என் மலர்
ஈரோடு
- சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.16.57 லட்சத்துக்கு நிலக்கடலைக்காய் விற்பனை நடைபெற்றது
- விவசாயிகள் 790 மூட்டைகள் கொண்ட 23 ஆயிரத்து 999 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
சிவகிரி,
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 790 மூட்டைகள் கொண்ட 23 ஆயிரத்து 999 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.62.39-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.84.30-க்கும், சராசரி விலையாக ரூ.74.50-க்கும் விற்பனையானது. நிலக்கடலைக்காய் மொத்தம் ரூ.16 லட்சத்து 57 ஆயிரத்து 14-க்கு விற்பனையானது.
- கீழ்பவானி வாய்க்கால் கரையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்
- பொதுப்பணித்துறையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்
ஈரோடு,
ஈரோடு மாவட்ட பொது ப்பணித்துறை கவுந்தப்பாடி பாசன பிரிவு உதவி செய ற்பொறியாளர் ரமேஷ் திங்களூர் போலீசில் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிரு ப்பதாவது:- பொதுப்பணி த்துறை நீர்வளத்துறை பாச னப் பிரிவு கட்டுப்பா ட்டில் உள்ள கீழ்பவானி கால்வா யில் 40-வது மைல் அருகே கசிவுநீர் அடிமட்ட பாலம் அமைந்துள்ளது. இப்பாலத்தின் இடதுபுற மண் கரையில் இருந்த துவாரம், கான்கிரீட் கலவை மூலம் கால்வாயின் இரு பக்கங்களிலும், கால்வாயின் உட்புறமும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு கரை பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு மர்ம நபர்கள் கடப்பாரையால், ஒரு அடி ஆழத்துக்கு துளை போட்டு கான்கிரீட் போடப்பட்ட பகுதியை சேதப்படுத்தி உள்ளனர். இவ்வாறு போட ப்பட்ட துளையின் வழியாக தண்ணீர் உட்பகுந்து கரை யை பலவீனப்படுத்தி கரை உடையும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு கரை உடை ந்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கரையில் போட ப்பட்ட கான்கிரீட் தளத்தை உடைத்து, கரையை பலவீன ப்படுத்தும் செயலில் ஈடு பட்ட நபர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வே ண்டும்.
கான்கிரீட் தளம் சேதப்ப டுத்திய இடத்தில் மீண்டும் மர்ம நபர்கள் கான்கிரீட்டை உடைத்து பெரிய அளவில் சேதப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. கான்கிரீட் உடைந்த இடத்தில் மீண்டும் கான்கிரீட் போட்டு துவாரத்தை சரி செய்யும் வரை இரவு மற்றும் பகல் நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வே ண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
- பெருந்துறை கீழ்பவானி வாய்க்காலில் மூதாட்டி பிணம் கிடந்தது
- போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை தாடான்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்பு சாமிகவுண்டர். இவரது மனைவி ராமாயியம்மாள் (வயது 80). இவர்கள் இருவ ரும் மூத்த மகன் தேவசி காமணியுடன் வசித்து வருகி ன்றனர். இந்நிலையில் தேவசிகா மணியின் மகன் தமிழரசு ஏற்கனவே திருமணம் செய்த பெண்ணை மறு மணம் செய்ய முடிவு செய்து ள்ளார். இதற்கு ராமாயி யம்மாள் மறுப்பு ெதரிவி த்துள்ளார். இந்நிலையில் கடந்த 5-ந்தேதியன்று வீட்டை விட்டு வெளியேறிய ராமாயி யம்மாள் பின்னர் வீடு திரும்பவில்லை.
பல இட ங்களில் தேடி பார்த்தும் ராமாயியம்மாள் கிடை க்கவில்லை. இதையடுத்து பெத்தம்பாளையம் அருகே கருக்குபாளையம கீழ்ப வானி வாய்க்காலில் ராமா யியம்மாள் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் காஞ்சி கோவில் போலீசார் சம்பவ இடத்தி ற்கு சென்று ராமாயியம்மாள் உடலை மீட்டு அரசு மருத்து வமனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வை த்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராமாயியம்மாள் கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது
- வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.33 கனஅடியாக உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொ டர்ந்து குறைந்து வந்தது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 77.27 அடி யாக உள்ளது. அணைக்கு வினாடி 296 கன அடி நீர் மட்டுமே வருகிறது.அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடியும், காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅ டியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.89 கன அடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.05 கன அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.33 கனஅடியாக உள்ளது.
- சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது
- தொடர் மழையின் காரணமாக இந்தப் பகுதி யில் மழைநீர் தேங்கியதால் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
பவானி,
ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் இருந்து கோபி, கவுந்தப்பாடி வழி யாக செல்லும் சாலையில் பச்சப்பாளி பஸ் ஸ்டாப் அருகே உள்ள வாய்க்கால் மேடு உள்ளது. அப்பகுதியில் நேற்று இரவு திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த திடீர் பள்ளத்தில் கவுந்த ப்பாடியில் இருந்து சித்தோடு நோக்கி வந்து கொண்டு இருந்த சித்தோடு, தாய்நகர் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி வெங்கடேசன் (52) நிலை தடுமாறி தான் ஓட்டி வந்த பைக் உடன் பள்ளத்தில் தவறி விழுந்து ள்ளார்.
இதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்தார். அவரின் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இச்சம்பவம் தொடர்பாக கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிற்க்கு பொது மக்கள் தகவல் தெரிவி த்துள்ளனர். அவரின் உத்தர வின் பேரில் ஈரோடு எஸ்.பி. ஜவகர், ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறை யினர், ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து திடீர் பள்ளம் ஏற்பட்டது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகளுக்காக அப்போது அந்த பகுதியில் சாலையில் குறுக்கே குழாய் அமைக்கும் பணி நடைபெற்றதாகவும், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக இந்தப் பகுதி யில் மழைநீர் தேங்கியதால் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு வேலைகள் அமைக்கப்பட்டு அந்த வழியே சென்ற வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பவானி சித்தோடு உட்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அம்மாபேட்டை ஹைவே ரோந்து பணி போலீசாராக பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசு ப்பிரமணியம் (52) என்பவர் மீது அவ்வழியாக வந்த ஜீப் ஒன்று மோதி விபத்துக்கு ள்ளானது. இதனைத் தொடர்ந்து பலத்த காயம் அடைந்த பாலசுப்பிரம ணியம் தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- மது-போதைபொருள் விற்ற 3 பேர் கைது செய்யபட்டனர்
- போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட பகுதி யில் குற்ற சம்பவங்கள் ஏதே னும் நடைபெறுகிறதா என அம்மாபேட்டை, தாளவாடி, கருங்கல்பாளையம் போ லீசார் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சட்ட விரோ தமாக போதை பொருள் விற்று கொண்டிருந்த பவானி சிங்கம்பட்டியை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் குப்புசாமி (வயது 43), என்பவரை அம்மாபேட்டை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தாளவாடி பஸ் ஸ்டாப் மற்றும் கருங்க ல்பாளையம் பகுதியில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த தாளவாடி முஸ்லீம் தெருவை சேர்ந்த சையது இப்ராஹிம் (70), கருங்கல்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் மகன் ரமேஷ் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 20 பாக்கெட் மது மற்றும் 6 மதுபாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அவ ர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகி ன்றனர்.
- ஆன்லைன் டிரேடிங் மூலம் கல்லூரி மாணவர் பலரிடம் கோடி கணக்கில் மோசடி செய்துள்ளார்.
- இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் வைரமுத்து பாலாஜி. இவர் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள ஒரு மருந்தியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் உடன் படிக்கும் கல்லூரி மாணவ ரான புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த மாணவர் சஞ்சய் ஆன் லைன் டிரேடிங் ஆப் மூலம் சக மாணவர்கள் இடம் 40 நாட்களில் பணம் இரட்டிப்பு செய்து வருவதாக கூறி உள்ளார்.
இதனை நம்பி வைரமுத்து பாலாஜி ரூ. 49 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்து உள்ளார்.ஆனால் 40 நாட்களுக்கு மேல் ஆகியும் பணம் தராமல் ஏமாற்றி வந்து உள்ளார். மேலும் கொடுத்த பணத்தை கேட்டாலும் தராமல் வந்து உள்ளார். இது தொடர்பாக வைரமுத்து பாலாஜி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகரிடம் புகார் மனு அளித்தனர். இது குறி த்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிர ண்டு ஜவகர் ஈரோடு மாவ ட்ட குற்றப்பிரிவு போலீ சாருக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சையை கைது செய்து விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில் சஞ்சய் இதேபோன்று பல்வேறு மாணவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பல கோடி மோசடி செய்தது தெரிய வந்தது. பின்னர் சஞ்சை நீதிமன்ற த்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்ப ட்டார். சஞ்சயிக்கு உடந்தை யாக பலர் இருந்துள்ளனர். அவர்கள் குறித்தும் போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.
- மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
- கோபி செட்டிபாளையம் பஸ் நிலையம், அந்தியூர் ரவுண்டானா, கடம்பூர் பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை போன்ற காரணங்களுக்காக மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக கட்சியின் மாநில குழு உறுப்பினர் ராதிகா தலைமையில் நிர்வாகிகள் சுப்பிரமணி, ஆர்.கோமதி, பழனிசாமி, சுந்தர்ராஜன், பொன் பாரதி உள்பட பலர் காளை மாட்டு சிலை பகுதியில் இன்று காலை திரண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
மறியல் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் கூறினர். இதையடுத்து அங்கேயே சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றினர்.
அப்போது அங்கிருந்து ஒரு சிலர் வேகமாக ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி ஓடினர். அவர்களை ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட முயன்ற 250-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதேபோல் கோபி செட்டிபாளையம் பஸ் நிலையம், அந்தியூர் ரவுண்டானா, கடம்பூர் பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் ஆடுகளை கடித்துக் கொன்றது சிறுத்தை என தெரிய வந்தது.
- வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதைப்போல் சிறுத்தை, புலிகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.
இந்நிலையில் ஏர்மாளம் வனச்சரகத்திற்குட்பட்ட காட்டடி அருகே உள்ள வேடர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் 15 ஆடுகள், 5 மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் கட்டி வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார்.
இன்று காலை எழுந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 11 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆடுகளின் கழுத்துகளில் மர்ம விலங்கு ஆழமாக கடித்த தடயங்கள் இருந்தன.
இதுகுறித்து ஏர்மாளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் ஆடுகளை கடித்துக் கொன்றது சிறுத்தை என தெரிய வந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயி ராஜா பலியான ஆடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
- 17 வயது மாணவி குளிக்கும்போது ஜீவானந்தம் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.
- காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவானந்தத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் விருப்பம்பதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 23). பெயிண்டர். இவர் அந்த பகுதியில் பெண்கள் குளியலறையில் குளிக்கும் போது அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று 17 வயது மாணவி குளிக்கும்போது ஜீவானந்தம் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதை அடுத்து காஞ்சி கோவில் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் காஞ்சிகோவில் போலீசார் ஜீவானந்திடம் விசாரணை நடத்தினர்.
மேலும் அவர்கள் செல்போனை சோதனை செய்த போது அதில் அந்த 17 வயது மாணவி குளித்த வீடியோ இருந்ததை உறுதி செய்தனர்.
இதையஅடுத்து காஞ்சிக்கோவில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜீவானந்தத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- பணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது
- அவர்களிடமிருந்து ரூ.11 ஆயிரம் பறிமுதல் செய்தனர்
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த பசுவ ராஜப்பா தோட்டம் பகுதி யில் தாளவாடி போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் ரத்தி னம் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது கரலபாடி- மெட்டல் வாடி ரோட்டில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் தாளவாடி பகுதியைச் சேர்ந்த சிவபதா (வயது 30), சுப்பிரமணி (50), மகேஷ் (50), மற்றொரு மகேஷ் (37), குருசாமி, சுப்பண்ணா, பிரகாஷ் உள்பட 8 பேர் என தெரிய வந்தது.அவர்களிடமிருந்து போலீ சார் சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.11 ஆயிரத்து 620 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து தாளவாடி போலீசார் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் 45 சதவீதம் பேர் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர் என மின் பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் தகவல் தெரிவித்தார்
- தற்போது மின் கம்பத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு,
ஈரோடு மின் பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் இந்திராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மின்வாரியத்தில் மின் இணைப்பு மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் பிற பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில அளவில் தற்போது 60 சதவீதம் மின் நுகர்வோர் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இது ஈரோடு மாவட்டத்தில் 45 சதவீதமாக உள்ளது. இதை மேலும் அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தற்போது மின் கம்பத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புகார் குறை, புது இணைப்பு விண்ணப்பித்தலும் ஆன்லைனில் பதிவு செய்வதால் விரைவாக பரிசீலனை செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.






