என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருந்துறை அருகே பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது
    X

    பெருந்துறை அருகே பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது

    • 17 வயது மாணவி குளிக்கும்போது ஜீவானந்தம் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.
    • காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவானந்தத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் விருப்பம்பதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 23). பெயிண்டர். இவர் அந்த பகுதியில் பெண்கள் குளியலறையில் குளிக்கும் போது அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று 17 வயது மாணவி குளிக்கும்போது ஜீவானந்தம் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதை அடுத்து காஞ்சி கோவில் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் காஞ்சிகோவில் போலீசார் ஜீவானந்திடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் அவர்கள் செல்போனை சோதனை செய்த போது அதில் அந்த 17 வயது மாணவி குளித்த வீடியோ இருந்ததை உறுதி செய்தனர்.

    இதையஅடுத்து காஞ்சிக்கோவில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜீவானந்தத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×