என் மலர்
ஈரோடு
- வீட்டின் பின்புற கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை திருடியது தெரியவந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு திண்டல் தெற்கு பள்ளம் பகுதி சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (47). இவரது கணவர் லட்சுமி நாராயணன். சில வருடங் களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது ஒரே மகன் ஹரிஷ். அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்ரீவித்யா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவரும், மகனும் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி ஸ்ரீவித்யா தனது மகனுடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்னை சென்று விட்டார். திருமணம் முடிந்து ஸ்ரீவித்யா தனது மகனுடன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 17 பவுன் நகை மற்றும் 8 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீ வித்யாவின் வீட்டின் பின்புற கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை திருடியது தெரியவந்தது.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். ஆசிரியை வீட்டில் பணம்-நகை திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மர்மநபர்கள் வயதான தம்பதி 2 பேரையும் கொடூரமான முறையில் முகத்தை சிதைத்து கொன்றுள்ளனர்.
- கொலையாளிகளை பிடிக்கும் வகையில் டி.எஸ்.பி. ஜெயபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முருங்கதொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டன்குட்டை அருகே கரியங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (85). விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள் (80).
இவர்களுக்கு வசந்தி, கவிதா, கலையரசி என திருமணமான 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் தனியாக வசித்து வருகிறார்கள்.
முத்துசாமியும், சாமியாத்தாளும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்றுமுன்தினம் இரவு முத்துசாமியும், சாமியாத்தாளும் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கினர்.
இந்நிலையில் நள்ளிரவில் முத்துசாமியின் வீட்டின் கதவை கம்பியால் நெம்பி, கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் தூங்கி கொண்டிருந்த முத்துசாமியை இரும்பு கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டினர். சத்தம் கேட்டு எழுந்த சாமியாத்தாளையும் மர்மநபர்கள் இரும்பு ராடு மற்றும் அரிவாளால் வெட்டினர்.
இதில் முத்துசாமியும், சாமியாத்தாளும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இந்நிலையில் முத்துசாமியின் மகள் கலையரசியின் மகனான அஜித் (23), தாத்தா, பாட்டியை பார்ப்பதற்காக நேற்று காலை வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவு திறந்திருந்ததால், வீட்டிற்குள் அஜித் சென்றார். அப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் தாத்தாவும், பாட்டியும் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், டி.எஸ்.பி ஜெயபாலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துசாமி, சாமியாத்தாள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது அருகில் உள்ள வாழைத்தோட்டம் மற்றும் அருகே உள்ள சாலையில் சிறு தூரம் ஓடி நின்றது. யாரையும் கவி பிடிக்கவில்லை.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை சம்பவம் நடந்த வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகள், அவர்கள் விட்டு சென்ற தடயங்களை கைப்பற்றினர். 16 பவுன் நகை, 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நகை- பணத்திற்காக இந்த கொலை மற்றும் கொள்ளை நடந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கொலை மற்றும் கொள்ளை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மர்மநபர்கள் வயதான தம்பதி 2 பேரையும் கொடூரமான முறையில் முகத்தை சிதைத்து கொன்றுள்ளனர். எனவே இவர்கள் வட மாநில கும்பலை சேர்ந்தவர்களாக? இருக்கலாம் என போலீசார் சந்திக்கின்றனர்.
கொலையாளிகளை பிடிக்கும் வகையில் டி.எஸ்.பி. ஜெயபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை நடந்த வீட்டில் சி.சி.டி.வி. கேமிராக்கள் இல்லை. வீடு தனியாக இருந்ததால் மர்மநபர்களுக்கு அது வசதியாக அமைந்து விட்டது. தனிப்படை போலீசார் அருகே எதுவும் கட்டிட வேலை நடைபெறுகிறதா? அதில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்களா? என்று விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் சென்னிமலை பகுதியில் தனியாக வசிக்கும் வயதானவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே இந்த பகுதியில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 10 அடி உயரத்தில் இருந்து முருகன் தவறி கீழே விழுந்தார்.
- இதில் இடுப்பு பகுதியில் காயம் அடைந்தவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கெஞ்சனூர் தண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (50). கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மரத்துக்காடு பகுதியில் புதிய கட்டிட பணிக்கு சென்றார். இரவு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஜன்னல் பகுதியில் படுத்திருந்தார்.
அப்போது 10 அடி உயரத்தில் இருந்து முருகன் தவறி கீழே விழுந்தார். இதில் இடுப்பு பகுதியில் காயம் அடைந்தவரை சக தொழிலாளிகள் மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.
இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.43 அடியாக உள்ளது.
- அணைக்கு வினாடி 632 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.43 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடி 632 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கீழ்பவானி வாய்க்காலில் குளிப்பதற்காக மாரிசாமி இறங்கியுள்ளார்.
- நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவில் எல்லப்பா ளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் மாரிசாமி (33). தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் சம்பவத் தன்று வெள்ளங்கோவில் காமராஜ் நகர் பகுதியில் ஓடும் கீழ் பவானி வாய்க்காலில் குளிப்பதற்காக மாரிசாமி இறங்கியுள்ளார்.
மாரிசாமிக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். தகவல் அறிந்த மாரிசாமியின் உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாரிசாமியின் உடல் நல்லா ம்பட்டி மணக்காட்டுப்புதூர் பகுதியில் ஓடும் கீழ் பவானி வாய்க்காலில் கரை ஒதுங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த சிறுவலூர் போலீசார் மாரிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் அந்த நபரை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் அவரிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் டி.ஜி.புதூர்-கம்பூர் சாலையில் உள்ள சோதனை சாவடியில் பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் மொபட்டை திருப்பி தப்பி செல்ல முயன்றார். இதையடுத்து போலீசார் அந்த நபரை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்த நபர் பெருந்துறை சீனாபுரத்தை சேர்ந்த பழனிசாமி (40) என்பதும், அவரது மொபட்டினை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனைக்கு எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் பழனிசாமியை கைது செய்து, அவரிடம் இருந்த 7.90 கிலோ எடையுள்ள புகையிலை, குட்கா பொருட்களையும், மொபட்டினையும் பறிமுதல் செய்தனர்.
- கோவில் கோபுரத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது.
- இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கொடுமுடி:
கொடுமுடியை அடுத்த ஒத்தக்கடை சின்னப்பை யன்புதூரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதியதாக தீர்த்த விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த 2 சிலைகள் அமை ந்துள்ள கோவிலு க்கான கும்பாபிஷேக விழா கடந்த 8-ந் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமத் துடன் தொடங்கியது.
தொடந்து நேற்று 2 மற்றும் 3-ம்கால யாக பூஜைகள் நிறைவுற்ற இன்று அதிகாலை 4 மணி க்கு 4-ம்கால யாக பூஜைகள் நடந்தன.
பின்னனர் அதிகாலை 5.30 மணிக்கு கோவில் கோபுரத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னர் 5.45 மணிக்கு மேல் செல்வ விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து தொட ர்ந்து தசதானம், தசதரிசனம், மகா அபிஷேகம், அலங்கார பூஜைகளுடன் தீபாரதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வுகளும் அன்னதானமும் நடந்தன.
இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
- திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
- புதிய தார் சாலை அமைத்துள்ள இடங்களை ஆய்வு செய்தார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் திருப்பூ ர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் டாக்டர்.இள ங்கோவன் பல்வேறு திட்ட பணிகளையும், திடக்க ழிவு மேலாண்மை பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
திடக்கழிவு மேலாண்மை யில் நுண்உர கூட செயலா க்கம் மைய பணிகளையும், வளமீட்பு மைய பணிகளையும், உயிரி சுரங்க முறை மற்றும் உயிரி எரிவாயு கூட பணிகளை ஆய்வு செய்தார்.
புதிய தினசரி சந்தை வளாகம் கட்டுமான பணிகளையும், மொடச்சூர் வார ச்சந்தை கடைகள் கட்டுமான பணிகளையும், அறிவு சார் மையம் கட்டுமான பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
புதிய தார் சாலை அமைத்துள்ள இடங்களான சாய் அபிராமி நகர், அழகு நகர், ராம் நகர் மற்றும் அப்துல்கலாம் நகர் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார்.
திடக்கழிவு மேலாண்மை பணி சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு பாராட்டும் தெரிவித்தார். திடக்கழிவு மேலாண்மையில் 100 சதவீ தம் அறிவியல் முறைப்படி செயலாக்கம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி அதற்கு தேவையானவற்றிற்கு செயல்திட்டம் மற்றும் மதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்க அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ், நகராட்சி ஆணையாளர் சசிகலா, பொறியாளர் சிவக்குமார், துப்புரவு அலுவலர் சோழ ராஜ், துப்புரவு ஆய்வாள ர்கள் சவுந்தர ராஜன், நிருபன் சக்ரவர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஈரோடு மாவட்டத்தில் 1,271 ரேஷன் கடைகளில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 758 ரேஷன் கார்டுகள் உள்ளன.
