தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி பலி

முருகன் சமையல் எண்ணையை தனது உடலில் ஊற்றி தீப்பற்றி வைத்துக்கொ ண்டார்.பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த நடராஜபுரம் என்.ஜி.ஜி.ஓ. காலனி யை சேர்ந்தவர் முருகன் (56). இவருக்கு குடி ப்பழக்கம் இருந்ததாக கூற ப்படுகிறது.

இந்நிலை யில் கடந்து சில வருடங்களாக அவர் உடல்நிலை பாதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முருகன் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று அவரை காப்பாற்றியு ள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை முருகன் வீட்டிற்கு வெளியே தனக்குத்தானே சமையல் எண்ணையை தனது உடலில் ஊற்றி தீப்பற்றி வைத்துக் கொ ண்டார். அவர் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் தீயை அணைத்து முருகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்பு மேல் சிகிச்சைக்காக பெரு ந்துறையில் உள்ள மருத்து வ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com