என் மலர்
நீங்கள் தேடியது "தேங்காய் விற்பனை"
- மின்னணு தேசிய வேளாண்மை சந்தை மூலம் (இ.நாம்) நேற்று முதன் முறையாக தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- நேற்று நடைபெற்ற ஏலத்தில் 951 கிலோ தேங்காய் ரூ.22,470-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை மூலம் (இ.நாம்) நேற்று முதன் முறையாக தேங்காய் ஏலம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் 951 கிலோ தேங்காய் ரூ.22,470-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.26.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.21.00- க்கும், சராசரியாக ரூ.24.00-க்கும் விற்பனையானது.
நேற்று தேங்காய் ஏலம் தேசிய வேளாண் சந்தை( இ-நாம்) மூலம் நடைபெற்றதால், விளைபொருளுக்கான கிரையத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டது.
இ-நாம் செயலி மூலம் நடைபெற்ற தேங்காய் ஏலம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வாரந்தோறும் பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை இ- நாம் செயலி மூலம் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண் விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.6 லட்சத்து 4 ஆயிரத்து 440-க்கு விற்பனையானது.
சிவகிரி:
அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 66 ஆயிரத்து 283 எண்ணிக்கை யிலான 4 ஆயிரத்து 440 கிலோ எடையுள்ள தே ங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இவை கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.21.71 காசுகள்,
அதிகபட்ச விலையாக ரூ.23.86 காசுகள், சராசரி விலையாக ரூ.22.66 காசுகள் என்ற விலைகளில்
மொத்தம் ரூ.6 லட்சத்து 4 ஆயிரத்து 440-க்கு விற்பனையானது.
- எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.2 லட்சத்து 79 ஆயிரத்து 731-க்கு விற்பனையானது.
கொடுமுடி:
எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 29 ஆயிரத்து 392 எண்ணிக்கையிலா 12 ஆயிரத்து 218 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.10 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.24.59 காசுகள், சராசரி விலையாக ரூ.23.39 காசுகள் என்ற விலைகளி்ல் ஏலம் போனது.
மொத்தம் ரூ.2 லட்சத்து 79 ஆயிரத்து 731-க்கு விற்பனையானது.






