என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஈரோட்டில் தனியார் பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை திருட்டு
    X

    ஈரோட்டில் தனியார் பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை திருட்டு

    • வீட்டின் பின்புற கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை திருடியது தெரியவந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு திண்டல் தெற்கு பள்ளம் பகுதி சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (47). இவரது கணவர் லட்சுமி நாராயணன். சில வருடங் களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது ஒரே மகன் ஹரிஷ். அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்ரீவித்யா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவரும், மகனும் வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி ஸ்ரீவித்யா தனது மகனுடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்னை சென்று விட்டார். திருமணம் முடிந்து ஸ்ரீவித்யா தனது மகனுடன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 17 பவுன் நகை மற்றும் 8 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீ வித்யாவின் வீட்டின் பின்புற கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை திருடியது தெரியவந்தது.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். ஆசிரியை வீட்டில் பணம்-நகை திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×