என் மலர்
நீங்கள் தேடியது "வீடு கட்ட முடியாத விரக்தியில்"
- சம்பவத்தன்று விஷ மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு வாந்தி எடுத்துள்ளார்.
- வெள்ளிங்கிரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திருவாச்சி பாலப்பாளை யத்தை சேர்ந்தவர் வெள்ளி ங்கிரி (50). ரியல் எஸ்டேட் தரகர். இவருக்கு திருமண மாகவில்லை.
இந்த நிலையில் வெள்ளி ங்கிரி பெருந்துறை அருகே உள்ள திருவேங்கிடம் பாளையம் பெரியார் வீதியில் வசித்து வரும் தனது சகோதரி ஜோதி (48) என்பவரது வீட்டின் அருகில் கடந்த வருடம் புதிதாக வீடு கட்ட ஆரம்பி த்தார்.
இதற்காக வெள்ளிங்கிரி, தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரி கிறது. மேலும் வீடு கட்டு வதற்கு அவருக்கு பணம் கிடைக்காததால் வீடு கட்டும் பணியும் பாதியிலேயே நின்று விட்டதாம்.
இதனால் கடந்த 6 மாத காலமாக மிகுந்த மனவருத்தத்தில் இருந்த வெள்ளிங்கிரி தான் உயிருடன் இருந்து யாருக்கும் பயனில்லை. எனக்கு திரு மணமும் ஆகவில்லை. என்னால் ஒரு வீடு கூட கட்ட முடியவில்லை என தனது சகோதரியிடம் புலம்பி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சம்பவத்தன்று விஷ மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு வாந்தி எடுத்துள்ளார்.அதைக் கண்ட வெள்ளிங்கிரியின் சகோதரி ஜோதியி ன் மகன் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த வெள்ளிங்கிரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.






