கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

10 அடி உயரத்தில் இருந்து முருகன் தவறி கீழே விழுந்தார். இதில் இடுப்பு பகுதியில் காயம் அடைந்தவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கெஞ்சனூர் தண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (50). கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மரத்துக்காடு பகுதியில் புதிய கட்டிட பணிக்கு சென்றார். இரவு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஜன்னல் பகுதியில் படுத்திருந்தார்.

அப்போது 10 அடி உயரத்தில் இருந்து முருகன் தவறி கீழே விழுந்தார். இதில் இடுப்பு பகுதியில் காயம் அடைந்தவரை சக தொழிலாளிகள் மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.

இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X

Maalai Malar
www.maalaimalar.com