என் மலர்
நீங்கள் தேடியது "Liquor seller arrested in"
- அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டிருந்த செந்தில் முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செல்லச்சாமி மகன் செந்தில் முருகன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைபோல் ஹாசனூர், ஈ.செட்டிபாளையம் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மது அருந்திய குற்றத்திற்காக வட மாநிலத்தை சேர்ந்த பிதான் குமார், ஈ.செட்டிபாளையம் தங்கராசு (36) பழையசூரிபாளையம் அருள்குமார் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






