணியோடு இணைந்து கொள்வார்.

    காயம் காரணமாக பும்ரா கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் விளையாடினார். அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கேப்டனாக பணியாற்றினார்.

    இதற்கிடையே ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் கொழும்பில் நடைபெற இருக்கும் ஆட்டங்களை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூப்பர் 4 சுற்றில் 5 ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி அங்கு நடக்கிறது.

    கொழும்பில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நடைபெற இருக்கும். போட்டிகள் தமுல்லா அல்லது ஹம்பன் டோடாவுக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து நாளை இறுதி முடிவு செய்யப்படுகிறது.

    • அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 513-க்கு விற்பனையானது.

    அவல்பூந்துறை:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 15 ஆயிரத்து 182 எண்ணிக்கையிலான 6 ஆயிரத்து 738 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.24.69 காசுகள், சராசரி விலையாக ரூ.24.50 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 513-க்கு விற்பனையானது.

    • மரவள்ளி கிழங்கு அதிகமாக வரத்தாகி வருகிறது.
    • மரவள்ளிக்கிழங்கு ரூ.13 ஆயிரமாக சரிந்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி, மொடக்குறிச்சி, தாளவாடி தாலுகாவில் அதிகப்படியாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.

    மாவுப்பூச்சி தாக்குதலால் சில காலமாக சாகுபடி குறைந்துள்ளது. இருப்பினும் மாவட்டத்தில் சில இடங்களில் பிற மாவட்டங்களில் இருந்தும் மரவள்ளி கிழங்கு அதிகமாக வரத்தாகி வருகிறது.

    இந்நிலையில் ஒரு டன் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற மரவள்ளிக்கிழங்கு வரத்து அதிகரிப்பால் கடந்த ஒரு வாரத்தில் ரூ.3 ஆயிரம் குறைந்து ரூ.12 ஆயிரத்துக்கு விற்கிறது.

    உணவு சிப்ஸ்கான தரமான மரவள்ளிக்கிழங்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரமாக சரிந்து உள்ளது. அதே சமயம் 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி மூட்டை ரூ.5,500-க்கும், ஸ்டார்ச் மாவு 90 கிலோ மூட்டை ரூ.4,500-க்கும் விற்பனை ஆகிறது.

    அரசு சார்பில் மரவள்ளிக்கிழங்கு விலை குறையாமல் தடுக்க குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிப்பதுடன் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.69 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு பவானி சாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் 2 நாட்க ளாக அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து வந்தது. ஆனால் மழை பொழிவு இல்லாததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.69 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 1,927 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 266 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது.

    அணையில் இரு ந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.95 கன அடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.55 கன அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.42 கனஅடியாக உள்ளது.

    • மனம் உடைந்து காணப்பட்ட பார்வதி சேலையால் தூக்குபோட்டு கொண்டார்.
    • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி பார்வதி (வயது 56). பார்வதி மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவருக்கு அதிக கடன் ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து பணம் கட்ட முடியாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடன் கட்டுவதற்காக பணம் கிடைக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் திடீரென நேற்று இரவு சேலையால் தூக்கு போட்டு கொண்டார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி இயற்கை அழகை ரசித்து விட்டு செல்கிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் அனைத்து பகுதிக ளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் சூறாவளி காற் றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

    பகல் நேரங்களில் வெயி லின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதே போல் மாவட்டத்தில் உள்ள வன ப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி, தாளவாடி, ஆச னூர் உட்பட்ட வனப்பகுதி களில் நேற்று மாலை பரவ லாக மழை பெய்தது. இன்று காலை தாளவாடி வனப் பகுதி மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது. தாளவாடி வனப்பகுதியில் எங்கு பார்த்தாலும் பசு மையை காண முடிகிறது. இதே போல் அந்தியூர் அருகே மைசூர் செல்லும் வழியில் பர்கூர் மலைப்பகுதி அமைந்துள்ளது.

    இந்த மலைப்பகுதியின் இரு புறங்களிலும் மரங்கள், செடி, கொடிகள் மீது மழை துளிகள் படர்ந்து பசுமை யாக காட்சி அளித்து வருகிறது. மேலும் மலைப்பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒரு வித மகிழ்ச்சியுடன் சென்று வருகிறார்கள். மேலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி இயற்கை அழகை ரசித்து விட்டு செல்கிறார்கள்.

    • விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போதை பொருட்களை விற்பனை செய்த சிக்காந்தர் என்பவரை கைது செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முல வாய்க்கால் டாஸ்மாக், சிங்கி ரிபாளையம் டாஸ்மார்க் கடை அருகே அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடை த்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு அனுமதியின்றி மதுவிற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் மரு தவாயல் பகுதியை சேர்ந்த காசி மகன் கோபால் (வயது 46),

    நம்பியூர் தாலுகா கரட்டுப்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் பாலமுருகன் (30) ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு ஈ.பி.பி.நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்த சிக்காந்தர் (56 என்பவரை கைது செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.

    மேலும் அவர் விற்பனை க்காக வைத்திருந்த புகையி லைப் பொருட்களை பறி முதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×