கஞ்சா விற்ற வாலிபர் கைது

சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள செல்போன் கடை ஒன்றின் அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த கவுதம் (29) என்பதும், தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஈரோடு மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ.1,200 மதிப்பிலான 60 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com