என் மலர்tooltip icon

    ஈரோடு

    • அதிகமாக மது வாங்கி குடித்து விட்டு கடை அருகிலேயே மயங்கி கிடந்தார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் அடுத்த திருகண்டேஸ்வரத்தை சேர்ந்தவர் வசந்த் (28). இவர் பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் உள்ள ஒரு டைரி நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார்.

    இவருக்கு குடி பழக்கம் உண்டு. சம்பவத்தன்று இரவு பெருந்துறை பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடையில் அளவுக்கு அதிகமாக மது வாங்கி குடித்து விட்டு கடை அருகிலேயே மயங்கி கிடந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வசந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டிருந்த செந்தில் முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செல்லச்சாமி மகன் செந்தில் முருகன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதைபோல் ஹாசனூர், ஈ.செட்டிபாளையம் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மது அருந்திய குற்றத்திற்காக வட மாநிலத்தை சேர்ந்த பிதான் குமார், ஈ.செட்டிபாளையம் தங்கராசு (36) பழையசூரிபாளையம் அருள்குமார் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிந்தது.
    • பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த அரக்கன் கோட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் சாமிய ப்பன் (48). இவர் சொந்தமாக ஆம்னி வைத்துள்ளார். இந்த வேனில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு உள்ளது.

    இதனை சரி செய்வதற்காக கள்ளிப்பட்டி பகுதிக்கு ஆம்னி வேனை சாமியப்பன் ஓட்டி சென்றார். இதையடுத்து வேன் கள்ளிப்பட்டி சின்னாரி தோட்டம் அருகே வந்து கொண்டு இருந்தது.

    அப்போது திடீரென அந்த ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சாமியப்பன் வேனை அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி நிறுத்தி விட்டு காரை விட்டு இறங்கி உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவலறி ந்து கோபி தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் ஆம்னி வேன் முழுமையாக எரிந்தது.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆம்னி வேனில் ஏற்பட்ட பெட்ரோல் கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிய வந்தது.

    • மோட்டார் சைக்களில் இருந்து ஈஸ்வரி தடுமாறி கீழே விழந்தார்.
    • சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி இறந்தார்.

    பெருந்துறை:

    பவானி அடுத்த பாண்டி யம்பாளையத்தை சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 52). இவர் பெருந்துறை அருகி லுள்ள கள்ளாங்காட்டுபுதூர் அங்கன்வாடி மையத்தில் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று ஈஸ்வரி தன் மகன் கண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் பெருந்துறைக்கு வந்து பொருட்கள் வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பி செல்லும் வழியில் பெருந்துறை, அண்ணாசிலை அருகில் மோட்டார் சைக்க ளில் இருந்து ஈஸ்வரி தடு மாறி கீழே விழந்தார்.

    இதில் பலத்த காயம் அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கினார்கள்.
    • ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.

    சென்னிமலை:

    கந்த சஷ்டி கவசம் அர ங்கேறிய தலமாக விள ங்கக்கூடிய சென்னிமலை முருகன் கோவிலில் வார ந்தோறும் செவ்வாய்க்கி ழமை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தருகிறார்கள்.

    இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் சஷ்டி திதியும் இணைந்து வந்ததால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கினார்கள்.

    அதிகாலை 5.30 மணிக்கு நடை திறந்த பொழுது பலர் கோவிலுக்கு முன்பு காத்திருந்து கோ பூஜை பார்த்து தரிசனம் செய்தனர்.

    அதிகப்படியான பக்தர்கள் திரண்டதால் பொது தரிசனத்தில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.

    சிறப்பு தரிசனத்திலேயும் அரை மணி நேரம் காத்தி ருந்து முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.

    மலை மீது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்திலும், மலை பாதையிலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதை சரி செய்வதற்காக தனியார் செக்யூரிட்டிகளை கோவில் நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்தனர். மலைக்கோவில் பஸ்களும் பக்தர்கள் வசதிக்காக தொடர்ந்து இயக்கப்பட்டது.

    • மனவேதனை அடைந்த கோகுல்ராஜ் வீட்டின் பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த நல்லாந்தொழுவு டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (26). கோவையில் ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தார்.

    கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கோகுல்ராஜின் தாய் லதா, கோகுல்ராஜை வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    இதில் மனவேதனை அடைந்த கோகுல்ராஜ் வீட்டின் பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறச்சலூர் போலீசார் தகவல் அறிந்து கோகுல்ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூதாட்டம் நடைபெறுவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட கோழியை மீட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோனர்பாளையம் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கோழிகளை சண்டையிட வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த ரெட்டிபாளையத்தை சேர்ந்த பெருமாள் மகன் மணி,

    வெள்ளிதிருப்பூரை சேர்ந்த செல்லீஸ்வரன் மகன் விக்னேஷ், நெருஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபால் மகன் கணபதி, மைக்கேல் பாளையம் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட கோழியை மீட்டனர். பின்னர் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீட் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. தமிழகத்திற்கு எதிரானது. கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது.
    • தமிழகத்தில் இளைஞர்களிடம் மது, சூது,போதை பொருட்கள் அதிகமாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலக அளவில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா பல பரிசுகளை பெற்று வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் உலக அளவில் பதக்கங்களை வாங்க வேண்டும் என்பது எங்களது நோக்கம். குறிப்பாக கிராமபுற மாணவ-மாணவிகள் அதிகமாக பங்கேற்க தொடங்கி உள்ளனர். தமிழக அரசு இன்னும் ஊக்குவிக்க வேண்டும்.

    நீண்ட காலமாக அத்திக்கடவு-அவினாசி திட்டம் முடிக்கப்படாமல் இருந்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக 90 சதவீதம் முடிவடைந்தும் இன்னும் மக்கள் பபண்பாட்டிற்கு வராமல் உள்ளது.

    ஆகஸ்ட் மாதத்தில் குறைவான மழை கிடைத்து உள்ளது. உடனடியாக அத்திகடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்ற வேண்டும். பாண்டியாறு-புண்ணம்பழா திட்டம், காவிரி குண்டாறு திட்டம் ஆகிய திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

    விசைத்தறி கூடங்கள் அதிக அளவில் மூடப்பட்டு உள்ளன. விசைத்தறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. பின்னலாடை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. மேகதாதுவில் அணை கட்டுவது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்றம் கூறியும் அதனை ஏற்க மறுக்கிறது கர்நாடகா. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளையும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கீழ் கொண்டு வர வேண்டும்.

    நெல் குவிண்டாலுக்கு 7 ரூபாய் மட்டுமே தமிழக அரசு உயர்த்தி உள்ளது. 500 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் 10 தடுப்பு அணைகள் நாங்கள் கேட்டோம். ஆனால் தற்போது 10 மணல் குவாரிகளை உருவாக்கி உள்ளது இந்த அரசு.

    என்.எல்.சி. கடலூர் மாவட்டத்தின் பிரச்சனை இல்லை. இது தமிழகத்தின் பிரச்சனை. தமிழக அரசு 67 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்ளை என்.எல்.சி கொடுத்து உள்ளது. விளை நிலங்களை அழித்து மின்சாரம் தேவையில்லை.

    காற்றாலை, நீர் மூலமாக தயாரிக்கலாம். தமிழகத்தின் நான்காவது நெல் உற்பத்தி பகுதியினை தற்போது தமிழக அரசு என்.எல்.சி. நிர்வாகத்தின் மூலம் விளை நிலங்களை அழித்து வருகிறது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுவதுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது குறித்து உள்ள சாத்திய கூறுகளை பார்க்க வேண்டும். வாக்கு எந்திரங்கள் 12 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே உள்ளது. பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் ஒரே நேர்த்தில் நடத்த தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் இல்லை.

    இதற்காக அமைக்கப்பட்ட குழு என்ன பரிந்துரை கூறுகிறதோ அதற்கு பிறகு நாங்கள் கருத்து தெரிவிப்போம். விரைவில் கூட்டணி குறித்து எங்களது முடிவை அறிவிப்போம்.

    நீட் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. தமிழகத்திற்கு எதிரானது. கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. தகுதியான மருத்துவரை நீட் தேர்வு உருவாக்கவில்லை. மருத்துவ படிப்பு என்பது வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். நீட் தேர்வு குறித்து கவர்னர் தனிப்பட்ட கருத்துக்களை திணிக்க கூடாது. கவர்னர் நடுநிலையாக செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் இளைஞர்களிடம் மது, சூது,போதை பொருட்கள் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் போதை பொருட்கள் கட்டுப்பாட்டை மீறி அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு பிரிவில் போதுமான காவலர்கள் இல்லை. தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் மனு அளித்தனர்
    • எங்கள் கோரி க்கைகள் நிறைவேற்ற கால தாமதம் ஏற்பட்டால் தீர்வு கிடைக்கும் வரை சென்னை யில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.

