என் மலர்
ஈரோடு
- அனுமதியின்றி மதுவிற்ற 4 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது
- 24 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யபட்டன
ஈரோடு,
ஈரோடு மாவட்ட பகுதியில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வெள்ளி திருப்பூர், தாளவாடி, பவானி சாகர் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த வைரபாளை யம் பட்டேல் தெருவை சே ர்ந்த முத்துசாமி மகன் சாமி நாதன் (வயது 53), திகினாரை அம்பேத்கர் தெரு மன்ஞ்சை யா மகன் மணி (34), பவானி சாகர் அண்ணா நகர் குப்புசா மி மகன் முருகேசன், அந்தியூர் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் அல்லிமுத்து (58)ஆகியோரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 24 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எழுமாத்தூர், கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.95 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை நடைபெற்றது
- நிலக்கடலைக்காய் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.65.45-க்கு விற்பனையானது
கொடுமுடி,
எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனை க்கான ஏலம் நடந்தது. இதில் ஆயிரத்து 484 மூட்டைகள் கொண்ட 71 ஆயிரத்து 669 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது. விற்பனையான பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ79.90-க்கும், அதிகபட்ச விலையாக ரூ81.81-க்கும், சராசரி விலையாக ரூ.81.70 என்ற விலைகளிலும், 2-ம் தர பரு ப்பு குறைந்தபட்ச விலையாக ரூ63.35-க்கும், அதிகபட்ச விலையாக ரூ75.39-க்கும், சராசரி விலையாக ரூ72.60 என்ற விலைகளில் மொத்தம் ரூ.55 இலட்சத்து 47 ஆயிரத்து 858-க்கு விற்பனையானது.
இதேபோல கொடுமுடி ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு, நிலக்கடைலக்காய் விற்ப னைக்கான ஏலம் நடந்தது. இதில் 13 ஆயிரத்து 695 எண்ணிக்கையிலான 4 ஆயிரத்து 671 கிலோ எடை யுள்ள தேங்காய்கள் கி லோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.17.90- க்கும், அதிகபட்ச விலையாக ரூ.23.60-க்கும், சராசரி விலையாக ரூ.22.89 என்ற விலைகளில் மொத்தம் ரூ.97 ஆயிரத்து 413-க்கு விற்பனையானது.
இதனை அடுத்து தேங்காய் பருப்புக்கான ஏலத்தில் 891 மூட்டைகள் கொண்ட 43 ஆயிரத்து 737 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது. விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.78.99-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.80.39-க்கும், சராசரி விலையாக ரூ.79.99 என்ற விலைகளிலும், 2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.63.80-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.78.99-க்கும், சராசரி விலையாக ரூ.76.78 என்ற விலைகளில் மொத்தம் ரூ.33 இலட்சத்து 12 ஆயிரத்து 943-க்கு விற்பனையானது.
இவற்றை அடுத்து நிலக்க டலைக்காய் விற்பனை க்கான ஏலம் நடந்தது. இதில் 7 ஆயிரத்து 972 கிலோ எடையுள்ள 278 மூட்டைகள் கொண்ட நிலக்கடலைக்காய் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.65.45-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.83.30-க்கும், சராசரி விலையாக ரூ.80.50 என்ற விலைகளி்ல் மொத்தம் ரூ.5 இலட்சத்து 56 ஆயிரத்து 737-க்கு விற்பனையானது. ஆகமொத்தம் எழுமா த்தூர், கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனைக்கூட ங்களில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை க்காய் சேர்த்து ரூ.95 இலட்சத்து 14 ஆயிரத்து 951-க்கு விற்பனையானது.
- சிவகிரி அருகே கஞ்சா செடி வளர்த்த முதியவர் கைது செய்யபட்டார்
- அவர்மீது 6 கிலோ கஞ்சா பயிரிட்டிருந்ததாக வழக்கு பதியபட்டுள்ளது
சிவகிரி,
சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்ல ன்கோயில் கிராமம் வள்ளிய ம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ்(58) விவசாயி. இவரது கரும்பு தோட்ட த்தில் கஞ்சா வளர்த்து வருவதாக ஈரோடு மதுவில க்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மாறு வேடத்தில் அங்கு சென்ற போலீசார் நடரா ஜின் கரும்பு தோட்டத்தை சோ தனையிட்டபோது அங்கு ஒரு வயல் நிறைய கஞ்சா பயிரை பயிரிட்டி ருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீ சார் நடராஜை கைது செய்து ள்ளனர். அவர்மீது 6 கிலோ கஞ்சா பயிரிட்டிருந்ததாக வழக்கு பதியபட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1.95 லட்சம் ஆகும். நடராஜ் கஞ்சா பயிரிட்டிருப்பது குறித்து தேனியில் சிக்கிய குற்றவாளி ஒருவர் போலீசாரிடம் அளி த்த தகவலின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாக தெரியவந்துள்ளது.
