என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயி வீட்டில் திருடிய சேலம் வாலிபர் கைது
- சிலுவை என்ற கவுதமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- அவரிடம் இருந்து ஒரு சொகுசு கார், நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் எல்லீஸ்பேட்டையை சேர்ந்தவர் சாமியப்பன் (70). விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி.
இவர்கள் இருவரும் கடந்த மாதம் 5-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, உறவி னர் வீட்டிற்கு சென்றனர். மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் பீரோவுக்குள் இருந்த 24 பவுன் நகை மற்றும் ரூ.23,500 ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து காஞ்சிக்கோ வில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டம் காந்தி நகரை சேர்ந்த பிச்சைமுத்து மகன் சிலுவை என்ற கவுதம் (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் சாமியப்பன் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து சிலுவை என்ற கவுதமை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவு ப்படி சிறையில் அடைத்த னர். அவரிடம் இருந்து ஒரு சொகுசு கார், 4 பவுன் நகை யை போலீசார் பறிமுதல் செய்தனர்.






