என் மலர்
நீங்கள் தேடியது "Police are conducting vehicle checks in"
- பு.புளியம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- சோதனை நடத்திய பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி சீட்டுகள் விற்ப னை, குட்கா மற்றும் ரவுடி கள் செயல்பாடு போன்ற சட்ட விரோத செயல்களை ஒழிக்க ஈரோடு மாவட்ட மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ஜவகர் அனைத்து போலீஸ் நிலையமங்க ளுக்கும் உத்தரவிட்டார்.
மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற ங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீ சார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாண வர்கள் போதைப் பொருள்க ள் பயன்படுத்து கிறார்களா என தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் புகார் மற்றும் அவர்களது பிரச்சினைகள் குறித்து உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து பு.புளி யம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் பவானி சாகர் சாலை, நால்ரோடு சோதனைசாவடி மற்றும் பு.புளியம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதில் வாகனங்களின் ஆ.ர்.சி., இன்சூ ரன்ஸ், லைசென்ஸ், பர்மிட் உள்ளி ட்ட ஆவணங் ளை சரி பார்த்தனர். மேலும் வாக னங்களில் எடுத்து வரும் பொருள்களை போலீசார் சோதனை நடத்திய பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.