    ஈரோடு-

    ஈரோடு மாவட்ட கலெ க்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. அப்போது தமிழக பகுதி நேர ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த சிறப்பாசி ரியர்கள் வந்தனர். தொட ர்ந்து அவர்கள் கோரி க்கைகள் வலியுறுத்தி கோஷ மிட்டனர். இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் அரசு கொடுத்த வாக்குறு திகளை நிறைவேற்ற கோரி யும் பகுதி நேர சிறப்பு ஆசிரி யர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தியும் ஒரு மனு கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறியிரு ப்பதாவது:- அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் முறையாக நியமனம் செய்யப்பட்டு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதிய த்தில் பணியாற்றி வரு கிறோம். கடந்த 13 ஆண்டு களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல முறை கோரிக்கை, உண்ணா விரதம், மற்றும் போராட்ட ங்கள் மூலம் வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் கோரிக்கைகள் போராட்டம் மற்றும் அதி காரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே எங்கள் கோரி க்கைகள் நிறைவேற்ற வேண்டும். எங்கள் கோரி க்கைகள் நிறைவேற்ற கால தாமதம் ஏற்பட்டால் தீர்வு கிடைக்கும் வரை சென்னை யில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு நீதி முகாம் நடந்தது. அப்போது சென்னிமலை காந்தி நகர் பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவரது மனைவி வளர்மதி (வயது 43) மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் திடீரென தான் கொண்டு வந்த மண் எண்ணையை எடுத்து தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வளர்மதி மீது தண்ணீர் ஊற்றி அவரை மீட்டனர்.

    பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் இவரது கணவர் சாமிநாதன் இவரை விட்டுவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சாமிநாதன் வளர்மதியின் தாலிசெயினை பிடுங்கி விட்டு வளர்மதியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி வளர்மதி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் வளர்மதி தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • பவானி புதிய பஸ் நிலையம் அருகில் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • புதிய பஸ் நிலையம் அருகில் அனைவருக்கும் வாழ்வாதாரம் பாதிக்காமல் புதிய தினசரி காய்கனி மார்க்கெட் வளாகம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் போட்டு கண்டன உரையாற்றினர்

    பவானி,

    பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் பவானி வட்டார ஏ.ஐ.டி.யு.சி. தினசரி காய்கனி மார்க்கெட் அழுதும் பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் தினசரி காய்கனி மார்க்கெட் வளாகம் அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானி தினசரி காய்கறி மார்க்கெட் வளாகத்தை புதிய பஸ் நிலையம் அருகில் அமைக்க கோரியும், தற்போது இயங்கி வரும் தினசரி மார்க்கெட் (வார சந்தை வளாகம்) வளாகம் பொதுமக்களுக்கும் காய்கறி கொண்டு வரும் வியாபாரிகள் வண்டி வாகனங்களுக்கும் செல்வதற்கு மிகவும் குறுகலான பாதையாக உள்ளதால் வியாபாரிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், புளியம்பட்டி போன்ற நகராட்சி பகுதியில் காய்கறி மார்க்கெட் பஸ் நிலையம் அருகிலும் மெயின் ரோட்டிலும் அமைந்துள்ளது. எனவே பவானி தினசரி மார்க்கெட்டை பவானி புதிய பஸ் நிலையம் அருகில் அமைத்திட வேண்டும். பவானி புதிய பஸ் நிலையம் அருகில் நகராட்சிக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலம் உள்ளது. பவானி நகராட்சியில் தினசரி காய்கனி மார்க்கெட் இடம் மாற்றுவது குறித்து பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் சர்வ கட்சினர் கலந்து கொண்ட கருத்து கேட்பு கூட்டம் 2 முறை நடைபெற்றது.

    ஆகவே நகராட்சி நிர்வாகம் கேட்பு கூட்ட முடிவின்படி பொதுமக்கள் மார்க்கெட் வியாபாரிகள், விவசாயிகள் நலன் கருதி தினசரி காய்கனி மார்க்கெட் வளாகத்தை புதிய பஸ் நிலையம் அருகே அமைத்து கொடுக்க வேண்டும் எனவும், வாரச்சந்தையில் தற்போது இடித்து புதிதாக கட்டப்படுமானல் இதில் 236 வியாபாரிகள் உள்ளனர். ஆனால் 120 முதல் 150 வரை மட்டுமே புதிய கடை கட்ட முடியும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கடை இல்லாமல் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கும்.

    எனவே புதிய பஸ் நிலையம் அருகில் அனைவருக்கும் வாழ்வாதாரம் பாதிக்காமல் புதிய தினசரி காய்கனி மார்க்கெட் வளாகம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் போட்டு கண்டன உரையாற்றினர்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர் மன்ற துணைத் தலைவர் மணி, மாவட்ட செயலாளர் சிவராமன், தலைவர் சந்திரசேகர், பவானி வட்டார ஏ.ஐ.டி.யு.சி. தினசரி காய்கனி மார்க்கெட் அழுகும் பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சண்முகம், தனக்கொடி, மாதேஸ்வரன், கார்த்தி, சரவணன் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஈரோடு.

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கோவை மாவட்டம் அம்மன் நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன் என்ற கிஷோர் (வயது 26), கோவை மாவட்டம் கள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் மனோஜ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் எடையுள்ள ரூ 33 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×