- இவர்களில் 10,159 பேர் இன்னும் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கவில்லை.
ஈரோடு:
ஒரே நபர் இரு ரேஷன் கார்டு வைத்திருப்பதும், ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டில் பயனாளிகளாக இருப்பதை தவிர்க்கவும், ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பி னர்களின் அனை வரது ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 1,271 ரேஷன் கடைகளில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 758 ரேஷன் கார்டுகள் உள்ளன.
இதில் அரிசி கார்டு 6 லட்சத்து 72 ஆயிரத்து 670. அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுகள் 66,235 ஆகும். காவலர் கார்டுகள் 1,572 ஆகும். சர்க்கரை கார்டு 18, 181 ஆகும்.
முதியோர் அரிசி கார்டு 4,794 ஆகும். அன்னபூர்ணா அரிசி கார்டு 23 ஆகும். எந்த பொருளும் வேண்டாம் என்பவர்களுக்கான கார்டு 1,346 ஆகும்.
இந்த காடுகளில் 20 லட்சத்து 81 ஆயிரத்து 780 உறுப்பினர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 10,159 பேர் இன்னும் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கவில்லை.
இவர்களின் விபரத்தை சேகரித்து இணைக்கும் முயற்சியில் வட்ட வழங்கல் அலுவலர்க ள் ஈடுபட்டுள்ளனர். ஒரு வேளை அவர்களின் பெயர் வேறு கார்டில் இருந்தா லும், அவர் இறந்திருந்தாலும் விரைவில் பெயர் நீக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.6 லட்சத்து 4 ஆயிரத்து 440-க்கு விற்பனையானது.
சிவகிரி:
அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 66 ஆயிரத்து 283 எண்ணிக்கை யிலான 4 ஆயிரத்து 440 கிலோ எடையுள்ள தே ங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இவை கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.21.71 காசுகள்,
அதிகபட்ச விலையாக ரூ.23.86 காசுகள், சராசரி விலையாக ரூ.22.66 காசுகள் என்ற விலைகளில்
மொத்தம் ரூ.6 லட்சத்து 4 ஆயிரத்து 440-க்கு விற்பனையானது.
- கடந்த ஒரு மாதத்தில் ஈரோடு சரகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- கோர்ட்டு விசாரணையில் உள்ள வழக்குகளில் 20 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குனர் வன்னியப்பெருமாளின் உத்தரவின்பேரில், கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மற்றும் ஈரோடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதன்படி ஈரோடு சரகத்துக்கு உள்பட்ட ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க தொடர்ந்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் ஈரோடு சரகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய 83 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 23 டன் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் 10-ம், 3 சக்கர வாகனம் ஒன்றும், 4 சக்கர வாகனங்கள் 6-ம் என மொத்தம் 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அரசு மானியத்தால் வழங்கப்பட்ட வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோர்ட்டு விசாரணையில் உள்ள வழக்குகளில் 20 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளில் ஆஜராகாத 10 பேர் மீது பிடியாணை நிறைவேற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் ஈரோடு சரகத்துக்கு உள்பட்ட தமிழகம்-கர்நாடகா மாநில எல்லையான தாளவாடி, ஆசனூர், பர்கூர், கடம்பூர் மற்றும் தமிழக-கேரளா மாநில எல்லை பகுதியான உடுமலைப்பேட்டை அமராவதி நகர் ஆகிய சோதனை சாவடிகளிலும் இரவு, பகலாக போலீசார் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறார்கள்.
மாதம் தோறும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்துள்ளார்.
- சிலுவை என்ற கவுதமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- அவரிடம் இருந்து ஒரு சொகுசு கார், நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் எல்லீஸ்பேட்டையை சேர்ந்தவர் சாமியப்பன் (70). விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி.
இவர்கள் இருவரும் கடந்த மாதம் 5-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, உறவி னர் வீட்டிற்கு சென்றனர். மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் பீரோவுக்குள் இருந்த 24 பவுன் நகை மற்றும் ரூ.23,500 ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து காஞ்சிக்கோ வில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டம் காந்தி நகரை சேர்ந்த பிச்சைமுத்து மகன் சிலுவை என்ற கவுதம் (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் சாமியப்பன் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து சிலுவை என்ற கவுதமை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவு ப்படி சிறையில் அடைத்த னர். அவரிடம் இருந்து ஒரு சொகுசு கார், 4 பவுன் நகை யை போலீசார் பறிமுதல் செய்தனர்.






