கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி

கீழ்பவானி வாய்க்காலில் குளிப்பதற்காக மாரிசாமி இறங்கியுள்ளார்.நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவில் எல்லப்பா ளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் மாரிசாமி (33). தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் சம்பவத் தன்று வெள்ளங்கோவில் காமராஜ் நகர் பகுதியில் ஓடும் கீழ் பவானி வாய்க்காலில் குளிப்பதற்காக மாரிசாமி இறங்கியுள்ளார்.

மாரிசாமிக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். தகவல் அறிந்த மாரிசாமியின் உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாரிசாமியின் உடல் நல்லா ம்பட்டி மணக்காட்டுப்புதூர் பகுதியில் ஓடும் கீழ் பவானி வாய்க்காலில் கரை ஒதுங்கியது.

இது குறித்து தகவல் அறிந்த சிறுவலூர் போலீசார் மாரிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com