என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோபி போலீஸ் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற நர்சு மீது வழக்கு
    X

    கோபி போலீஸ் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற நர்சு மீது வழக்கு

    • கோபி போலீஸ் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற நர்சு மீது வழக்கு பதியபட்டுள்ளது
    • இது குறித்து கோபி போலீசார் நர்சு ஜெயசுதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடத்தூர்,

    திருப்பூர் மாவட்டம் பல்ல–க–வுண்–டன்–பா–ளைத்–தைச் சேர்ந்–த–வர் மாரி–முத்து. இவ–ரு–டைய மகள் ஜெய–சுதா (வயது 24). இவர் கோவை–யில் உள்ள ஒரு தனி–யார் மருத்துவமனையில் நர்–சாக வேலை செய்து வரு–கி–றார். இந்த நிலை–யில் ஜெய–சுதா சத்–தி–ய–மங்–க–லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை–யத்–தில் கடந்த ஆண்டு ஈரோடு மாவட்–டம் கோபி அருகே உள்ள வாணிப்–புத்–தூரை சேர்ந்த வசந்த் என்–ப–வர் தன்னை காதலித்து ஏமாற்–றி–ய–தா–க–வும், இத–னால் அவர் மீது நட–வ–டிக்கை எடுக்க கோரி–யும் புகார் கொடுத்–துள்–ளார்.

    ஆனால் போலீ–சார் எந்–த–வித நடவடி க்கையும் எடுக்–க– வில்லை என்று கூறப்–ப–டு–கிறது. இதைத்–தொ–டர்ந்து அவர் நேற்று மாலை கோபி போலீஸ் நிலை–யம் சென்–றுள்–ளார். பின்–னர் அங்–கி–ருந்த போலீ–சாரி–டம் நடந்த விவ–ரங்–களை கூறி அது சம்–பந்–த–மாக வழக்கு பதிவு செய்ய வேண்–டும் என்று கூறி–யுள்–ளார். அதற்கு அங்–கி–ருந்த போலீ–சார் அவ–ரி–டம், இது–சம்–பந்–த–மாக ஏற்–க–னவே வழக்கு பதிவு செய்–யப்–பட்–டுள்–ளது. எனவே ஒரே சம்–ப–வத்தை மற்–றொரு வழக்–காக பதிவு செய்ய இய–லாது என கூறி–யுள்–ள–னர்.

    ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்–த–தாக கூறப்–ப–டு–கிறது. பின்–னர் அவர் போலீஸ் நிலை–யம் முன்பு தான் மறைத்து வைத்–தி–ருந்த பெட்–ரோல் கேனை எடுத்து அதி–லி–ருந்த பெட்–ரோலை உடல் மீது ஊற்றி தீயை பற்ற வைத்து தற்–கொ–லைக்கு முயன்–றார். உடனே அங்–கி–ருந்த போலீசார் ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தி, தண்–ணீரை ஊற்–றி–னார்–கள். பின்–னர் அவரை சிகிச்–சைக்–காக கோபி அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். மேலும் இது குறித்து கோபி போலீ–சார் நர்சு ஜெய–சுதா மீது வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்–ப–வம் அந்த பகு–தி–யில் பெரும் பர–ப–ரப்பை ஏற்படுத்–தி–யது.

    Next Story
    ×