வீட்டில் பதுங்கி இருந்த 4½ அடி நாக பாம்பு உயிருடன் மீட்பு

கல்லுக்குள் பதுங்கி இருந்த சுமார் அடி நாகப்பாம்பை உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
வீட்டில் பதுங்கி இருந்த 4½ அடி நாக பாம்பு உயிருடன் மீட்பு
Published on

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அரு கே உள்ள கணக்கம் பாளை யம் பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (48). இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணியளவில் செல்வராஜ் தனது வீட்டில் கொட்டி கிடந்த கல்லுக்குள் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அச்சமடைந்தார்.

உடனே இது குறித்து கோபி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கொட்டி கிடந்த கல்லுக்குள் பதுங்கி இருந்த சுமார் 4½ அடி நாகப்பாம்பை உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட நாகப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

துரிதமாக செயல்பட்டு நாகப்பாம்பை உயிருடன் மீட்ட முருகேசன், மாதப்பன், முருகன், கோபாலகி ருஷ்ண ன், தேவராஜ், மயி ல்சாமி, குருமூர்த்தி உள்ளிட்ட தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டி னர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com