என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை
    X

    பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை

    • பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஈரோடு,

    ஈரோடு அடுத்த ஆர்.என்.புதூர் மாயபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 38). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோகனசுந்தரத்தின் மனைவி கணவரைப் பிரிந்து மகனுடன் சென்று விட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று மோகனசுந்தரம் பெருமாள் மலை மண் கரட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சு மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகனசுந்தரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    Next Story
    ×