மது-கஞ்சா விற்ற 3 பேர் கைது

பாலசந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மது-கஞ்சா விற்ற 3 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அனுமதியின்றி ம விற்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் ேபரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் பாலசந்திரன் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சித்தோடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரியசோமூர் வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் சூர்யபிரகாஷ் (22), பப்பாளி என்ற பைசல் ஆகியோரை சித்தோடு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com