- கோபி போலீஸ் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற நர்சு மீது வழக்கு பதியபட்டுள்ளது
- இது குறித்து கோபி போலீசார் நர்சு ஜெயசுதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தூர்,
திருப்பூர் மாவட்டம் பல்ல–க–வுண்–டன்–பா–ளைத்–தைச் சேர்ந்–த–வர் மாரி–முத்து. இவ–ரு–டைய மகள் ஜெய–சுதா (வயது 24). இவர் கோவை–யில் உள்ள ஒரு தனி–யார் மருத்துவமனையில் நர்–சாக வேலை செய்து வரு–கி–றார். இந்த நிலை–யில் ஜெய–சுதா சத்–தி–ய–மங்–க–லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை–யத்–தில் கடந்த ஆண்டு ஈரோடு மாவட்–டம் கோபி அருகே உள்ள வாணிப்–புத்–தூரை சேர்ந்த வசந்த் என்–ப–வர் தன்னை காதலித்து ஏமாற்–றி–ய–தா–க–வும், இத–னால் அவர் மீது நட–வ–டிக்கை எடுக்க கோரி–யும் புகார் கொடுத்–துள்–ளார்.
ஆனால் போலீ–சார் எந்–த–வித நடவடி க்கையும் எடுக்–க– வில்லை என்று கூறப்–ப–டு–கிறது. இதைத்–தொ–டர்ந்து அவர் நேற்று மாலை கோபி போலீஸ் நிலை–யம் சென்–றுள்–ளார். பின்–னர் அங்–கி–ருந்த போலீ–சாரி–டம் நடந்த விவ–ரங்–களை கூறி அது சம்–பந்–த–மாக வழக்கு பதிவு செய்ய வேண்–டும் என்று கூறி–யுள்–ளார். அதற்கு அங்–கி–ருந்த போலீ–சார் அவ–ரி–டம், இது–சம்–பந்–த–மாக ஏற்–க–னவே வழக்கு பதிவு செய்–யப்–பட்–டுள்–ளது. எனவே ஒரே சம்–ப–வத்தை மற்–றொரு வழக்–காக பதிவு செய்ய இய–லாது என கூறி–யுள்–ள–னர்.
ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்–த–தாக கூறப்–ப–டு–கிறது. பின்–னர் அவர் போலீஸ் நிலை–யம் முன்பு தான் மறைத்து வைத்–தி–ருந்த பெட்–ரோல் கேனை எடுத்து அதி–லி–ருந்த பெட்–ரோலை உடல் மீது ஊற்றி தீயை பற்ற வைத்து தற்–கொ–லைக்கு முயன்–றார். உடனே அங்–கி–ருந்த போலீசார் ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தி, தண்–ணீரை ஊற்–றி–னார்–கள். பின்–னர் அவரை சிகிச்–சைக்–காக கோபி அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். மேலும் இது குறித்து கோபி போலீ–சார் நர்சு ஜெய–சுதா மீது வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்–ப–வம் அந்த பகு–தி–யில் பெரும் பர–ப–ரப்பை ஏற்படுத்–தி–யது.
- வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை 2-வது நாளாக தேடி வருகின்றனர்
- இது குறித்து நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
நம்பியூர்,
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள நடுப்பாளையம் கிழக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பிரியா தனது வீட்டின் அருகில் உள்ள கீழ்பவானி வாய்க்கா லுக்கு குளிக்க சென்றார். அதை தொடர்ந்து தான் எடுத்து வந்த செல்போன் மற்றும் காலணிகளை கரை யில் வைத்து விட்டு கீழ் பவா னி வாய்க்காலில் இறங்கி உள்ளார். கீழ்பவா னி வா ய்க்கலில் பாசனத்தி ற்காக அதிகளவில் தண்ணீர் திறக்க ப்பட்டு உள்ளதால் கீழ் பவானி வாய்க்காலின் இரு கரை களையும் தொட்டபடி தண்ணீர் வேகமாக செல் கிறது. தண்ணீர் அதிகளவில் சென்றதால் பிரியா வாய்க்காலில் குளித்த போது திடீரென நீரில் மூழ்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது உறவினர் மற்றும் தீயணை ப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கீழ்பவானி வாய்க்கா லில் இறங்கி பிரியாவை தேடினர். ஆனால் பிரியா குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்க வில்லை. தொடர்ந்து அவர்கள் தேடி வருகிறன்ற னர். இந்த நிலையில் இன்று காலை முதல் 2-வது நாளாக தொடர்ந்து தீய ணைப்பு வீரர்கள் வாய்க்காலின் பல பகுதி களில் அவரை தேடி வருகி ன்றனர்.இது குறித்து நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77 அடியாக குறைந்து காணப்பட்டது
- வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.36 கனஅடியாக உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொ ள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீல கிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறை ந்துள்ளது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 77.57 அடி யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 387 கன அடி நீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து கீழ்ப வானி வாய்க்கால் பாசன த்திற்காக 2,300 கன அடியும், காளிங்கராயன் பாச னத்திற்கு 400 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.92 கன அடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.19 கன அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.36 கனஅடியாக உள்ளது.
- வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.18 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
- சராசரி விலையாக கிலோ 21 ரூபாய் 85 காசுக்கு ஏலம் போனது.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,700 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 70 காசுக்கும், அதிகபட்ச விலையாக 22 ரூபாய் 11 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 85 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 833 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 18 ஆயிரத்து 218 ரூபாய்க்கு விற்பனையானது.
- பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
- இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு,
ஈரோடு அடுத்த ஆர்.என்.புதூர் மாயபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 38). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோகனசுந்தரத்தின் மனைவி கணவரைப் பிரிந்து மகனுடன் சென்று விட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று மோகனசுந்தரம் பெருமாள் மலை மண் கரட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சு மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகனசுந்தரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
- இதையடுத்து நாட்ராயன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை பெறுவதற்காக கொடுமுடி அரசு மருத்து வமனைக்கு சென்றுள்ளார்.
சிவகிரி,
சிவகிரியை அடுத்த அம்ம ன்கோயில் அருகே பூலக்காடு என்ற இடத்தில் அரசு மதுப்பா ட்டில்கள் சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் கடை திறக்கும்வரை காத்திருக்க முடியாத மதுப்பிரியர்கள் காலையிலேயே அங்கு சென்று மதுவை வாங்கி அருந்துவது வாடிக்கை. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல அங்கு விற்ற மதுவை வாங்க நாட்ராயன் என்ற நபர் சென்று ள்ளார். அப்போது அங்கே மது வாங்க வந்த வேறு ஒரு நபரை கண்ட நாட்ராயன் அந்த நபர் அங்கு வந்திரு ப்பது குறித்து அங்கே வந்த நபரின் உறவினருக்கு செ ல்போனில் தகவல் அளித்து ள்ளார்.
இதனை கவனித்த அந்த நபர் இது குறித்து நா ட்ராயனிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியு ள்ளது. இதில் நாட்ராயனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாட்ராயன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை பெறுவதற்காக கொடுமுடி அரசு மருத்து வமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு சிகிச்சைக்கு செல்லும்படி பரிந்துரைத்து அனுப்பி யுள்ளனர்.
தற்போது கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் நாட்ராயன் சிகிச்சையில் உள்ளா ர். இந்த நிலையில் சம்பவம் குறித்து அறிந்த சிவகிரி போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டு, பின்னர் அம்மன்கோயில் டாஸ்மாக் பாருக்கு சென்று அங்கு கடை திறப்பதற்கு முன்னரே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது ப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தையை பார்த்தபோது எவ்வித அசைவும், மூச்சின்றியும் இருந்தது.
- சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை கொளத்துப்பாளையம் சாலை சென்னியாண்டவர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி ஸ்ரீதரின் மனைவிக்கு 2-வதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை 900 கிராம் எடையுடன் பிறந்ததால், தொடர்ந்து 22 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 24-ம் தேதி குழந்தையை மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ஸ்ரீதர் வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்நிலையில் கடந்த 4-ம் தேதி ஸ்ரீதரின் மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்தார்.
மறுநாளான நேற்று காலை குழந்தையை பார்த்தபோது எவ்வித அசைவும், மூச்சின்றியும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் அவரது மனைவியுடன் குழந்தையை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விற்பனைக்காக வைத்திருந்த 39 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதி யில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது சென்னி மலை, தாளவாடி,பவானி சாகர், கவுந்தப்பாடி ஆகிய பகுதி களில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த ஈரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்த செல்வம் மகள் சிவகாமி (வயது 42), சூரம்பட்டி காமராஜ் தெரு வை சேர்ந்த பழனிசாமி மகன் தினேஷ் குமார் (37),
சென்னிமலை ராசம்பாளையத்தை சேர்ந்த ராம சாமி மகன் பூபதி (41), தாள வாடியை சேர்ந்த மாதேஷ் (48), அண்ணா நகரை சேர்ந்த நாகராஜ் மகன் செல்வம் (60),
கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த சின்னியப்பன் என்ற தங்கராஜ் மகன் கேசவமூர்த்தி (32) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.
பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 39 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.86 அடியாக உள்ளது.
- அணையில் இருந்து 2,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.86 அடியாக உள்ளது. அனைக்கு வினாடிக்கு 429 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,100 கன அடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 400 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,600 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.92 கனஅடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.35 கன அடியும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.39 கனஅடியாக உள்ளது.






