கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.04 அடியாக உள்ளது.அணையில் இருந்து 2,700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.04 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 673 கன அடி நீர் வந்து கொண்டி ருக்கிறது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்பட்ட வந்த நிலையில் இன்று 2,100 கனஅடி நீராக குறைந்துள்ளது.

காளிங்கராயன் பாசன த்திற்கு 500 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குண்டேரிப்பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24. 86 கன அடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 14. 43 கன அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.29 கனஅடியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com