என் மலர்tooltip icon

    ஈரோடு

    • விமான கோபுரங்கள் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.
    • மஹா கணபதி ஹோமம், வாஸ்து பூஜை நடைபெற்றது.

    பவானி:

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு விமான கோபுரங்கள் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

    தொடர்ந்து சங்கமே ஸ்வரர் கோவில் சிவா சிவாச்சாரியார், உதயபிரகாஷ் சிவாச்சாரியார் குழுவினர் மூலம் விநாயகர் பூஜை, சங்கல்பம், மஹா கணபதி ஹோமம், வாஸ்து பூஜை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து 2-ம் கால பூஜை தொடங்கி பாலஸ்தாபன பூஜைகள், மஹா தீபாராதனை நடை பெற்று திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் பவானி நகர தி.மு.க. செயலாளர் ப.சீ.நாகராசன், நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோ வன், நகர்மன்ற துணை தலைவர் மணி, அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ண ராஜ், பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலா ளர் தினேஷ்குமார் நாயகர்,

    செல்லியாண்டியம்மன் கோவில் திருப்பணி விழா குழுவினர் மகேந்திரன், சண்முகசுந்தரம், பி.என்.ஆர்.மனோகரன், செல்லியாண்டியம்மன் கோவில் சரவணன், தி.மு.க. தலைமை பேச்சாளர் கண்ணன், ஊர் கவுண்டர், ஊர் கொத்துகாரர், 37 சமூக கட்டளைதாரர்கள், பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பவானி செல்லியாண்டி யம்மன், மாரியம்மன் கோவில் உள்பட நரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆண்டு தோறும் மாசி திருவிழா மிக விமர்ச்சியாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் கோவில் திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பவானி செல்லியாண்டியம்மன், மாரியம்மன், பட்டத்தரசியம்மன், எல்லையம்மன், மேட்டு தெரு மாரியம்மன், வர்ணபுரம் மாரியம்மன் கோவில்களில் இந்த ஆண்டு மற்றும் திரப்பணிகள் முடியும் வரை மாசி திருவிழா நடை பெறாது என இந்து சமய அறநிலையத்துறை, விழா குழுவினர் மற்றும் 37 கட்டளைதாரர்கள் முன்னிலையில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்க ப்பட்டது.

    • முருகன் சமையல் எண்ணையை தனது உடலில் ஊற்றி தீப்பற்றி வைத்துக்கொ ண்டார்.
    • பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த நடராஜபுரம் என்.ஜி.ஜி.ஓ. காலனி யை சேர்ந்தவர் முருகன் (56). இவருக்கு குடி ப்பழக்கம் இருந்ததாக கூற ப்படுகிறது.

    இந்நிலை யில் கடந்து சில வருடங்களாக அவர் உடல்நிலை பாதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முருகன் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று அவரை காப்பாற்றியு ள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை முருகன் வீட்டிற்கு வெளியே தனக்குத்தானே சமையல் எண்ணையை தனது உடலில் ஊற்றி தீப்பற்றி வைத்துக் கொ ண்டார். அவர் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் தீயை அணைத்து முருகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்பு மேல் சிகிச்சைக்காக பெரு ந்துறையில் உள்ள மருத்து வ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1.65 கோடிக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

    பெருந்துறை:

    பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 4,498 மூட்டைகளில் 2 லட்சத்து 17 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தர கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, ரூ.72.37-க்கும், அதிகபட்சமாக ரூ.81.99-க்கும் விற்பனையாயின.

    2-ம் தரக் கொப்பரை குறைந்த பட்சமாக ரூ.38-க்கும், அதிகபட்சமாக ரூ.76.89-க்கும் விற்பனையாயின.

    மொத்தம் ரூ.1.65 கோடிக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

    • பு.புளியம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • சோதனை நடத்திய பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி சீட்டுகள் விற்ப னை, குட்கா மற்றும் ரவுடி கள் செயல்பாடு போன்ற சட்ட விரோத செயல்களை ஒழிக்க ஈரோடு மாவட்ட மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ஜவகர் அனைத்து போலீஸ் நிலையமங்க ளுக்கும் உத்தரவிட்டார்.

    மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற ங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீ சார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும்.

    பள்ளி, கல்லூரி மாண வர்கள் போதைப் பொருள்க ள் பயன்படுத்து கிறார்களா என தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் புகார் மற்றும் அவர்களது பிரச்சினைகள் குறித்து உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    இதையடுத்து பு.புளி யம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் பவானி சாகர் சாலை, நால்ரோடு சோதனைசாவடி மற்றும் பு.புளியம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதில் வாகனங்களின் ஆ.ர்.சி., இன்சூ ரன்ஸ், லைசென்ஸ், பர்மிட் உள்ளி ட்ட ஆவணங் ளை சரி பார்த்தனர். மேலும் வாக னங்களில் எடுத்து வரும் பொருள்களை போலீசார் சோதனை நடத்திய பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.2 லட்சத்து 79 ஆயிரத்து 731-க்கு விற்பனையானது.

    கொடுமுடி:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 29 ஆயிரத்து 392 எண்ணிக்கையிலா 12 ஆயிரத்து 218 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.10 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.24.59 காசுகள், சராசரி விலையாக ரூ.23.39 காசுகள் என்ற விலைகளி்ல் ஏலம் போனது.

    மொத்தம் ரூ.2 லட்சத்து 79 ஆயிரத்து 731-க்கு விற்பனையானது. 

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.04 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து 2,700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.04 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 673 கன அடி நீர் வந்து கொண்டி ருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்பட்ட வந்த நிலையில் இன்று 2,100 கனஅடி நீராக குறைந்துள்ளது.

    காளிங்கராயன் பாசன த்திற்கு 500 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24. 86 கன அடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 14. 43 கன அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.29 கனஅடியாக உள்ளது.

    • காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    கோபி:

    திருப்பூர் மாவட்டம் முத்தூ ரை சேர்ந்தவர் அங்கு ராஜ். இவருடைய மகள் சுபாஷினி (21). விஜயமங்க லத்தை சேர்ந்தவர் பஞ்சு ராஜ். இவரது மகன் யஸ்வந்த்ராஜ். இவரும் சுபாஷினி ஆகிய இருவரும் காங்கே யத்தில் உள்ள வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார் கள்.

    இந்த நிலையில் அவர்கள் காங்கேயம் வந்து சென்ற போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இது அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது குறித்து அவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் காதல் ஜோடியினர் யஸ்வந்த் ராஜ், சுபாஷினி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி கோபி செட்டிபாளைய த்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் கோபிசெட்டி பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரின் பெற்றோரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவ ழைத்து பேசினர். இதில் யஸ்வந்த் ராஜ் வீட்டில் அவரது திரு மணத்தை ஏற்று கொண்ட னர்.

    இதையடுத்து காதல் ஜோடியை அவர்களுடன் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    • ஆணின் உடல் கிடப்பதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் காசிபாளையம் இந்திரா நகர் காலனி வழியாக கீழ்பவானி வாய்க்காலின் கிளை கொப்பு வாய்க்கால் கோபி-சத்தி மெயின் ரோட்டை கடந்து செல்லும் பகுதியில் அமைந்து ள்ள பாலத்தின் அடியில் ஒரு ஆணின் உடல் கிடப்பதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெ க்டர் மோகனன் தலைமை யிலான போலீசார் சென்று பார்த்தனர். இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். வட மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் தெரிய வருகிறது.

    இதையடுத்து போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இறந்தவரின் உடலில் காயங்கள் ஏதுமில்லை. பின்னந்தலையில் மட்டும் கீழே விழுந்த போது ஏற்பட்ட காயத்தால் ரத்த கசிவுள்ளது.

    மேற்படி இடத்தில் மது அருந்தும் நபர்கள் அமர்ந்து மது அருந்துவது வழக்கமாக இருந்து வருவதாக தெரிகிறது.அதில் மேற்படி இறந்த நபரும் மது போதையில் கொப்பு வாய்க்காலில் விழுந்து இறந்திருக்கலாம் என தெரிய வருகிறது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொள்ளை சம்பவங்கள் தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில்போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே முருங்கதொழுவு ஊராட்சி க்கு உட்பட்ட ஒட்டன் கொட்டை கரியாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள்.

    இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்ய ப்பட்டனர். மேலும் இவர்கள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டது தெரிய வந்தது.

    இதையொட்டி பொது மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யிலும் கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் சென்னிமலை அருகே அம்மன் கோவில் புதூரில் உள்ள வாகை த்தொழுவு அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் தலைமை தாங்கினார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சர வணன் முன்னிலை வகி த்தார்.

    இந்த கூட்டத்தில் தனியாக தோட்ட பகுதி களில் குடியிருப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி தலைவர்கள், போலீசார் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • ERD0411092023: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் அருகே உள்ள வி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (55). டெய்லர். இவரது மனைவி பழனியம்மாள் (50). இந்த நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக சுந்தரராஜ்,
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் அருகே உள்ள வி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (55). டெய்லர். இவரது மனைவி பழனியம்மாள் (50).

    இந்த நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக சுந்தரராஜ், மனைவி பழனியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து கிளம்பினார். சுந்தர்ராஜ் வண்டியை ஓட்ட பின்னால் பழனியம்மாள் அமர்ந்து வந்தார்.

    அப்போது திங்களூர் - பெருந்துறை ரோட்டில் செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே இடது ஓரமாக சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த தனியார் பள்ளி வாகனம் எதிர்பாராத விதமாக சுந்தர்ராஜ் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுந்தரராஜ் மற்றும் பழனியம்மாள் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கணவன்,மனைவி 2 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சீமான் மீது எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், இவ்வழக்கில் விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது.

    இதன்படி இன்று காலை ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • வாகனத்தில் செல்பவர்கள் படம் எடுத்தும் கூச்சல் இடுவதால் கோபமடைந்த யானை துரத்தும் நிலை ஏற்படுகிறது.
    • சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பகுதியில் யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது பர்கூர் மலைப்பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருவதால் குளிர்ச்சி நிலவி வருகிறது. மேலும் வனக்குட்டைகளில் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் தேங்கி இருப்பதால் தாகத்தை தீர்க்க அந்த தண்ணீரை பருகி செல்கின்றது.

    ஆனால் யானை மட்டும் அவ்வப்போது சாலைகளில் குறுக்கே சென்று இடம் பெயர்ந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் செய்வதில்லை. வாகனத்தில் செல்பவர்கள் படம் எடுத்தும் கூச்சல் இடுவதால் கோபமடைந்த யானை துரத்தும் நிலை ஏற்படுகிறது.

    இந்த நிலையில் பர்கூர் வனப்பகுதி தாமரைக்கரை சாலையில் ஒற்றை காட்டுயானை அங்கும், இங்குமாய் உலா வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் ஒற்றை யானை வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனால் வனத்துறையினர் வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது பார்த்து அமைதியாக ரசித்து செல்ல வேண்டுமே தவிர அதனை துன்புறுத்தும் வகையில் கூச்சலிடுவது, வாகனத்தை விட்டு கீழே இறங்கி சென்று படம் எடுப்பது கூடாது.

    இவை எல்லாம் ஆபத்தை விளைவிக்கும் என்றும், மிகுந்த எச்சரிக்கையோடு வனப்பகுதியை கடக்க வேண்டும் என்று வனத்துறையினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    ×